கொட்டுனா கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொட்டுமாம் அதிர்ஷ்டம். அப்படி இருக்கு இங்கிலாந்தின் வைரல் நகரத்தில் நடந்த இந்தக் கதை. கெயில் மெக்லே எனும் 51 வயதுப் பெண்மணிதான் இந்த அதிர்ஷ்டக்காரர். என்னாச்சு?

தனக்குக் கிடைத்த ஒரு புத்தம் புதிய ஐந்து பவுண்ட் நோட்டை `ஈ-பே' ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் 1,699 பவுண்டுகளுக்கு விற்றிருக்கிறார். வெறும் ஐந்து பவுண்ட் மதிப்புள்ள நோட்டை எப்படி இவ்வளவு தொகைக்கு விற்கத் தோன்றியது? `என்னம்மா... எப்படிம்மா' எனக் கேட்டால், இந்த நோட்டை வைத்து இப்படி லாபம் ஈட்டலாம் என உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஒரு டாக்ஸி டிரைவர் இந்த நோட்டைப் பார்த்துவிட்டு சிறிய அச்சுப்பிழையோடு வந்திருக்கும் (ஒரு கோடு எக்ஸ்ட்ரா வந்திருச்சாம்!) இந்த மாதிரி நோட்டு மதிப்புமிக்கது எனச் சொன்னார். அப்போதுதான் இதை விற்று கிறிஸ்துமஸ் செலவுக்குப் பயன்படுத்திக்கொண்டால் என்ன என்று யோசித்தேன். இப்போ என்னோட கிறிஸ்துமஸ் செலவுக்குத் தேவையான பணம் கிடைச்சிருச்சு' என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் மெக்லே. இவர் சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோயில் இருந்து மீண்டவர். பிளாஸ்டிக்கில் தயாராகும் இந்த நோட்டுகள் உண்மையிலேயே பலமுறை இந்த மாதிரிப் பிழைகளோடு வெளிவந்திருக்கிறதாம்! ஆனால், இந்தப் பெண் இதைச் சாதகமாகப் பயன்படுத்திச் சம்பாதித்துவிட்டார்!

வாட் எ வுமன்?

- விக்கி