Published:Updated:

ஊசி நுழைந்தாலும் நாசி தாங்கும்!

சாகச வீரமணி

##~##

லி தரும் சாகசங்கள் மூலம் மக்களின் கவனம் ஈர்க்க முயற்சிக்கிறார் வீரமணி. பதைபதைக்க வைக்கும் இந்தச் சாகசங்கள் குறித்து அவரிடம் பேசினோம். ''இந்தச் சாகசங்களைச் செய்ய யாரும் முயற்சி பண்ணிடாதீங்க'' என்ற எச்சரிக்கையுடன் தொடங்கினார். ''தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பக்கத்துல உள்ள கோபிநாதம்பட்டி என் ஊர். விவசாயக் குடும்பம்.எஸ்.எஸ்.எல்.சி வரைதான் படிப்பு. ஏதாவது சாதிக் கணும்னு ஆசை. டி.வி -யில வர்ற சவால், சாகச நிகழ்ச்சிகளை ஒண்ணுவிடாமப் பார்ப்பேன். நாமளும் இந்த மாதிரி வித்தியா சமா ஏதாவது சாகசம் பண்ணலாமேனு தோணுச்சு. செங்கல்லைத் தலையால் உடைக்கிறது, கருங்கல்லை வயிற்றில் வெச்சு உடைக்குறதுனு பயிற்சி பண்ணினதைப் பார்த்துட்டு, 'இதெல்லாம் சாதனையா?’னு ஃப்ரெண்ட்ஸுங்க கிண்டல் பண்ணினாங்க. 'ஏதாவது பெருசா பண்ணணும்’னு தேடித் தேடி முயற்சி செஞ்சு பல சாகசங்களைப் பழகினேன்.

 'ஊசி நுழைஞ்சாலே நாசி தாங்காது’னு சொல்வாங்க. நான் மூக்கு வழியா எலெக்ட்ரிக் வயரை விட்டு வாய் வழியா வெளியே எடுப்பேன். அப்புறம் ஒரு முனை யைப் பிளெக் பாயின்டில் செருகி மறுமுனையில் பல்ப் எரியவைப்பேன். மூக்கு வழியா அசராமல் அரை லிட்டர் குளிர்பானத்தைக் குடிப்பேன். மூக்கு வழியாக விட்டு வாய் வழியாக வெளியே எடுக்கும் வயரில் 18 கிலோ எடை உள்ள தண்ணிகுடத்தைத் தூக்குவேன். ஓடுற ஃபேனை ஒத்த விரல்லயும், டேபிள் ஃபேனை நாக்கால் நிறுத்துறதுனு சாகசப் பட்டியல் ரொம்பவே நீளம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஊசி நுழைந்தாலும் நாசி தாங்கும்!

டபுள் பாரின் அடியில் வைக்கப்பட்ட கத்திகளின் மேல் சக்கரா ஆசனத்தில் வயிற்றில் ஒரு மனிதரைத் தாங்குவது, ரெண்டு நிமிஷம் தலைகீழாத் தொங்கியபடி பல்லால் 50 கிலோ எடை உள்ள பொருளைத் தூக்குறது, கழுத்துல கத்தியைவெச்சு வளைக்கிறது, பைக்கைக் கழுத்துல ஏத்துறது எல்லாம் நான் கத்துக்கிட்ட லேட்டஸ்ட் சாகசங்கள். லாங் ஜம்ப், கராத்தே கொஞ்சம்னு சின்ன வயசுல கத்துக்கிட்டவை இப்ப கைகொடுக்குது. எரியும் மெழுகுவத்தியில் இருந்து சுடச்சுட ஒழுகும் மெழுகை உடல், நாக்கில் விடுவது, மண்புழுவை மூக்கில் செலுத்தி நாக்கு வழியாக எடுப்பதுனு ரிஸ்க் அயிட்டங்கள் நிறைய உண்டு. மரணத்தின் கொடுமையை உணர்த்துறதுக்காக, தூக்குல தொங்குற மாதிரியான சாகசத்தைப் பாக்குறவங்க உறைந்து போயிடுவாங்க. இது மட்டும் பாராட்டுக்காகப் பண்றதில்லை. இதைப் பாத்துட்டு யாராவது ஒருத்தர் தன் தற்கொலை முடிவை மாத்திக்கிட்டாங்கன்னா அதுவே என் வெற்றி.

இந்த மாதிரி 27 சாகசங்கள்கொண்டதொகுப்பு தான் என் நிகழ்ச்சி. சென்னை, மதுரை,கோவை, டெல்லி, மலேசியானு பல இடங்கள்ல நிகழ்ச்சி பண்றேன். 'அபூர்வ சகோதரர்கள்’ அப்பு கமல் கெட்டப் எப்பவும் என் ஃபேவரைட். எனக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்ததது இந்த கெட்டப்தான்.

'ஜாக்கிரதை... ஜாக்கிரதை’னு டாக்டர்கள் அட்வைஸ் பண்றாங்க. நிறைய வலி, தழும்பு    களோடு கூடிய என் பயணம் கின்னஸை நோக்கிப் போய்கிட்டு இருக்கு'' என்கிறார் வீரமணி.

கவனம் நண்பா!

- க.நாகப்பன், படங்கள்: அ.ரஞ்சித்