எம்ஸீ ஜாஸ் மலேசியாக்காரர். யூ-டியூப் இல்லாத சில வருஷங்களுக்கு முன்னாடியே ‘மடை திறந்து’ பாட்டோட ரீமிக்ஸ ஹிட் கொடுத்த யோகி பியோடு கலக்கியவர். தனியாக ‘கவிதை குண்டர்’ என்ற ஆல்பம் பண்ணி ரசிகர்களால் அதே அடைமொழியால் அன்போடு அழைக்கப்படுபவர். 7 வருட இடைவெளி விட்டு மறுபடியும் ‘ரிட்டர்ன் ஆஃப் த டிராகன்’னு ஒரு ஆல்பம் மூலமாக கம்-பேக் கொடுக்கக் காத்திருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``ரொம்ப நல்லாவே தமிழ் பேசுறீங்களே? ஊர், குடும்பம் பத்தி சொல்லுங்க?''

``சொந்த ஊரு நாமக்கல்தாங்க. எங்க வீட்டுல நான் மூத்த பையன். அப்பா ரிட்டயர்டு போலீஸ் ஆபிஸர். அம்மா ரிட்டையர்டு ப்ரின்ஸிபல். தாத்தாலாம் வேலைக்காக மலேசியா வர, அப்படியே நாங்களும் இங்கே செட்டில் ஆகிட்டோம். குலதெய்வம் கோவிலுக்கு வந்து கலாட்டாவா சாமி கும்புட்டுட்டுப் போவோம்.''

``சினிமா என்ட்ரி? முதல் அங்கீகாரம்?''

``முதல் முதல்ல பாராட்டுனது தனுஷ் சார்தான். அதுக்கப்பறம் அப்படியே சில சினிமா பிரபலங்களோட கவனம் எங்க மேல பட தமிழ் சினிமாக்குள்ள நுழைஞ்சாச்சு. ‘வெடி, என்னை அறிந்தால், இருமுகன்’னு சில படங்கள் உட்பட இது வரைக்கும் 18 படங்கள்ல ‘ராப்’ பண்ணியாச்சு.''

`` `கவிதை குண்டர்’க்கும் ‘ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்’க்கும் ஏன் இத்தனை வருட இடைவெளி?''

``இந்த 7 வருஷமும் மலேசியாவில் கான்செர்ட், டூர், பிசினஸ், தனி ஆல்பம்னு மலேசிய மக்களுக்காக பிஸி ஆகிட்டேன். தமிழ்ல கூட சில படங்கள்ல ராப் பண்ணினாலும் தனித்து ஒரு ஆல்பம் பண்ணல. அதான் இனி முழுசா தமிழ்ல கவனம் செலுத்துறதா முடிவு பண்ணிட்டேன்.''

``நம்ம ஊருல ஹிப்-ஹாப் கல்ச்சர் எந்த அளவுல இருக்குனு நெனைக்கிறீங்க?''

``நம்ம ஊருல ஹிப்-ஹாப் கல்ச்சர் கொஞ்சம் தப்பாதான் போய்ட்டு இருக்கு. `ராப்’ பொறுத்தவரை கலாசாரத்துக்குள்ள வாழ்ந்திருக்கணும். அப்போதான் முழுசா அந்த ஃபீல் வரும். அதை அப்படியே கொண்டு வர முடியும். யூ.எஸ்ல எல்லாம் மக்கள் தினமும் சந்திக்கிற விஷயம் அதுங்கிறதுனால ரொம்ப இயல்பா பாட்டுல ‘ஹிப் ஹாப் அண்ட் ராப்’ விஷயங்களைக் கொண்டு வந்துடுறாங்க.''

``ஆனா இப்போ எல்லாருமே இங்கிலிஷ் மட்டும் இல்லாம தமிழ்லயும் ‘ராப்’ எழுதிப் பாட வந்துட்டாங்களே?''

``தமிழ் ரொம்பப் பழமையான ஒரு மொழி. அதுக்கு உரிய மரியாதைக் கொடுக்கணும். அதோடு டெலிவரி பண்ற விஷயங்களும் மக்களுக்குப் போய்ச் சேர்ந்து கரெக்டா புரியுற வகைல இருக்கணும். வெறும் அடுக்குமொழியில பாடுறது மட்டும் பாட்டு இல்லை.''

``இப்போ ‘ஹிப்-ஹாப்’ல ட்ரெண்டிங் பண்ற ஹனி சிங் மற்றும் ஆதியோட பாடல்களையெல்லாம் கவனிக்கிறீங்களா?''

``ஹனி சிங் நேஷனல் லெவல்’ல நல்லா பண்றார். ஹிந்தி ஹிப்-ஹாப்புக்குஅவர் பண்றது கரெக்ட்டா இருக்கு. ஆதியைப் பொறுத்தவரை ஹிப்-ஹாப் விஷயங்கள் அவரோட பாடல்கள்ல கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு. இன்னும் நல்லா பண்ணலாம்.''

``வருங்கால புராஜெக்ட்ஸ்?''

‘ரிட்டர்ன் ஆப் தி டிராகன்’ பெரிய புராஜக்ட்தான். பெரிய ‘கம்-பேக்’கா இருக்கணும்னு பவர்புல்லா பண்ணிருக்கேன். இனிமேல் முழுசா சென்னைதான். `சென்னை டு சிங்கப்பூர்’னு ஜிப்ரான் இசைல ஒரு படத்துல வில்லனா நடிக்கிறேன். அப்படியே ‘அண்ணனுக்கு ஜே’னு ஒரு படம் இருக்கு. கம்போஸர், வில்லன்னு விதவிதமா களத்துல இறங்கப் போறேன்''

தம்ஸ்-அப் சொல்கிறார் கவிதை குண்டர்.

-லோ.இந்து