Published:Updated:

‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

Published:Updated:
‘ட்ரெண்ட்’பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘ட்ரெண்ட்’பெட்டி!

சுக்கிரன் உச்சத்தில்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

சிரிப்பழகி கீர்த்தி சுரேஷுக்கு ஒன்பது கட்டங்களிலும் உச்சம் போல! இவர் நடித்து வெளியான ‘ரெமோ’ கல்லா கட்டிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் விஜய் உடன் ‘பைரவா’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும் நடிக்கத் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வாரம் பிறந்தநாளைக் கொண்டாடிய இவருக்குப் பிறந்தநாள் பரிசாக இந்தச் செய்தி அமைந்தது. #hbdkeerthysuresh #tskheroine இந்த இரண்டு டேக்குகளும் ஒரே நாளில் ட்ரெண்ட்டில் வலம் வந்தன. உன் மேல ஒரு கண்ணு!

‘தீ’பிகா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

வின் டீசல் உடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஜோடி சேர்ந்துள்ள ‘xXx: Return of Xander Cage’ ஹாலிவுட் படத்தைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்து வந்தன. இந்நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இந்த ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் ஸ்லிம் பியூட்டி தீபிகா. இந்திய திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில் தீபிகா நனைந்ததில், ட்ரெண்ட்டிங்கில் #DeepikaPadukone #xxxreturnofxandercage ஆகியவை இடம்பிடித்தன. இத்திரைப்படம் ஜனவரிக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகுமெனத் தெரிகிறது. வீ ஆர் வெயிட்டிங்!

சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

பாலியல் வேறுபாடு காரணமாக பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஐ.நா சபை சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தைக் கடைப்பிடிக்கிறது. இதனை அடுத்து கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் இருக்கும் மகள்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் #internationaldayofthegirlchild டேக்கில் ஆனந்த யாழை மீட்டினர். அரசியல் தலைவர்கள்ல இருந்து நெட்டிசன்ஸ் வரைக்கும் எல்லாரும் போஸ்ட் பண்ணதுல... ஃபேஸ்புக், ட்விட்டர்னு எந்தப் பக்கம் போனாலும் ஆனந்த யாழ் சத்தம்தான்.

கலாமிற்கு சலாம்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

மாணவர்களின் ஆதர்ச நாயகனான மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 85-வது பிறந்த நாள் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாள் இளைஞர்களின் எழுச்சி நாளாகவும், உலக மாணவர் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவரது நினைவிடம் அமைந்துள்ள பேய்க்கரும்பில் நினைவு மணிமண்டபம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணிகளும் இவரின் பிறந்த நாளன்று தொடங்கப்பட்டன. நெட்டிசன்களின் புகழாரத்தால் #kalamkosalaam #abdulkalam #missileman #worldstudentsday போன்ற டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட்டில் இடம்பிடித்தன. கனவு நனவாகும்!

நர்ஸ் இல்லை. பர்ஸூ பர்ஸூ!

‘ட்ரெண்ட்’பெட்டி!

ஒரு விஷயத்தை உலகமே ஒரு மாதிரி ட்ரீட்பண்ணா, அதுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாம வேற மாதிரி எடுத்துக்கிட்டுக் கொண்டாடுற சம்பவங்கள் சில நேரம் நடக்கும். எத்தனையோ பேர் தினமும் பசியால் வாடுறாங்க. அதனால உணவுப்பொருள வீணாக்கக் கூடாதுனு #WorldFoodDay கடைப்பிடிச்சா... சாப்பாட்டை வெளுத்துக்கட்டுற நாள் போலன்னு நம்ம பசங்க கொண்டாடினாங்க. இதே மாதிரி உலகப் பார்வை தினத்தை #WorldSightDay பேர்ல கொண்டாடினா, சைட் அடிக்கிறதைக் கொண்டாடுற தினம் போல டோய்னு மீம்களைத் தெறிக்க விட்டனர். ஒரே கன்ஃபியூஷனப்பா!

மீண்டும் மெகா கூட்டணி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தனுஷ் கூட்டணி இணைந்துள்ளது. தனுஷ் ஹீரோவாக, செல்வராகவன் படம் எடுக்கிறார்னு நினைச்சா... அதுதான் இல்லை. செல்வராகவன் இயக்கத்துல, எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துல வர்ற ஒரு பாடலுக்காகத்தான் இந்தக் கூட்டணி மறுபடி இணைஞ்சிருக்கு. இதை தனுஷ் ட்வீட் செஞ்சதும் மொத்த ட்விட்டரும் பத்திக்கிச்சு. #NenjamMarappathillai டேக் ட்ரெண்ட்ல நின்னு பேசிச்சு. வாவ்!

ரஷ்யாவின் ஆதரவுக்கரம்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் கலந்துகொண்ட பிரிக்ஸ் 2016 உச்சி மாநாடு இந்த முறை கோவாவில் நடைபெற்றது. இந்தியா-ரஷ்யா இடையே பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 16 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. “இந்தியா-ரஷ்யா நட்புறவு நீடிக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைக்கு ஆதரவு அளித்த, ரஷ்யாவுக்குப் பாராட்டு” என மோடி இந்த மாநாட்டில் பேசியது பாகிஸ்தானைக் கடுப்பேற்றியுள்ளது. உலகமே கவனிச்சதாலோ என்னவோ... #indiarussia டேக் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆனது. எல்லாம் சரி... கூடங்குளத்துல இன்னும் ரெண்டு அணு உலைகள் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்காமே!

- ட்ரெண்டிங் பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism