`அட என்னங்கப்பா இது, எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதே' எனக் கண்ணைக் கசக்கிக் கேட்டால், `ஆமா பாஸ் இங்க எல்லாருக்குமே டபுள் ரோல் தான்' என ஆச்சர்யப்படவைக்கின்றனர் ரியல் இரட்டையர்கள். `குடியிருந்த கோயில்' காலத்து எம்.ஜி.ஆர் ஆகட்டும் `அதிசயப்பிறவி' ரஜினி ஆகட்டும், `கொடி' தனுஷ் வரை தமிழ் சினிமாவில் டபுள் ஆக்ஷன் படங்களில் தில்லுமுல்லுகளுக்குப் பஞ்சமே இருக்காது.

`இதுவரைக்கு எந்த டபுள் ஆக்ஷன் படத்துலயும் இரட்டையர்களோட உணர்வுகளைச் சரியா பதிவுபண்ணுனது இல்லைன்னு தோணும் . எங்கள்ல ஒரு ஆளுக்கு சந்தோஷமான சம்பவம் எதுவும் நடந்தா அது அப்படியே இரட்டிப்பா இருக்கும்.சோகமான சம்பவங்கள் நடந்தா அது அப்படியே பாதியாக மாறிடும், ஏன்னா உயிர் நண்பன் வெளில இருந்து எங்களுக்குக் கிடைக்கல. எங்க வீட்டுக்குள்ளயே கெடைச்சுருக்காங்க' என்று சொல்லும் இந்த இரட்டையர்கள் கடந்துவந்த `ரியல் லைஃப்' தில்லுமுல்லு அனுபவங்கள்...

அரவிந்த்-அருண்

``நாங்க தஞ்சாவூர் பசங்க. இப்போ சென்னையில ரியாலிட்டி ஷோ கோஆர்டினேட்டர்ஸா இருக்கோம். எனக்கு ஒரு நிழல் இருக்கு, அந்த நிழலுக்கு ஒரு உயிர் இருக்கு அப்டின்னா அது என்கூடவே பொறந்த அருண்தான். பள்ளிக்கூடம் போற வழியில சைக்கிள்ல போனாலும் சைக்கிளை ஓட்டிக்கிட்டுப் போக மாட்டோம். உருட்டிக்கிட்டே பெல் அடிச்சுக்கிட்டே `எங்கள பாருங்கடா'ன்னு சொல்லிக்கிட்டு தான் போவோம். `ச்ச்சோ'ன்னு பெய்யுற மழையிலே நனைஞ்சுக்கிட்டு 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கடைக்குப் போயி மழைக்கு ஒதுங்குவோம். கூட்டத்துல இருக்குற எல்லாரும் நம்மள பார்க்குறப்ப வித்யாசமான ஃபீல் உண்டாகும்.

நூறு பேரு இருக்கிற கூட்டத்துல ஈஸியா அடையாளப்படுத்திக்க முடியும். அருண் கொஞ்சம் அமைதி. ஆனா நான் அப்டி இல்ல, எல்லாருகிட்டயும் பேசுவேன். ஆனா பொண்ணுங்க வாயடிக்கிற பையனை ஒரு சீரியஸ் கண்ணோட்டத்தோட பார்க்க மாட்டாங்க.அருணைத்தான் ஹீரோ ரேஞ்சுக்குப் பார்ப்பாங்க, என்னய ஒரு காமெடியன் அளவுலயே வெச்சுருப்பாங்க. கஷ்டப்பட்டு நம்பர் வாங்கி மெசேஜ் அனுப்பி லவ் ப்ரோபோஸ் பண்ணலாம்னு இருப்பேன். அப்போ அந்த பொண்ணு நேர்ல பார்க்கணும்னு சொல்லுச்சு, சரின்னு இவனையும் கூட்டிப் போயிருந்தேன். நா லவ் ப்ரோபோஸ் பண்றதுக்குள்ள அந்தப் பொண்ணு என் தம்பிகிட்ட ப்ரோபோஸ் பண்ணிருச்சு. இவன் வெகுளிப்பையன், என்ன பண்ணணும்னு எங்கிட்ட கேட்டான். `அம்மாவுக்கு லவ்வெல்லாம் புடிக்காதுடா அதனால நமக்கு செட்டாகாது அருண்'னு சொல்லி பிரிச்சு விட்டுட்டேன்!'' என வில்லன் சிரிப்பைக் கடத்துகிறார் அரவிந்த்.

``நான் படிப்புல கொஞ்சம் வீக். பரீட்சை ஹால்ல உட்கார்ந்து எழுதும்போது எனக்கு ஒண்ணுமே தெரில. சரின்னு இவங்கிட்ட சைகை காமிச்சேன்.தண்ணி குடிக்கப் போறமாதிரி போனோம். அப்ப இவன் சொல்லிக்குடுத்த பதிலும் எனக்கு ஏறல. உடனே என் இடத்துல அவனும் அவன் இடத்துல நானும் உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சிட்டோம்.

எப்போவும் ஒரே ட்ரெஸ்தான். ஆரம்பத்துல ட்வின்ஸ் கண்டுபிடிக்குறது கஷ்டமா இருக்கும். நல்ல க்ளோஸா பழகிட்டா ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். ஆனா எங்களைப் பொறுத்தவரை அதுக்கு நாங்க இடம் கொடுக்கவே மாட்டோம். என்னோட ஐடி கார்டு அவனோட பர்ஸ்லயும், அவனோட லைசென்ஸ் என்னோட பர்ஸ்லயும் இருக்கும். ஸ்கூல், காலேஜ் வேலைன்னு இப்போவரை ஒண்ணாவே ட்ராவல் பண்ணிட்டு இருக்கோம். கல்யாணம் அரேஞ்ச் மேரேஜ்தான். ஆனா அந்தப் பொண்ணுங்க ட்வின்ஸா இருக்கணும்ங்கிறது அம்மாவோட ஆசை.ட்வின்ஸ் பொண்ணுங்க இருந்தா எங்க வீட்டைத் தொடர்பு கொள்ளலாம்னு இந்த டைம்பாஸ் மூலமா சொல்லிக்கிறோம்'' என முடித்தார் அருண்.

ஜெகதீஷ்-ஹரீஷ்

``நாங்க தஞ்சாவூர். சுகப்பிரசவம்னா யாரு அண்ணன் தம்பினு கண்டுபிடிச்சுரலாம்னு சொல்வாங்க. ஆனா நாங்க சிசேரியன்ல தான் பொறந்தோம். பொறந்தப்ப இருந்த எடைய வச்சுதான் அண்ணன் தம்பினு முடிவு பண்ணுனதா சொன்னாங்க'' எனச் சொல்லும் ஜெகதீஷ்தான் இரட்டைர்களில் மூத்தவர்.

``காலேஜ் வரைக்கும் ஒண்ணாதான் படிச்சோம். வேலையும் ஒரே கம்பெனிலதான் கிடைச்சது. இப்போ நான் மேற்படிப்பு படிக்கிறேன். அவன் அதே கம்பெனில வேலை பார்த்துக்கிட்டு இருக்கான்.ஸ்கூல் டைம்ல நான் அடிக்கடி லீவு போட்டுடுவேன். அதனால எனக்கு அட்டெண்டன்ஸ் கம்மியாக ஆரம்பிச்சுருச்சு. அப்போ எனக்கு பதிலா ஹரீஷ் தான் அட்டெண்டஸ் கொடுத்தான். ஏழு பீரியட் வரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியல. எட்டாவது பீரியட்ல வந்த ஒரு டீச்சர் குரலை வெச்சு கண்டுபிடிச்சு வெளுத்துட்டாங்க. இந்த மாதிரி எல்லாம் நிறைய நடந்துருக்கு.

எனக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரி ட்ரெஸ் போடணும்னு ஆசையா இருக்கும். ஆனா ஹரீஸுக்கு ரெண்டு பேருக்கும் தனித்தன்மை வேணும்னு வேற வேற ட்ரெஸ் போட ஆரம்பிச்சோம். எனக்கு சூர்யா பிடிக்கும். அவனுக்கு விஜய் பிடிக்கும். ரெண்டு படமும் ஒரே நாள்ல ரிலீஸ் ஆச்சுனா எந்தப் படத்துக்குப் போகணும்னு சண்டை வந்து எந்தப் படத்துக்குமே போகாம இருந்துருக்கோம்'' என்கிறார் ஜெகதீஷ்!

குரு ராஜன் - சீனிவாசன்

``ஊரு மதுரை. இப்போ பெங்களூர்ல வேலை பார்க்குறோம். சொந்தக்காரங்க முதல் கேள்வியே `எவன் குரு எவன் சீனிவாசன்'னுதான் கேட்பாங்க. ஸ்கூல் வரைக்கும் ஒண்ணாதான் படிச்சோம். ப்ளஸ் டூ மார்க் எங்களைப் பிரிச்சுருச்சு. ஒரே பாடத்தை வேற வேற காலேஜ்ல படிச்சோம். நான் எம் எஸ் சி எலக்ட்ரானிக்ஸ். அவன் இன்ஜினீயரிங் எலக்ட்ரானிக்ஸ்.

எனக்கு `மன்மதன்' படத்துல வர்ற கேரக்டர்ஸ் பிடிக்கும். ஒருத்தன் அமைதியா இருப்பான். இன்னொருத்தன் வேற லுக்ல இருப்பான். குரு ஷூ போட்டு இன்ஷர்ட் பண்ணி வேற லுக்ல இருப்பான். எனக்கு அது பிடிக்காது. குரு வேலை பார்க்குற இடத்துல பிரச்னை வந்தப்போ அப்போ நான் இன்ஷர்ட் பண்ணி போயி அந்தப் பிரச்னைய சரி பண்ணிட்டு வந்துருக்கேன்.''

லாவண்யா-ரம்யா

``நாங்க எட்டு மாசத்துலயே பொறந்த சென்னைப் பொண்ணுங்க. பாஸ்போர்ட் சைஸ் போட்டோகூட சமயங்கள்ல மாறி இருக்கு. ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல், ஆனா வேற வேற குரூப்.

ஒரே மாதிரி தான் ட்ரெஸ் போட்டுட்டு இருந்தோம். காலேஜ்ல எல்லாரும் குழம்ப ஆரம்பிச்சுட்டாங்க. மாத்திக்கிட்டோம். ரம்யாவுக்கு லவ் மேரேஜ் ஆச்சு. அவ லவ் பண்ண ஆரம்பிச்ச டைம்ல, அவளோட லவ்வர் அவர் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட என்னையக் காமிச்சு, `இவ தான் நான் லவ் பண்ற பொண்ணு'னு சொல்லிக்கிட்டே என்னை அறிமுகப்படுத்த வந்தாரு. எனக்கு ஒண்ணுமே புரியல. பாவம் செம்ம பல்பு அன்னிக்கு! நான்னு நெனச்சு ரம்யாகிட்ட புரொபோஸ் பண்ணுன பையனும் உண்டு. ஒருநாள் எங்கிட்ட வந்து, `என்னங்க போன வாரம் புரொபோஸ் பண்ணுனேன், பதிலே சொல்லலை'ன்னு அவன் கேட்டப்பதான் எனக்குத் தெரிஞ்சது. இது மாதிரி நெறைய நடந்துருக்கு பாஸ்'' என்கிறார் லாவண்யா.

நாராயணன்-நவநீதன்

``8-7-87ல பொறந்தோம். தேதியே செம்மையா இருக்குல்ல. ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கப் போன அம்மாவுக்கு நாங்க பொறந்துட்டதா சொல்வாங்க. ஏழரை மாசத்துல பொறந்ததால வளர்ச்சி இருக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்களாம்.

எங்களோட சிந்தனையும் ஒரே மாதிரி தான்னு நிரூபிக்கிற மாதிரி சம்பவமும் உண்டு. ரெண்டு வருஷத்துக்கு முன்னால, செங்கல்பட்டுல கல்யாணத்துக்குப் போயிருந்தோம். அங்க ஒரு பொண்ணைப் பார்த்துட்டு என் தம்பி அப்பாகிட்ட போயி `ஒரு பொண்ணு பிடிச்சுருக்கு. வீட்டுல பேசுங்கப்பா'னு சொல்லிருக்கான். எனக்கு இது தெரியாம நான் எங்க அம்மாகிட்ட அதே பொண்ண காமிச்சு `எனக்குப் பிடிச்சுருக்கு. வீட்டுல பேசுங்க'ன்னு சொன்னேன். அம்மாவும் அப்பாவும் பேசிக்கும்்போது தான் தெரியும். ரெண்டு பேரும் ஒரே பொண்ணைப் பத்தி பேசிருக்கோம்னு. இதுல சோகம் என்னன்னா அந்தப் பொண்ணுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிடுச்சு'' என்கிறார் நாராயணன்.

-ந.புஹாரி ராஜா