‘பாகுபலி’ நாயகன்!

‘பாகுபலி’யின் இரண்டாவது பாகம் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படக் குழுவில் யாருக்குப் பிறந்தநாள் என்றாலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிடுவது வழக்கம். ‘பாகுபலி’ கதாநாயகனுக்கே பிறந்த நாள் என்றால் சும்மா விடுவார்களா? நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாம் பாகத்தின் மோஷன் போஸ்டரும், 360 டிகிரியும் திருப்பிப்பார்க்கும் வகையிலான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. #HappyBirthdayPrabhas #Baahubali2FirstLook ஆகிய டேக்குகள் ட்விட்டரைக் கலக்கின. சீக்கிரம் அனுஷ்காவை இளமையா காட்டுங்க பாஸ்!

கண்ணழகா!

இணையத்தில் எவரும் புகழின் உச்சிக்குச் செல்லலாம் என்பதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் கான் உதாரணம். 18 வயதான அர்ஷத் கான், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இட்வார் பஜாரில் டீக்கடை ஒன்றில் வேலை செய்பவர். இவரைச் சந்தித்த ஜியா அலி என்னும் புகைப்படக்காரப் பெண்மணி எதேச்சையாக இவரைப் புகைப்படம் எடுத்து ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இவரின் கூர்மையான நீலநிறக் கண்கள் ஒரேநாள் இரவில் #chaiwala என்ற டேக்கில் ட்ரெண்டானது. நிருபர்களிலிருந்து, பொதுமக்கள் வரை இவரைத்தேடி கடைக்கே வர ஆரம்பித்து ஓவர்நைட்டில் புகழின் உச்சிக்கே சென்றார் அர்ஷத் கான். அப்புறமென்ன... ஒரு மாடலிங் கம்பெனி இவரைத் தங்கள் நிறுவனத்தின் மாடலாக புக் செய்யப்போவதாகத் தகவல். அடப் போங்க பாஸ்! டீக்கடை வெச்சிருந்தவர்தான் எங்க நாட்ல பிரதமரே!

தள்ளிப்போகாதே!

நடிகர் சிம்புவுக்கு நல்லகாலம் பொறந்துருக்கு போல! ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் அவர் அஸ்வின் தாத்தா என்ற முதியவர் கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரத்தில் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கெல்லாம் வருது, படம் எதுவும் வர மாட்டேங்குதே தலன்னு வருத்தப்பட்ட சிம்பு ரசிகர்களுக்காகவே, கெளதம் மேனன் இயக்கியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ட்ரெயிலரும் வெளியானது. ஒரே வாரத்தில் #AshwinThathaFirstLook #AYMTrailer என்ற இரண்டு டேக்குகளும் ட்ரெண்ட் ஆனது. ‘அச்சம் என்பது மடமையடா’ படம் நவம்பரில் வெளியாகும்னு சொல்லியிருக்காங்க. இந்த வருச நவம்பர்தான்னு நம்புவோமாக!

அஜித்தின் வில்லன்!

இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், அஜித்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் பலரது பெயரும் அடிபட்டது. கடைசியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தச் செய்தி வெளியானதும் ட்விட்டர் பரபரப்பானது. ‘தல’ ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் #vivekoberoibaddieinak57 டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இதுலேயும் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்லதான் தல வர்றாரா?

இந்தியா மீண்டும் சாம்பியன்!

சர்வதேசக் கபடி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் உலகக்கோப்பை கபடிப்போட்டியில், இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. அஹமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஈரான் அணியும் மோதின. முதல் பாதியில் வலுவாக இருந்த ஈரானை, இந்திய அணி இரண்டாம் பாதியில் தகர்த்தது. இறுதியில் 38-29 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது இந்திய அணி. பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததை அடுத்து #ajaythakur #worldcupkabaddi #kabbadiworldcup2016 #worldchampions #indiankabadditeam #kabbadi #kwc2016 போன்ற டேக்குகள் ட்ரெண்ட் அடித்தன. வாவ்!

சர்ச்சை - சாதனை - மீண்டும் சர்ச்சை!

உருகுவே நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ், கடந்த சீசனில் 40 கோல்கள் அடித்ததன் மூலம் ஐரோப்பிய தங்கக் காலணி விருதை வென்றுள்ளார். உலகக்கோப்பை லீக் போட்டியில் எதிரணி வீரரைக் கடித்ததால், ரெட் கார்டு வாங்கி சர்ச்சை நாயகனாக வலம் வந்த இவர், அதன்பின்னர் அசரடிக்கும் வகையில் கோல்கள் அடித்து சாதனை நாயகனாக மாறியுள்ளார். இந்நிலையில் ‘அதிக கோல்கள் அடித்ததற்காக தங்கக் காலணி விருதை வாங்கிவிட்டேன். இதை என்னிடமிருந்து யாரும் தட்டிப்பறிக்க முடியாது. ஆனால் தங்களை விளம்பரப்படுத்தத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தங்கப் பந்து (பால்லோன் டி’ஆர்) விருது கிடைக்கும். அந்தத் தகுதி எனக்கில்லை’ என்ற இவரது ஸ்டேட்மென்ட் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. #Suarez பெயர் உலக அளவிலான ட்ரெண்டில் வலம் வந்தது. பத்த வெச்சுட்டியே பரட்ட!

மன்னிப்புக் கேட்ட பாண்ட்!

ஜேம்ஸ் பாண்ட் புகழ் பியர்ஸ் பிராஸ்னன் சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ‘பான்’ நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தது சர்ச்சைக்குள்ளானது. சோசியல் மீடியா முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்த விளம்பரம் ஹாட் டாபிக் ஆனது. இந்நிலையில் இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக பிராஸ்னன் மன்னிப்புக் கேட்டுள்ளார். தன்னிடம் ‘breath freshener/tooth whitener’ என்று சொல்லி நடிக்கவைத்ததாகவும், பான் விளம்பரம் என்றால் நடித்திருக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். தன்னுடைய முதல் மனைவி மற்றும் ஒரு மகனை புற்றுநோய்க்குப் பறிகொடுத்ததை நினைவுகூர்ந்ததோடு, `புற்றுநோயை ஏற்படுத்தும் எதையும் ஊக்குவிக்கப்போவதில்லை' என்று அறிவித்துள்ளார். பான் பஹர் நிறுவனத்தின் விளம்பரத்தூதர் ஒப்பந்தத்தையும் திரும்பப்பெற்றதன் மூலம், ட்விட்டர் முழுக்க #Jamesbond ட்வீட்கள் நிரம்பின. நல்ல விஷயம்!

உலக போலியோ தினம்!

போலியோ என்னும் இளம்பிள்ளைவாதம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-ம் தேதி, உலக சுகாதார நிறுவனத்தால் உலக போலியோ தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பாகிஸ்தான் போன்ற தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் மட்டும் இன்னும் போலியோவின் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. போலியோ அற்ற நாடாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அறிவிக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் போலியோ பாதிப்புகள் நீங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நெட்டிசன்ஸ் #WorldPolioDay டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கினர். கலக்கல் பாஸ்!

- ட்ரெண்டிங் பாண்டி