பிரீமியம் ஸ்டோரி

``இன்றைய பெண்கள் விதம்விதமாக ஹேர்கட் செய்து, தினம் ஒரு ஸ்டைலில் கலக்கினாலும், திருமணத்துக்கு அவர்கள் டிக் செய்வது, நம் பாரம்பர்ய ஜடை அலங்காரத் தைத்தான். அவர்களின் ரசனைக்கு ஈடுகொடுக்கும் விதமாக, இன்று ஜடை அலங்காரங்களில் ஏகப்பட்ட ரகங்கள்  வந்துவிட்டன’’ என்கிறார் சென்னையில் உள்ள ‘பார்ட்டி பெட்டல்ஸ்’ உரிமையாளர் ஜீவா.

ஜடை அலங்காரம்!
ஜடை அலங்காரம்!
ஜடை அலங்காரம்!
ஜடை அலங்காரம்!
ஜடை அலங்காரம்!

``நான் இந்த பிசினஸை பொழுது போக்காகத்தான் ஆரம்பித்தேன். ஆனால், மக்களிடம் இதற்குள்ள வரவேற்பு மற்றும் இதில் கிடைக்கும் லாபத்தைக் கண்டு, இதை தொழிலாகவே செய்ய ஆரம்பித்துவிட்டேன். நிச்சயம், ரிசப்ஷன், முகூர்த்தம் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் வெவ்வேறு வகைகளில் ஜடை ரகங்கள் தயார் செய்கிறேன். அனைத்துக்கும் இயற்கைப் பூக்களை மட்டுமே பயன்படுத்துவது, எங்கள் கடையின் சிறப்பு. புடவையின் நிறம் மற்றும் டிசைனுக்கு மேட்சிங்காக ஜடையை வடிவமைப்பதுதான் இதில் உள்ள சுவாரஸ்யமான சவால். இதுபோன்ற டிசைனர் ஜடைகளை பிரத்யேகமாக தயாரிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால், குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்னதாக ஆர்டர் கொடுக்க வேண்டியது முக்கியம். ஜடைகள் குறைந்தபட்சமாக 1,000 ரூபாயில் இருந்து கிடைக்கும். உபயோகிக்கும் பூக்கள் மற்றும் வடிவமைப்புக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்’’ என்கிறார் ஜீவா.

- சு.சூர்யா கோமதி
படங்கள்: எம்.உசேன்
படம்: ஃபோகஸ் ஸ்டூடியோஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு