
கன்ட்ரி மியூஸிக் அசோசியேஷன் சார்பில் ஆண்டுதோறும் இசைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். செலிபிரிட்டிகள் மின்ன மின்ன டிரெஸ் போட்டு ரெட் கார்பெட்டில் நடந்து வருவதைப் பார்க்க செமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பாடகியான கசாடி போப் போட்டுவந்த டிரெஸ்ஸுக்குக் கண்டனங்கள் குவிகின்றன. ‘என்ன டிசைன் இது? இந்த வருஷத்தோட மோசமான காஸ்ட்யூம் இதுதான்’ எனக் கழுவி ஊற்றுகிறார்கள் ரசிகப் பெருமக்கள்.# ஆனாலும் பேசுவோம்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஹாலிவுட் நடிகை ரீஸ் விதர்ஸ்பூனுக்கு இந்த ஆண்டு பல்லேலக்கா ஆண்டு. தொடர்ச்சியாய்ப் படங்கள், மினி சீரிஸ் என கரன்சி கல்லா கட்டுகிறார். மேலும் தன் ஆடை பிசினஸையும் சூப்பராக நடத்தி வருகிறார். ‘இப்படி பேயா உழைக்கலைன்னா என்ன... பசங்க மிஸ் பண்ணுவாங்களே உன்னை’ என நண்பர்கள் கேட்டால், ‘இருக்கப் போறது கொஞ்சநாள். முடிஞ்ச அளவுக்கு கமிட்மென்ட்டோட இருப்போமே. பசங்க அதைப் பார்த்துக் கத்துக்குவாங்க’ எனத் தத்துவம் பேசி வாயடைக்கிறாராம்.# உதாரணப் பெண்மணி!

‘நீ சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் காணாமல் போவாய்’ என என்னிடம் நிறைய பேர் எச்சரித்தார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. இப்படி எந்த ஆணிடமும் சொல்வதில்லை. பார்க்கலாம் இன்னும் எத்தனை நாட்களுக்குப் பெண்களை இப்படி நடத்துகிறார்கள் என’ - இப்படிக் காட்டமாய் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் ஹாலிவுட் நடிகை மிலா குனிஸ். தன் கணவரின் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில்தான் இப்படிப் போட்டு உடைத்திருக்கிறார் அம்மணி.# கூல்மா!

கர்தாஷியன் குடும்பத்தில் இருந்து இந்த வாரம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பது கெண்டால் ஜென்னர். புதிதாக இப்போதுதான் வீடு வாங்கிப் பால் காய்ச்சினார் கெண்டால். `மேட்டர் சப்புனு முடியுதே' என ரசிகர்கள் யோசிக்க, பற்ற வைத்துவிட்டார் கெண்டால். கொசகொசவென புது மாதிரி டிசைனில் ஜிகுஜிகுவென ஒரு சோபா வாங்கியிருக்கிறார் கெண்டால். சரி வாங்கிட்டுப் போறாங்க என்கிறீர்களா? அந்த ஒரு சோபாவின் விலை 35 லட்சம். கண்ணைக் கட்டுகிறதாம் ரசிகர்களுக்கு. # சோபா பேபி
- ஃபாலோயர்