Published:Updated:

புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!
புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!

அலங்காரம்

பிரீமியம் ஸ்டோரி
புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!

திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என திருமணம் சார்ந்த அனைத்து சுப நிகழ்வுகள் நடைபெறும் மண்டபங்களிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம் விருந்தினர்கள் அனைவரையும் வாசலில் இருந்தே வரவேற்கிறது ஃப்ளவர் டெகரேஷன். ஃப்ளவர் டெகரேஷனில் உள்ள  இன்றைய ட்ரெண்ட் பற்றி பேசுகிறார்கள் சும்யோக் (sumyog) வெடிங் பிளானரின் உரிமையாளர்களும், இத்துறையில் பத்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களுமான ரேகா ரங்கராஜ் மற்றும் வித்யா சிங்.

“முன்பெல்லாம் கல்யாண வீடுகளில் பெரும்பாலும் மல்லிகைப்பூ, சாமந்திப்பூவைக் கொண்டு அலங்காரம் செய்திருப்பார்கள். ஆனால், தற்போது ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப குறைந்த விலையில் துவங்கி அதிக விலை கொண்ட மலர் அலங்காரங்களினால் மண்டபத்தின் அழகைக்கூட்டி, விருந்தினர்களின் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்கின்றனர்” என பேசத் துவங்கினார் ரேகா ரங்கராஜ். ‘‘பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எங்கேயும் பார்த்திராத வித்தியாசமான வண்ணங்களிலும், வடிவங்களிலும் ஃப்ளவர் டெகரேஷன் செய்து தரும்படி கேட்கிறார்கள். அதோடு எங்களிடம் வரும்போதே, ஐடியாக்களுக்காக நிறைய போட்டோ கலெக்‌ஷன், கொண்டுவர்றாங்க. அதோடு சேர்த்து தேவைக்கேற்ப எங்க ஐடியாவை சொல்வோம். இறுதியாக கல்யாண மண்டபத்தின் அமைப்புக்கு ஏற்ற வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான பூக்களை வரவழைப்போம். காலையில் நடைபெறும் தாலி கட்டும் வைபவம் மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சி என ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனிப்பட்ட முறையிலான மலர் அலங்காரங்களை செய்துகொடுக்கிறோம்.

புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!
புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!

மண்டபத்தின் லைட் அலங்காரத் துக்கு ஏற்ற வகையில் பூக்களை ஒவ்வொரு பகுதியிலும் கட்டி, அலங்காரம் செய்து அவற்றின்மீது வெளிச்சம் படும்படியாக லைட் செட் செய்வோம். கலர் கலர் லைட்களால் பூ அலங்காரம் மிகவும் பிரமாண்டமாக தோற்றமளிக்கும். அதனால் லைட்டிங் வேலைகளுக்காகவே ஒரு இன்ஜினீயரையும், ஏராளமான ஊழியர்களையும் கொண்டு எந்த வகை மலர்களுக்கு எந்த இடத்தில் எத்தகைய லைட்டிங் அமைத்து பிரகாசப்படுத்த வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வோம். சிலர் மண்டபத்தின் சுவர்கள் முழுக்கவே பூ அலங்காரம் செய்யச் சொல்வார்கள். கஸ்டமரோட பட்ஜெட்டைப் பொறுத்து இதை செய்து கொடுக்கிறோம். குறிப்பாக கல்யாண வீட்டாரின் விருப்பத்துக்கேற்ற வெடிங் கான்செப்ட்டில், அதற்கேற்ற பூக்களைப் பயன்படுத்துவோம். உதாரணமாக, கான்செப்ட்டின் முக்கியத் தேவையாக  சாமந்திப்பூ இருந்தால், ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதமான பூக்களை பயன்படுத்தியிருந்தாலும் அவற்றில் சாமந்திப்பூதான் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். ரிசப்ஷன், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளில் ஆங்காங்கே பூ குடில்கள், சிறிய அளவிலான தோட்டம், சீலிங் பகுதியில் இருந்து கீழ்ப்பகுதியில் பூக்களை தொங்க விடுதல் போன்றவற்றின் மூலம் விருந்தினர்களின் கவனம் முழுக்க எங்களுடைய பூ வேலைப்பாடுகளின் மீது விழுமாறு செய்வோம்.

புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!
புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!

திருமண வீட்டார் அவர்களுக்குத் தேவையான பூக்களை முன்கூட்டியே எங்களுக்கு சொன்னபிறகு தேவையான பூக்களை எங்களுடைய ஏஜென்ட் களின் மூலமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வோம்” எனும் ரேகாவைத் தொடர்ந்தார் வித்யா சிங்... “காலையில் திருமணம் நடக்கிறது என்றால் முன்தினம் இரவு 12 மணியளவில் விமானம் அல்லது வாகனங்களின் மூலமாக பூக்கள் திருமண மண்டபத்துக்கு வரவழைக்கப்பட்டு விருந்தினர்களின் வருகைக்குள் பூ அலங்காரங்களை நிறைவாக செய்து முடிப்போம். பூ வேலைப்பாடுகள் அதிகமாக  இருந்தால் திருமணத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே வேலைகளை ஆரம்பித்துவிடுவோம். அலங்காரம் செய்த உடனே பூக்களின் மீது தண்ணீரைத் தெளித்துவிடுவோம். அதோடு திருமண மண்படம் முழுக்கவே ஏ.சி செட்டிங்ஸ் செய்திருப்பதால், ஒருசில நாட்கள் பூக்கள் வாடாமல் இருக்கும். காலநிலை மற்றும் மண்டபத்தினுள் இருக்கும் வெப்ப நிலையைப் பொறுத்து அவ்வப்போது பூக்களின்மீது தண்ணீர் தெளித்துக்கொண்டே இருப்போம். குறைந்தபட்சம் லட்சங்களில் துவங்கி ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப பல லட்சம் செலவிலும் அலங்காரங் கள் செய்து திருமண வீட்டாரை மகிழ்விக்கிறோம்.

புன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்!

குறிப்பாக, ஊட்டி போன்ற இடங் களில் நடைபெறும் கோடைக்கால மலர் கண்காட்சிகளின் போது அமைக்கப்படும் மலர் சிற்பங்களைப்போல, திருமண மண்டபத்தின் வரவேற்புப்பாதையிலும் விதம்விதமாக மலர் அலங்காரம் செய்து கொடுக்கிறோம். இதற்காக ஆயிரக்கணக்கான  மலர்களைக் கொண்டு செய்யக்கூடிய மலர் அலங்காரங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திழுக்கும். இத்தகைய மலர் அலங்காரங்களில் மல்லிகைப்பூ, சம்பங்கி என வாசனை தரும் மலர்களையும், ஆர்கிட் (orchid), கார்னிஷ் (cornish), ஜாப்ரா (jabra) போன்ற வாசமில்லா  வகையென ஏராளமான மலர்களையும் பயன்படுத்துவோம். நிகழ்ச்சி நடந்து முடிந்ததும், திருமண வீட்டாருக்கு தேவைப்பட்டால் மலர்களை எல்லாம் அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று கொடுத்துவிடுவோம்” என முகம் மலர சொல்லி முடித்தார் வித்யா.

கல்யாண மண்டபங்களில் சந்தோஷம் தரும், மலர் அலங்காரங் களை செய்து விருந்தினரின் மனம் நிறைய மணம் பரப்பலாமே!

 - கு.ஆனந்தராஜ்
படங்கள் உதவி: ஹை-க்யூ போட்டோகிராஃபி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு