Published:Updated:

“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”

“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”
பிரீமியம் ஸ்டோரி
“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”

“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”

“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”

“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”

Published:Updated:
“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”
பிரீமியம் ஸ்டோரி
“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”

பெங்களூரைச் சேர்ந்தவர் மிர்ணாலினி. டப்ஸ்மாஷ் பிரபலம். `ஹா ஹா ஹாசினி...' என ஜெனிலியா ஸ்டைலில் இவர் பேசி வெளியிட்ட டப்ஸ்மாஷுக்கு இணையத்தில் மாஸ் ரெஸ்பான்ஸ். இதனாலேயே, மிர்ணாலினிக்கு ரசிகர்களும் ஏராளம்!

“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”

``பிறந்தது பாண்டிச்சேரி. இப்போ பெங்களூர்ல இருக்கேன். இன்ஜினீயரிங் முடிச்சு, ரெண்டு மாசம்தான் ஆகுது. ஐ.டி. கம்பெனியில வேலை. வேலைக்கு இடையில ரிலாக்ஸுக்காகப் பண்ண ஆரம்பிச்சதுதான் டப்ஸ்மாஷ். அதுக்குள்ள இவ்வளவு ரசிகர்கள் எனக்குக் கிடைப்பாங்கனு கனவுலகூட நினைக்கலைங்க! பேஸிக்கா, எனக்கு நடிப்புல ஆர்வம் அதிகம். நல்லா டான்ஸும் பண்ணுவேன். முதல் முதலா, `கண்டேன் காதலை' படத்துல தமன்னா பேசுன `எனக்கு நான்தான் ராணி. இந்த உலகத்துலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச பொண்ணு நான்தான்'ங்கிற வசனத்தை டப்ஸ்மாஷ் பண்ணேன். ஃபிரெண்ட்ஸ், வீட்டுல இருக்கிறவங்க, சொந்தக்காரங்க எல்லோருமே பாராட்டுனாங்க. போதாதா? அப்படியே அடிக்கடி டப்ஸ்மாஷ்ல புகுந்து விளையாடினேன். இதோ, டைம்பாஸ் பேட்டி வரைக்கும் வந்தாச்சு!'' அட்டகாசமாக அறிமுகம் கொடுத்தார் மிர்ணாலினி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தமிழ்சினிமாவுல நடிக்கிறதுக்கும் நிறைய வாய்ப்பு வருது. சில முன்னணி இயக்குநர்களும் அவங்களோட படத்துல நடிக்கக் கேட்டிருக்காங்க. ஆனா, எனக்குக் கொஞ்சம் தயக்கம். தவிர்த்துக்கிட்டு இருக்கேன். ஏன்னா, எங்க குடும்பத்துல இதுவரை யாருமே சினிமா பக்கம் போனதில்லை. அதனால, அம்மாவுக்கு பயம். ஆனா, நான் நடிக்க ஆர்வமாதான் இருக்கேன். அம்மாவோட பயத்தையும், என்னோட தயக்கத்தையும் முதல்ல மாத்தணும். அதனால, சினிமாவுல நடிப்பேனா, இல்லையானு சொல்லத் தெரியலை'' என்றவரிடம், உங்க டப்ஸ்மாஷுக்குக் கிடைச்ச மறக்கமுடியாத பாராட்டு என்ன என்றேன்.

“சினிமா வாய்ப்பு நிறைய வருது!”

`` `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துல இருந்து ஒரு டப்ஸ்மாஷ் பண்ணேன். த்ரிஷா மேடம் அதைப் பார்த்துட்டு, ட்விட்டர்ல பாராட்டியிருந்தாங்க. அதேமாதிரி, இயக்குநர் பார்த்திபன் சார் ஒரு டப்ஸ்மாஷைப் பார்த்துட்டு `ரொம்ப நல்லா பண்றம்மா... உன்னோட லிப் சிங்க் ரொம்ப நல்லா இருக்கு!'னு என்கரேஜ் பண்ணார். சிலப் பசங்க, என்னோட டப்ஸ்மாஷை மிக்ஸ் பண்ணி டூயட் பாடுறாங்க. அதுல, சிலர் பண்றது ரொம்ப நல்லா இருக்கும். நானே அதை ரசிச்சுப் பார்ப்பேன். சிலர் பண்றது என்னை ஓவரா கலாய்க்கிற மாதிரி இருக்கும். சமூக வலைதளங்கள்ல இதெல்லாம் சகஜம். அதனால, பெருசா எடுத்துக்கிறதில்லை'' என்ற மிர்ணாலினிக்கு, தார்மிக் லீ, ராகுல் கண்ணனின் டப்ஸ்மாஷ் எல்லாம் ரொம்பப் பிடிக்குமாம்.

`டப்ஸ்மாஷ் பிரபலம் ஆயிட்டதுனால, நிறைய ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வருதுங்க. சமாளிக்கமுடியாம, டப்ஸ்மாஷ் ரிலீஸ் பண்றதுக்காகவே தனியா ஒரு ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிச்சுட்டேன். என்ன பண்றது, இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்கலையே'' எனச் சிரித்து விடைபெற்றார் மிரு.

- ஜூல்ஃபி
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism