Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Published:Updated:
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘இதை எங்கேயோ கேட்டிருக்கோமே’ மொமண்ட்:

பொது சிவில் சட்டத்தை ஆதரிச்சு குஷ்பு கருத்து சொன்னாலும் சொன்னாங்க, போற இடங்களில் எல்லாம் திருநாவுக்கரசர்கிட்ட ‘இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அவரும் வாய் வலிச்சாலும் சலிக்காம, ‘அது அவரோட தனிப்பட்ட கருத்து’னு ரிங்டோன் மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டிருக்கார். சுப்பிரமணியன்சுவாமி ஏதாவது விவகாரமா சொல்லிவைக்க, ‘அது அவரோட தனிப்பட்ட கருத்து’னு தமிழிசைதான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. என்னடா, இது திருநாவுக்கரசருக்கு வந்த சோதனை!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தட் ‘ஆசை ஆசையாய் இருக்கிறதே’ மொமண்ட்:

‘மூன்று தொகுதிகளிலும் தி.மு.க.தான் வெற்றி பெறும்’, ‘தி.மு.க. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகமாகப் போகுது’னு போற இடங்களில் எல்லாம் ஸ்டாலினும் துரைமுருகனும் பேசிக்கிட்டிருக்காங்க. அதாவது மக்களே, வானத்துல ஏரோப்ளேன் போகுது, கடலில கப்பல் போகுது....இந்த முறையாவது பழம் நழுவிப் பாலில் விழுமா பாஸ்?

தட் ‘இருக்கு ஒரு இடம்’ மொமண்ட்:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!



மத்திய அரசு தினம் ஒரு அறிக்கை விட்டு திகிலைக் கிளப்புது. முதலில் ‘இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு 18வது இடம்’னு ஓர் அறிக்கை வந்துச்சு. அப்புறம் `விவசாயம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்களில் தமிழகத்துக்கு 25வது இடம்’னு வந்துச்சு. என்ன வேணும்னாலும் சொல்லுங்க, டாஸ்மாக் விற்பனையில் நாங்கதானே முதலிடம்? தமிழன் என்று சொல்லடா, டாஸ்மாக்கில் போய் நில்லடா!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘பழம் போச்சே’ மொமண்ட்:

‘விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர்னு சொன்னது தப்புதான்’னு புதுசா போதிமரத்தில் உக்காந்தமாதிரி சொல்லியிருக்கார் வைகோ. `இவர் எப்பவுமே இப்படித்தான். மாத்தி மாத்திப் பேசுவார்’னு செம காண்டாகிச் சொல்லியிருக்காங்க பிரேமலதா. ‘ஆனா நான் விஜயகாந்தை விமர்சிக்கவேயில்லை. பிரேமலதா சரியா புரிஞ்சிக்கலை’னு சமாளிஃபிகேஷன் தட்டியிருக்கார் வைகோ. ‘பாலில் நழுவ வேண்டிய பழத்தை இப்படி ஃபுட்பால் ஆடிக்கிட்டிருக்காரே’னு கடுப்பாகியிருப்பார் விஜயகாந்த்.

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘அதுதான் அதுக்குத்தான்’ மொமண்ட்:

ராகுல்காந்தி ரெண்டுநாளில் மூணு தடவை அரெஸ்ட் ஆகிச் சாதனை படைச்சிருக்கார். அதைக் கண்டிச்சு தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரங்க ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. ‘நல்ல விஷயம் தானே’ங்கிறீங்களா? ஆனா என்ன விஷயம்னா, ‘ஈ.வி.கே.எஸ், திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், குஷ்பு, நக்மா’னு எல்லாத் தலைவர்களும் கோஷ்டியை ஒதுக்கி வெச்சுட்டு ஒரே மேடையில் இருக்காங்கங்கிறதே பேச்சாப் போச்சு. ராகுல்காந்தி அரெஸ்ட் ஆனதையே எல்லோரும் மறந்துட்டாங்க. அட, அவங்களை வேலை செய்ய விடுங்க ப்ளீஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism