Published:Updated:

“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''
பிரீமியம் ஸ்டோரி
“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

Published:Updated:
“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''
பிரீமியம் ஸ்டோரி
“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

``யாரிடமாவது ரொம்பக் கொடிய நோய் எதுன்னு கேட்டா கேன்சர்னு சொல்லுவாங்க. ஆனா கேன்சரைவிடக் கொடுமையானது பசி. கேன்சரைப் பற்றிப்பேசுற நாம பசி குறித்துப் பேசுறது இல்ல!'' -நிதானமாகப் பேசுகிறார் ஸ்நேகா மோகன் தாஸ். ஃபேஸ்புக்கில் `food bank-chennai' page மூலமாக சாப்பாடு இல்லாமல் பசியால் இருப்பவர்களுக்காகத் தம் நண்பர்களுடன் இணைந்து உணவளித்து வருகின்றார்.

“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

``உங்களைப் பற்றியும்  food bank-chennai  பின்னணி குறித்தும் சொல்லுங்களேன்...''

``எத்திராஜ் காலேஜ்ல விஸ்காம் முடிச்ச சென்னை பொண்ணு நான். வாரந்தோறும் வியாழக்கிழமை கோவிலுக்குப் போறப்ப யாராவது யாசகம் கேட்டாங்கன்னா காசு கொடுக்கத் தோணுனது இல்ல. சாப்பாடு வாங்கிக் கொடுத்துருவேன். அப்போ இவங்களுக்கு நாம வாங்கிக் கொடுத்துருவோம், இவங்க மாதிரி எவ்வளவோ பேரு இருப்பாங்க. அதே மாதிரி நம்மளைப்போல கொடுக்கணும் நினைக்கிறவுங்க எவ்ளோ பேரு இருப்பாங்க. ரெண்டையும் ஒண்ணா இணைக்கணும்னு முடிவு பண்ணித்தான் `food bank-chennai'னு ஃபேஸ்புக்ல ஒரு குரூப் ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்தில எதிர்வினைகள் வந்துச்சு. ஒருத்தருக்கு உதவி பண்ணுனா  போட்டோ பிடிச்சு ஃபேஸ்புக்ல லைக் வாங்குறதுக்காக போடுறாங்கன்னு.வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியக்கூடாதுன்னு சொல்றதெல்லாம் அந்தக் காலம். நாம ஒரு நல்ல விஷயம் பண்ணுனா அதைப் பார்த்து இன்னொருத்தரும் அதை முன்னெடுக்குறதுக்காக இதை செஞ்சுத்தான் ஆகணும். அது தப்பு இல்லைன்னு தோணுச்சு. அதுக்கேத்த மாதிரியே அந்த குரூப்ல நிறைய நண்பர்கள் சேர ஆரம்பிச்சாங்க. இப்போ சென்னை, புனே, ஹைதராபாத்னு 18 இடங்கள்ல இயங்கிட்டு இருக்காங்க.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

``உங்களோட தீம் என்ன?''

``சென்னைல வேலை பார்க்குறதுக்கு மட்டும் பன்னிெண்டு வாட்ஸ் அப் குரூப் இருக்கு. ஒரு குரூப்ல முப்பது பேருவரை இருப்பாங்க. அதுல ஒரு இருபது பேரு ஆக்டிவா இருப்பாங்க. இப்போ நீங்க அண்ணா நகர்ல இருக்கீங்கன்னா அந்த ஏரியா, அதைச் சுற்றி இருக்குவங்கள இணைச்சு ஒரு குரூப். வாரத்துல ஒருநாள் உங்க வீட்டுல சமைக்கிறப்ப ஒரு ஆளுக்கு எக்ஸ்ட்ரா சமைச்சுக் கொடுக்கணும். அந்த சாப்பாட்டை மொத்தமா சேகரிச்சு அந்த ஏரியாவுல சாப்பாடு தேவை உள்ள கவனிப்பாரற்று இருப்பவங்களுக்குக் கொண்டு போயி சேர்த்துருவோம்.''

``இப்போ deposit for hungryனு ஆரம்பிச்சுருக்கீங்களே... அது என்ன?''

``ஆமா, சமீபத்துல புதுச்சேரி கவர்னர்தான் துவக்கி வெச்சாங்க. அதாவது இங்க உள்ள ஓட்டல்ல டொனேஷன் பாக்ஸ் வெச்சுருவோம். அதுல நீங்க பணம் போடணும்னு அவசியம் இல்ல. பணத்துக்குப் பதிலா ஒரு சாப்பாட்டு டோக்கன் வாங்கி அந்த பாக்ஸ்ல போட்டா போதும்.  எங்க வாலண்ட்டியர்ஸ் மொத்தமா அந்த டோக்கனுக்கு சாப்பாடு வாங்கி, சாப்பாடு தேவைப்படுறவுங்களுக்குக் கொண்டு போயி சேர்ந்துருவாங்க.''

``இது ஒரு பரபரப்பான வேலை. ஆட்கள் இருக்காங்களா?''

``இந்த `deposit for hungry' திட்டம் இப்போதான் மூணு ஓட்டல்ல ஆரம்பிச்சிருக்கோம். நிறைய இடங்கள்ல செயல்படுத்த ஓட்டல்காரங்க ரெடியா இருக்காங்க. ஆனா வாலண்டியர்ஸ் கம்மியா இருக்காங்க. விருப்பம் இருக்குறவங்க ஃபேஸ்புக் பேஜ் மூலமாவும், 9841439446, 994455929 இந்த நம்பர் மூலமாவும் இணைஞ்சுக்கலாம்.''

“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

``வீட்டுல என்ன சொல்றாங்க. நீங்க சிங்கிள், கல்யாணத்துக்குப் பிறகும் இத தொடர முடியும்னு நெனைக்கிறீங்களா?''

``வீட்டுல பெரிய அளவுல எல்லாம் எதிர்ப்பு இல்ல. வழக்கமா பண்றத ஃப்ரெண்ஸோட சேர்ந்து பண்றானு விட்டுட்டாங்க. கல்யாணத்துக்கு அப்றமும் இது தொடரணும் அதான் என்னோட விருப்பமும். அதுக்கேத்த மாதிரி தான் பார்ட்னரும்னு வீட்டுல சொல்லியிருக்காங்க. ஸோ நோ கவலை.''

``எப்படி இருக்கு இந்த அனுபவம்?''

``சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்கிட்ட பார்வை இல்லாதங்க இருக்காங்க. அங்க அப்பாஸ்னு ஒருத்தர் இருப்பாரு. ஒரு வாலண்டியர் எனக்குப் பொறந்தநாள்னு சொல்லிருப்பாங்க போல. போன் பண்ணுனவர், `ஒரு முக்கியமான விஷயம் ஸ்நேகா, சைதாப்பேட்டை வரமுடியுமா'னு கேட்டாங்க. அங்கே போனா என்னைச் சுத்தி இருபது பேரு. இவரே சொந்தமா பாட்டு எழுதி கம்போஸ் பண்ணி பிறந்தநாள் பரிசா வாசிச்சு காமிச்சார். சந்தோஷம்னா அதான்!''

- ந.புஹாரி ராஜா, படங்கள்: பா.காளிமுத்து