
`இன்செப்ஷன்' திரைப்படத்தைப் பார்க்கும்போது இயல்புக்கு மீறிய சில விஷயங்களைப்போல், நமக்கு வரும் கனவுகளையும் கட்டுப்படுத்தி நமக்கு ஏற்றபடி வடிவமைத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா? அப்போ இது உங்களுக்குத்தான். நமக்கு வரும் பயங்கரமான கனவுகளை நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொண்டால் செம்மையா இருக்குமே என ரூம் போட்டு யோசித்துக் களமிறங்கியிருக்கிறார்கள், கனவுகளைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் குழுவினர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மூளையின் செயல்பாட்டைக் கணக்கிட்டுப் பதிவிடும் எலெக்ட்ரோ என்செபலோகிராம் எனப்படும் EEG தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கனவினைக் கட்டுப்படுத்தலாம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வயர்லெஸ் புளூடூத் மூலம் மொபைல்போனுடன் இணைக்கப்பட்ட
`ஐ-பேண்டு +' எனப்படும் இந்தக் கருவி, மூளையின் அலைகளைத் துல்லியமாக அளவிட்டுக் குறிப்பிட்ட சென்ஸார்களின் மூலம் நமக்கு ஏற்படும் கனவுகளை நாமே வடிவமைக்கலாம் எனச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். லேமன்ஸ் விதியின்படி, நமது முந்தைய உறக்க நிகழ்வுகளைக்கொண்டு அதன் அதிர்வுகளைப் பதிவுசெய்து அதனை ஒப்பிட்டு நல்ல தெளிவான கனவுகளைத் தூண்டி நமது உடல்நிலையையும் சீராக வைத்திருக்க உதவுகிறதாம் இந்த டிரீம் பேண்டு.
கனவுகளைக் கட்டுப்படுத்தி உங்கள் மனநிலைக்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்வதற்கு நீங்கள் கனவு நிலையில் இருப்பதை முதலில் உணர்ந்திருக்க வேண்டும். அதற்கு இந்த `ஐ-பேண்டு +' உதவும் என்கின்றனர், இதை உருவாக்கிய விஞ்ஞானிகள். இனிமேல், உங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு எவ்விதச் செலவும் இல்லாமல் கனவிலேயே சென்று வரலாம். உங்களுக்கு வரும் கனவு தடைப்பட்டால்கூட இந்த பேண்டின் உதவியோடு அதே கனவையே அடுத்த நாளும் தொடர வைக்கலாமாம்.

`கனவே கனவே கலைவதேனோ...'ன்னு இனிமே பாடத் தேவையில்லை. ஒரு டிரீம் பேண்டு வாங்கிட்டாப் போச்சு!
- விக்கி