Published:Updated:

`நான் சோம்பேறி ஜோசப்!'

`நான் சோம்பேறி ஜோசப்!'
பிரீமியம் ஸ்டோரி
`நான் சோம்பேறி ஜோசப்!'

`நான் சோம்பேறி ஜோசப்!'

`நான் சோம்பேறி ஜோசப்!'

`நான் சோம்பேறி ஜோசப்!'

Published:Updated:
`நான் சோம்பேறி ஜோசப்!'
பிரீமியம் ஸ்டோரி
`நான் சோம்பேறி ஜோசப்!'

காலையில் படுக்கையிலிருந்து எழுந்து, பல் தேய்த்து, குளித்து, உடை மாற்றவே சோம்பேறித்தனமாக பீல் ஆகும் டைப்பா பாஸ் நீங்க? அப்போ உங்களோட நம்பர்-ஒன் தோஸ்த் ஆகக்கூடிய எல்லா தகுதியும் ஒருத்தருக்குத்தான் இருக்கு. அவர், நியூசிலாந்தில் பிறந்து நியூயார்க்கில் வசித்து வரும் எடக்குமடக்கு சயின்டிஸ்ட் ‘ஜோசப் ஹெர்ஸ்செர்.’ இந்த மனுசனோட வேலையே நம்முடைய அன்றாட வேலைகளை எளிதாக்குகிறேன் என்கிற பேரில் செம்ம ஜாலியான மெஷின்களைக் கண்டுபிடிப்பதுதான். `இது என்ன பிரமாதம்? என்னோட அஞ்சு வயசிலேயே சாக்லெட் ஒளிச்சுவைக்க லாலி மெஷின் கண்டுபிடிச்சவனாக்கும்’ என்று வைகைப்புயல் ஸ்டைலில் கிச்சுகிச்சு மூட்டுகிறார் ஜோசப்.

`நான் சோம்பேறி ஜோசப்!'

சோம்பேறித்தனத்தின் உச்சகட்டத்தில் உபயோகிக்கும் வகையிலான இந்த மெஷின்களைக் கண்டுபிடிக்க ஜோசப் செலவழித்த நேரத்தில், நாலு பாட்டு, எட்டு பைட் சீன் வச்சு ஒரு படத்தையே முடிச்சிடலாம்.

கொஞ்சம் டைம் வேஸ்ட் செய்து இதைப் படித்தீர்கள் என்றால் நீங்களே ‘வாவ்..! வாட்ட இன்வென்ஷன்’ என்று ஜோசப்பிற்குக் கை கொடுப்பீர்கள். ‘செயின் ரியாக்‌ஷன்’ என்னும் கான்செப்ட்தான் இவருடைய எல்லா காம்ப்ளிகேட் மெஷின்களுக்கும் ஸ்டார்ட்டிங் பாயக்ன்ட்... நாலு பால், புத்தகம், நூல், கிழிஞ்ச துணி என்று இந்த மெஷின்களுக்கு இவர் யூஸ் செய்திருக்கும் எல்லா பொருட்களுமே ‘பக்கா மாஸ்!’

அட... ஓவரா பில்டப் பண்ணாம அப்படி என்னத்த கிழிச்சுருக்கார் என்று கேட்பவர்களுக்குத்தான் சோம்பேறி ஜோசப் கண்டுபிடித்த `டகால்டி மெஷின்'களின் அணிவகுப்பு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`நான் சோம்பேறி ஜோசப்!'

`பல்லு தேய்க்கலாம் வாங்க’ மெஷின்: இதற்குத் தேவையான பொருட்கள்... ஒரு பெண்டுலம் வாட்ச், பிரஷ், பூட்டு, சாவி. டூத் பிரஷை பெண்டுலத்தில் கட்டி, கடிகாரத்தைத் தலையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சங்கிலியால் கடிகாரத்தை இழுத்து கழுத்தில் கட்டிப் பூட்டுப் போட்டு பூட்டிக்கொள்ளுங்கள். 2 நிமிஷம் பல்தேய்த்து முடித்ததும், வெளியில் வந்து கூவும் குயிலிடம் சாவி இருக்கும்...எடுத்து பூட்டைத் திறந்து கொள்ள வேண்டியதுதான். கேட்கறப்போவே 18வது மாடியில் இருந்து குதிச்சிடலாம் போலருக்குதானே?

`எழுப்பி விடுறா ஏழரை மண்டையா’ மெஷின்: வீட்டுக்குள்ள ஒருமாதிரி, வெளியிடங்களுக்கு ஒருமாதிரின்னு இதில் டூ டைப்ஸ் கண்டுபிடித்து வைத்திருக்கிறார் ஜோசப். வெளியில் சென்றால், மண்டைக்கு மேல் ஒரு கொண்டை மாதிரி வாக்குவம் டியூப் வைத்துக்  கயிற்றால் கட்டிக் கொள்கிறார் அண்ணாத்த. அவரை அங்கிட்டு, இங்கிட்டு சாயவிடாமல் தூங்க வைக்கிறது இந்த ஸ்லீப்பிங் மெஷின். வீட்டுக்குள்ள... சொல்லியே ஆகணுமா? மூச்சு முட்டுது பாஸ். நீங்களே பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்...

`நான் சோம்பேறி ஜோசப்!'

`பேஜைத் திருப்பு’ மெஷின்: காபி கப்புக்கும், காலை பேப்பருக்கும் சம்பந்தமிருக்கா? இருக்கு என்கிறார் ஜோசப். கையிலிருக்கும் காபி கப்பில் ஒரு கயிற்றைக் கட்டி அதை ஒரு பென்சிலுடன் இணைத்து வைத்திருக்கிறார். அந்த பென்சில் கீழே விழுந்து, அது ஒரு கப்பைக் கவிழ்த்து, அடுப்பு ஒன்றை எரிய வைத்து, அது நாலு புத்தகங்களைக் கீழே தள்ளி... ஸ்ஸ்ஸ் முடியலை.. இந்த ரணகள ரகளைகள் எல்லாம் எதற்கு என்று பார்த்தால், படித்துக்கொண்டிருக்கும் பேப்பரில் ரெண்டாவது பேக்த் திருப்பறதுக்காம்.

போனவருஷத்தில் இவர் வெளியிட்ட ‘ஜிவிஸ் மெஷின்ஸ்’ என்னும் யூடியூப் எபிசோட்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்ஸ். 15 மில்லியன் பார்வையாளர்களையும், 36,000 சப்ஸ்க்ரைபர்களையும் தன்னுடைய `ஜோசப்’ஸ் மெஷின்ஸ்' யூடியூப் பக்கத்தில் வைத்திருக்கிறார் ஜோசப்.

`நான் சோம்பேறி ஜோசப்!'

இவருடைய `கிச்சுக்கா புச்சுக்கா' கண்டுபிடிப்புகளின் உச்சகட்டமான ஒன்று... `ஸ்டாம்ப் ஒட்டும்’ மெஷின். வெங்காயத்தை வெட்டுப்போது வரும் கண்ணீரை ஒரு ஃபுனல் வழியாக ஸ்டாம்பில் ஊற்றி அதை லெட்டரில் ஒட்டி... தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க!
சோம்பேறி ஜோசப்பின் ரகளையான வீடியோக்களுக்கு: https://www.youtube.com/channel/UCbNvfx3rYYxEopnRGxfu53Q

- பா.விஜயலட்சுமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism