Published:Updated:

‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

Published:Updated:
‘ட்ரெண்ட்’பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘ட்ரெண்ட்’பெட்டி!
‘ட்ரெண்ட்’பெட்டி!

சர்ச்சையைக் கிளப்பு!

ஸ்பெயினைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக்கே, கிளப் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக ஆடிவருகிறார். காயம் காரணமாக சமீபத்தில் அவர் போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், அவரது பெயரான Gerard Pique டிவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ‘உலகின் மிகச்சிறந்த வீரருக்குத் தங்கப்பந்து (பால்லோன் டி’ஆர்) விருது தரப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டிலிருந்து அந்த விருதை லியோனல் மெஸ்சிதான் வென்றிருக்க வேண்டும்’ என டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துதான் அதற்குக் காரணம். இந்த விருதிற்கான பட்டியலில் ரொனால்டோவின் பெயர் அடிபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், பிக்கேவின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விருதுன்னாலே சர்ச்சைதானே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

தலைவர்டா!

சூப்பர்ஸ்டார் பேரைச் சொன்னாலே சோசியல் மீடியா அதிரும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ‘கத்தி’, ‘ஐ’, ‘அனேகன்’, ‘தெறி’ போன்ற பல முன்னணித் தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் டப்பிங்கில் செம பிஸியாக இருப்பவர் ரவீணா ரவி. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தோடு சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதன் காரணமாக இவரது டிவிட்டர் ஐ.டியான @raveena116 இந்திய அளவில் டிவிட்டரில் ட்ரெண்ட் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அட!

‘ட்ரெண்ட்’பெட்டி!

புகை மண்டலமாகும் தலைநகரம்!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தீபாவளி முடிந்தபின் காற்று மாசுபாடு அதிகரித்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனாலும் காற்று மாசுபாடு குறையாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் இது குறித்துப் போராட்டாங்கள் நடத்தியதோடு, டிவிட்டரிலும் #letssavedelhi என்ற டேக்கில் சமூக ஆர்வலர்கள் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நிம்மதியா மூச்சுகூட விட முடியலையே!

‘ட்ரெண்ட்’பெட்டி!

பிரமாண்டம்!

சர்ச்சைக்குப் பெயர்போன இயக்குநரான ராம்கோபால் வர்மா முதல்முறையாக சர்வதேசப் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியாவிலேயே அதிகப் பொருட்செலவில் தயாராகவிருக்கும் ‘Nuclear’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.340 கோடி. இந்தியாவில் மட்டுமன்றி அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஏமன் நாடுகளிலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இத்தகவலை ராம்கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த சிறிது நேரத்தில் #RGVNUCLEAR தேசிய ட்ரெண்ட் ஆனது. நெசமாத்தான் சொல்றியா!

‘ட்ரெண்ட்’பெட்டி!

டோலிவுட்டில் அனிருத்!

இளைஞர்களின் இதயம் கவர்ந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவரது இசையில் வெளிவரும் ஆல்பங்கள் எல்லாம் சொல்லிவைத்து ஹிட் அடித்துக்கொண்டிருக்கின்றன. இது டோலிவுட் உலகத்தையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளதால், திரிவிக்ரம் இயக்கத்தில், பவன் கல்யாண் நடிக்கும் 25-வது படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனிருத். இதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் அனிருத் அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து #WelcomeToTollywoodAnirudh என்ற டேக்கில் மனவாடுகள் சரவெடி வெடித்ததில், தேசிய ட்ரெண்ட் அதிர்ந்தது. ஆலுமா டோலுமா டோலிவுட்லமா!

‘ட்ரெண்ட்’பெட்டி!

வெள்ளி விழா!

இயக்குநர் மணிரத்னம், இசைஞானி இளையராஜா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி மெகா கூட்டணியில் உருவான ‘தளபதி’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்திருக்கின்றன. தொலைக்காட்சிகளில் எத்தனை முறை ஒளிபரப்பானாலும், இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ‘கிளாஸிக்’ திரைப்படம் எனப் போற்றப்படும் இத்திரைப்படத்தின் வெள்ளி விழா #25yearsoficonicthalapathi என்ற டேக்கில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர். மணிரத்னம்டா!

‘ட்ரெண்ட்’பெட்டி!

டீசரில் புதுமை!

‘பாகுபலி’ திரைப்படம் பல சாதனைகளைப் படைத்தது எனச் சொல்வது சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கும் என்பது போலிருக்கும். இதன் இரண்டாம் பாகத்தை வெளியிட இத்திரைப்படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. சமீபத்தில் வெளியான இதன் மோசன் போஸ்டர் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ள இந்த நேரத்தில், இத்திரைப்படக்குழு வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் டீசரைக் காணும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. இந்த அனுபவத்தை #BaahubaliVR என்ற டேக்கில் ரசிகர்கள் பதிவுசெய்ததால் தேசிய அளவில் ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளது. இங்கே கடையை எப்போ சார் திறப்பீங்க!

- ட்ரெண்டிங் பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism