Published:Updated:

லேடி சிவாஜி... குட்டி கமல்!

லேடி சிவாஜி... குட்டி கமல்!
பிரீமியம் ஸ்டோரி
லேடி சிவாஜி... குட்டி கமல்!

லேடி சிவாஜி... குட்டி கமல்!

லேடி சிவாஜி... குட்டி கமல்!

லேடி சிவாஜி... குட்டி கமல்!

Published:Updated:
லேடி சிவாஜி... குட்டி கமல்!
பிரீமியம் ஸ்டோரி
லேடி சிவாஜி... குட்டி கமல்!
லேடி சிவாஜி... குட்டி கமல்!

ரியாக்‌ஷன் ரிவ்யூவால் இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கும் மிர்ச்சி லாவண்யாவிடம் ஒரு மினி பேட்டி!

``ரியாக்‌ஷன்லயே விமர்சனம் பண்ணணும்ங்கிற ஐடியாவை எப்படிப் பிடிச்சீங்க?''

``பெருசா ஏதும் பிளான் பண்ணலை ஜி.  பக்கம் பக்கமாக எல்லோரும் விமர்சனம் பண்ணிக்கிட்டு இருப்பாங்க, நமக்கே ஒரு கட்டத்தில் கடுப்பாகும் இல்லையா. அதான் சிம்பிளா எதாவது பண்ணலாமேனு சும்மா குட்டி குட்டி ரியாக்‌ஷன்களோட ஜாலியாக ஆரம்பிச்சேன். இப்போ, தொட்டுத் தொடர்ந்துகிட்டு இருக்கு.''

``விமர்சனங்களைப் பார்த்துட்டு ரசிகர்கள் பட்டம் கொடுத்திருப்பாங்களே?''

லேடி சிவாஜி... குட்டி கமல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சொன்னா கொஞ்சம் ஓவரா இருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க. `ரியாக்‌ஷன் குயின்'னு சில பேர் கூப்பிடுறாங்க. சில பேர் `லேடி சிவாஜி'னு கூப்பிடுறாங்க. இது என்னடா சிவாஜிக்கு வந்த சோதனைனுதானே நினைக்கிறீங்க? உங்க மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன் ஜி.'' (`சேச்சே குட்டி கமல்னுகூட பெயர் வைக்கலாம்’ என்றதும் ‘அட இதுகூட நல்லாருக்கே, டைம்பாஸே எனக்கு பேர் வெச்சிருச்சு’ என ஹேப்பி மோடுக்குத் தாவுகிறார்)

``எதிர்பார்க்காத பாராட்டுகள்?''

``நிறைய இருக்கு. சோஷியல் மீடியாவில் பல பேர் `நல்லாருக்குது'னு பாராட்டினாங்க. ஒளிப்பதிவாளர் சிற்றரசு சார், சில சீரியல் இயக்குநர்கள் பாராட்டினாங்க. ரொம்பவே சர்ப்ரைஸிங்கா இருந்தது. எல்லோருக்கும் திரும்பவும் நன்றி சொல்லிக்கிறேன்.''

``சோஷியல் மீடியாவுல ஃபேமஸ் ஆகிட்டீங்க. சினிமா வாய்ப்பு கண்டிப்பா வந்திருக்கணுமே?''

``இன்னும் இந்தக் கேள்வி வரலையேன்னு நினைச்சேன். கேட்டுட்டீங்களா? வந்திருக்கு. ஆனா, விமர்சனம் பண்ணுறதுங்கிறது வேற, சினிமா வேற இல்லையா. அந்த அளவுக்குத் தகுதியும் சரியான நேரமும் வரும்போது பார்த்துக்கலாம், இப்போதைக்கு நோ ஐடியா. எப்டி கரெக்டா சொல்லிட்டேனா?''

`` `ஆர்.ஜே'ன்னா பாட்டு பற்றி கேட்கணும்ல?''

லேடி சிவாஜி... குட்டி கமல்!

`` ஆமா, ஆமா அதுதானே உலக வழக்கம். நீங்க கேட்கலைனாகூட நான் சொல்வேன். சமீபத்தில் பிடிச்ச பாட்டுன்னா `கொடி' படத்து `ஏய் சொழலி', `இறுதிச்சுற்று' படத்துல வர்ற `வா மச்சானே' பாட்டுகள்தான். தவிர, பாம்பே ஜெயஸ்ரீ பாட்டுகள் எனக்கு ஆல்டைம் ஃபேவரைட்ஸ்!''

``எல்லா படங்களுக்கும் ரியாக்‌ஷன் ரிவ்யூ காட்டுறீங்க. `லாவண்யா-22'னு உங்களைப் பற்றியே ரிவ்யூ பண்ணச்சொன்னா, என்ன ரியாக்‌ஷன் கொடுப்பீங்க?''

``அவ்வ்வ்... ஏங்க இப்படி? சரி சொல்றேன். முன்பாதியான 11 வயசும் `ங்ங்ஙே'னு போயிட்டு இருந்துச்சு. அடுத்த 11 கொஞ்சம் பிடிச்சிருக்கு. பரபரனு பரவாயில்லாம போகுதுன்னு நினைக்கிறேன். இன்னும் டீட்டெய்லான பதில் வேணும்னா, ஒரு வீடியோவா பண்ணிப் போடுறேன், அதுல பார்த்துக்கங்க!''

- ஜெ.வி.பிரவீன்குமார்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism