சிங்காரச் சென்னையோட எல்லை செங்கல்பட்டு தாண்டி விழுப்புரம் வரைக்கும் வளர்ந்துகிட்டே போனாலும், பிடிச்சோ பிடிக்காமலோ ஆயிரக்கணக்கான பேர் இங்கே புதுசா வந்துகிட்டேதான் இருக்காங்க. ஆனா, சென்னைக் குடிமகனாக இருக்கவும் சில தகுதிகள் இருக்கு பாஸ்!

நீங்க எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் சரி. ரோட்டை கிராஸ் பண்றப்போ சிக்னல் விழுந்து உங்களை நடு ரோட்ல நிற்கவைக்கும். அதான் பாஸ் சென்னை! வில்லன் குரூப் ஆளுங்க ஏ.கே-47 வெச்சு சுட்டாலும், ஹீரோ உடம்பைத் திருப்பித் தப்பிக்கிற மாதிரி ட்ராஃபிக்ல வண்டிகளுக்கு நடுவுல நுழைஞ்சு போகக் கத்துக்கணும்.

ரெண்டு படியிலயும் தொங்கிட்டு வர்ற சென்னை மாநகரப் பேருந்துல ஏறுறதுக்கும், உள்ளே இடிபாட்டுக்குள்ள நுழைஞ்சு போறதுக்கும் ஸ்பெஷலா ட்ரெயினிங்லாம் எடுக்கத் தேவையில்லை. காலை மிதியுங்கள் வழி கிடைக்கும்!

தப்பு உங்ககிட்ட இருந்தாலும், முதல் ஆளா திட்டத் தெரியுமா உங்களுக்கு? தெரியாட்டி வெட்கமே படாம சீக்கிரம் கத்துக்கோங்க. நீங்களே போய் முன்னாடி இருக்கிற கார்ல இடிச்சாலும், முகத்தை மிளகாய் கடிச்ச மாதிரி வெச்சுக்கிட்டு... `உனக்கெல்லாம் எவன்டா லைசன்ஸ் தந்தது?'னு முறைச்சீங்கனா, முடிஞ்சது பிரச்னை!

ஹோட்டலுக்குள்ள நுழைஞ்சிட்டு, `என்னது கிரேவி தனியா ஆர்டர் பண்ணணுமா' அப்படினு உங்களுக்குள்ள இருக்கிற அந்நியன் வெளியே வருவான். ஆனா ஹோட்டல்ல எல்லோரும் தடியா இருக்கிறதைப் பார்த்ததும் அம்பியா மாறி, `லோகத்துல மனுஷாளுக்கெல்லாம் பொறுப்பே இல்லை'னு சாப்பிட்டு வரக் கத்துக்கணும்.

புதுசா ஒரு ஏரியாவுக்குப் போகும்போது, `வெறும் 8 கிலோமீட்டர் தானே! ஆக்சிலேட்டரைத் திருகினா பத்து நிமிஷம்தான் ஆகும்'னு அசால்ட்டா தூங்குனீங்கனா அப்படியே தூங்க வேண்டியதுதான். மத்த ஊர்ல ட்ராஃபிக் நடுவுல எப்பயாவது ஜாம் ஆகும். இங்க ட்ராஃபிக் ஜாம் நடுவுலதான் ட்ராஃபிக்கே.

புதுசா ஒரு ஏரியாவுக்குப் போகும்போது ஜி.பி.எஸ். சொல்ற வழியில் போவோம்னு நினைக்கிற உங்க நல்ல எண்ணம் புரியுது. ஆனா ஷார்ட் ரூட்னு முட்டுச்சந்துல போய் நிறுத்தும். அதனால, நடமாடும் ஜி.பி.எஸ்-களான ஆட்டோ டிரைவர்களிடம் அட்ரஸ் கேட்கிறதுல தப்பே இல்லை ஜி!
அப்புறமென்ன? வண்டியேறுங்க. `சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது!'

- கருப்பு