Published:Updated:

டெக்மோரா

டெக்மோரா
பிரீமியம் ஸ்டோரி
டெக்மோரா

டெக்மோரா

டெக்மோரா

டெக்மோரா

Published:Updated:
டெக்மோரா
பிரீமியம் ஸ்டோரி
டெக்மோரா

`ஆபிஸ் நேரத்துல எப்பப் பாரு ஃபேஸ்புக்'னு திட்டு வாங்குறவங்களுக்கு செம கெத்தா ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்காரு நம்ம மார்க்... அது தான் ஃபேஸ்புக் வொர்க் ப்ளேஸ். நம்ம ஃபேஸ்புக்ல இருக்குற எல்லா விஷயங்களும் இதுல இருக்கும். ஆனா இது நம்ம ஃபேஸ்புக் ப்ரோஃபைல் இல்ல! பின்ன?

டெக்மோரா

ஆபீஸ்ல உள்ள எல்லா பணியாளர்களையும் ஒரே ஃபேஸ்புக் பக்கத்தில் இணைக்கும் இந்தப் புதிய வசதியைத்தான் `ஃபேஸ்புக் வொர்க் பிளேஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. அலுவலகத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பக்கத்தின் கீழ் இணைத்தும், அலுவலக வேலைகளை 100% வெளிப்படைத் தன்மையுடனும் செய்து முடிக்க இந்தப் பக்கம் எளிதாக இருக்கும். உதாரணமாக ஒரு ஐ.டி நிறுவனம் இந்த வசதியை அறிமுகம் செய்கிறது என்றால், அதன் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்குள் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு எளிதாக வேலைகளை முடிக்க முடியும். மற்ற பிரிவுகளில் உள்ளவர்களுடன் தனியாகவும், மற்ற குழுக்களுடனும் கருத்துக்களைப் புகைப்படங்களை, ஃபைல்களைப் பகிர்ந்து கொள்ளமுடியும். அதாவது, ஒட்டுமொத்த அலுவலகமும் ஒரே ஃபேஸ்புக் பக்கத்தில் அடங்கிவிடும். இன்னும் சொல்லப்போனால் சென்னையில் உள்ள அலுவலகத்தில் உள்ளவரும் திருச்சியில் அதன் கிளை அலுவலகத்தில் உள்ளவரும் `ஃபேஸ்புக் வொர்க் பிளேஸ்' மூலம் ஒரே அலுவலகத்தில் இருக்கும் ஃபீலிங்கை உணரலாம்.

தவிர, இது நமது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதில் விளம்பரங்கள் இருக்காது. இதன் மூலம் உங்கள் அலுவலகப் பணியாளர்களோடு மட்டுமே தொடர்பில் இருக்க முடியும். பணியாளர்களின் வேலைத்திறன் கூடுவதுடன், அவர்கள் நிபுணத்துவம் பெறவும் இது உதவுகிறது. இதனை முதற்கட்டமாக 3 மாத இலவச சேவையாக ஃபேஸ்புக் வழங்கியுள்ளது. இதில் குறிபிட்ட அளவு உறுப்பினர்கள், குறிப்பிட்ட அளவு நினைவக வசதி என வழங்குகிறது. இந்த சேவை பிடித்துப்போனால் இதனை பிரீமியம் கணக்காக‌ இணைத்துக் கொள்ளமுடியும். அதற்குக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது ஃபேஸ்புக்.

ஆயிரம் பணியாளர்கள் வரை மாதத்திற்கு ஒரு பணியாளருக்கு சுமார் 200 ரூபாயும் ($3), 1000 முதல் 10,000 பணியாளர்களுக்கு ஒரு பணியாளருக்கு சுமார் 140 ரூபாயும் ($2), 10 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனத்தில் ஒரு பணியாளருக்கு சுமார் 70 ரூபாயும் ($1) வசூலிக்கிறது. இவை அனைத்தும் `ஆக்டிவ் யூசர்' எனப்படும் பயன்படுத்தும் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும், உதாரணமாக ஒரு பணியாளர் ஒரு மாதம் விடுப்பில் சென்றுள்ளார். அவரது கணக்கில் எந்தப் பதிவும் இல்லை என்றால், அவருக்குக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து சேவைகளும் இதில் உண்டு. நாம் வெளியே இருந்தாலும், ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்கள் மூலம் அலுவலகத்தோடு தொடர்பில் இருக்க முடியும். இதுதவிர, `வொர்க் ப்ளேஸ்' மூலம் தனிநபர் அல்லது ஒரு குழுவோடு வீடியோ காலிங், சாட்டிங் என அலுவலக வேலையை ஃப்ரெண்ட்லியாக அணுகலாம். அப்புறமென்ன? இனி, மேனேஜருக்கு `ஹாய் டூட்... செஞ்சுட்டேன்'னு மெசேஜ் பண்ணுங்க, பதிலுக்கு அவரும், `சூப்பர்ப்பா... 5000 இன்கிரிமென்ட்'னு ரிப்ளை பண்ணுவார்!

யார்றா அது, `வீட்டுல இருந்தே வேலை பார்க்குறேன்'னு சொல்றது???

- டெக்கி கய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism