சோசியல் மீடியா வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் இல்லை என சமீபகாலமாகப் பல சம்பவங்கள் அங்குமிங்கும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்து கண்கள் பனிக்க இதயம் இனிக்க வைத்திருக்கிறது ஒரு செய்தி.

வசதிபடைத்த குழந்தைகள் மட்டுமே உபயோகிக்கக்கூடிய வகையில் சமீபத்தில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் `ரிச் கிட்ஸ்' என்கிற ஒரு `ஆப்'. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் மட்டுமே தரவிறக்கி உபயோகிக்கக்கூடிய வகையில் காஸ்ட்லியாக உருவாக்கப்பட்டிருக்கும் இதில் விதவிதமான போட்டோக்களை அப்லோட் செய்து மகிழலாம், போட்டோக்களைப் பார்த்து ரசிக்கலாம். ஆனால் இதற்காக அவர்கள் வசூலிக்கும் தொகை மட்டும் மாதத்திற்கு ஆயிரம் டாலர். என்னது! போட்டோ பாக்க காசா, புதுசா இருக்கே... என மனதில் தோன்ற,

`இலவசமாகவே நிறைய அப்ளிகேஷன்கள் ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எதற்காக இப்படி ஒரு திட்டம்' என்று ரிச் கிட்ஸின் தலைமைச் செயல் அதிகாரி ஜுராஜ் இவான்னிடம் கேட்டால், ``இது சோசியல் ஆப் என்பதைத் தாண்டி ஒரு சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்டது. முழுக்க பணவசதி படைத்த உறுப்பினர்கள் மட்டுமே இதில் இயங்குகிறார்கள்.

அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காக இருந்தாலும் அவர்களுக்கே தெரியாமல் பலருக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆம், இதிலிருந்து வரும் பணத்தை ஏழைக்குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடுகின்றது ரிச் கிட்ஸ்'' என்கிறார் பெருமிதத்தோடு. வெல்கம் ப்ரோ!

- ஜெ.வி.பிரவீன்குமார்