Published:Updated:

இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!
பிரீமியம் ஸ்டோரி
இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

Published:Updated:
இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!
பிரீமியம் ஸ்டோரி
இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!
இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

`உப்பு தேவையான அளவு, கடுகு தேவையான அளவு' என நாம் வழக்கமாக பார்க்கும் சமையல் நிகழ்ச்சி அல்ல இது! எந்தவித அரிதாரமும் இல்லாமல் அருவிப்பாதையில் நண்டுக் குழம்பு, தோப்புக்குள் தலைக்கறிக் குழம்பு என கிராமத்து சமையலைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் அறுபது வயது ஆறுமுகம். மெலிந்த தேகம் நரைத்த முடி என நம் கிராமத்துச் சொந்தங்களை நினைவுபடுத்தும் ஆறுமுகத்தின் வீடியோவுக்கு இப்போது ஏகப்பட்ட லைக்ஸ்! ஒவ்வொரு வீடியோவையும் குறைந்த பட்சம் மூணு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். `Village food factory' என இவர் மகன் கோபிநாத் நடத்தும் யூடியூப் சேனல்தான் இப்போது இணையத்தின் ஹாட் டாபிக். திருப்பூரில் இருந்தவர்களுடன் ஒரு பேட்டி...

``யார் நீங்க... எப்போதிருந்து இப்படி ஆரம்பிச்சீங்க?''

``எனக்கு வயசு அறுபது ஆயிடுச்சுப்பா. சொந்த ஊரு போடிநாயக்கனூர் னாலும் இப்போ இருக்குறது திருப்பூர் நாச்சிபாளையம். வயசுப்பையனா இருந்தப்போ ஜவுளி வியாபாரம் பார்த்தேன். செங்கல்பட்டுல இருந்தப்போ கல்யாண வீட்டுக்கெல்லாம் சமைச்சுக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். எல்லாத்தையும் விட்டுட்டு திருப்பூர்ல பெயிண்டர் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. மூத்த பையன் காலேஜ் முடிச்சுட்டு சினிமாவுல சேரப்போறேன்னு மெட்ராசுக்குப் போச்சு. திடீர்னு ஒரு நாள் கேமிரா எல்லாம் எடுத்துட்டு, `என்கூட வாங்கப்பா'ன்னு கூட்டிப்போயி என்னைய சமைக்கச் சொல்லி வீடியோப்படம் எடுத்துச்சு'' எனச் சொல்லும்போதே மகன் கோபிநாத் தொடர்கிறார்.

``டிப்ளமோ முடிச்சிட்டு சினிமால உதவி இயக்குநரா இருந்தேன். அந்தப் படம் ரிலீஸ் ஆகல. ஊருக்கு வந்த நேரத்துல யூ-டியூப் சேனல் நெறய பார்க்க ஆரம்பிச்சேன். சமையல் நிகழ்ச்சிகள் பற்றிய சேனல்கள் நிறைய இருந்துச்சு. `நாம மறந்துபோன கிராமத்து சமையலை ஏன் நிகழ்ச்சியா  பண்ணக்கூடாது'ன்னு தோணுனப்ப வந்த யோசனைதான்இது. அப்பாவுக்கு நல்லா சமையல் வரும்.  அதனால வேற யாரையும் வெச்சு பண்றதுக்கு மனசு இடம் கொடுக்கல.

அப்பா கூடப் பொறந்தவங்க எல்லாம், வறுமையைக் காரணம்  காட்டி  ஒதுக்கி வெச்சுத் தான் பார்ப்பாங்க. அவங்க எல்லோரும் அப்பாவைத் திரும்பிப் பார்க்கணும் அப்படிங்கிற எண்ணம் இருந்துச்சு. அதனால அப்பாவை வெச்சே நிகழ்ச்சியைத் தொடங்கிட்டேன்.''

இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``செய்முறை வீடியோ  எல்லாம் பியர் கிரில்ஸ் அளவிலே இருக்கே?''

 ``இங்க எல்லாரோட வாழ்க்கை முறையும் மாறிடுச்சு. நமக்கு நல்ல சாப்பாடு சாப்பிட ணும்னு தோணும். ஆனா அதை எப்படி செய்யணும்னு தெரியாது. உதாரணத்துக்கு நமக்கு  நண்டு சாப்பிடணும்போல இருக்கும். எப்படி சுத்தம் பண்ணணும்னு தெரியாமல் ஓட்டலுக்கே போயிடுவோம்.  ஒரு சமையலை அதனோட ஆரம்பக்கட்டத்துல இருந்து எல்லாத்தையும் பதிவு பண்ணணும்னு முடிவு பண்ணுனோம். பார்க்கிறவங்க முகம் சுளிக்காம ஏத்துப்பாங்களான்னு ஆரம்பத்துல ஒருவித தயக்கம் இருந்துச்சு. ஆனா வீடியோ அப்லோடு பண்ணுன பிறகு அதுக்கென நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது.''

``முழு ஆட்டை அண்டாவுக்குள்ள புதைக்கிறீங்க. முந்நூறு முட்டைல குழம்பு வைக்கிறீங்க..! கடைசில ரெண்டு மூணு பேருதான் சப்பிடுறீங்க. சாப்பாட்டை வேஸ்ட் பண்ணலாமா?''

``ஆரம்பத்துல நாலு அஞ்சு பேரு சாப்பிடுற அளவுக்குத்தான் பண்ணினோம். யூ-டியூப்ல அதுக்குக் கிடைச்ச வரவேற்புல எங்களுக்கு வருமானம் வர ஆரம்பிச்சது. வருமானம் வருதே, பெரிய அளவில பண்ணலாம்னு முடிவு பண்ணி சமையல் பண்ணினோம் . அந்த சாப்பாட்டை எல்லாம் திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் பகுதிகள்ல சாப்பாடு இல்லாம இருக்கிறவங்களுக்கு நாங்களே போயி கொடுத்துட்டு வந்துருவோம். அதனால சாப்பாடு எல்லாம் வீணடிக்கிற பழக்கம் இல்ல.''

இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

``அப்பாவை வீடியோ முன்னால கொண்டு வந்ததுக்கான நோக்கம் நிறைவேறிடுச்சா?''

``இந்த சேனல் ஆரம்பிச்சே ஆறுமாசம்தான் ஆகுது. இதுவரை 42 வீடியோ போட்ருக்கோம். இன்னும் நாம மறந்துபோன சமையல் எல்லாத்தையும் திரும்பவும் எல்லார்கிட்டயும் கொண்டுபோயி சேர்க்கணும். அதே நேரத்துல என்னோட சினிமா கனவுகளுக்கும் உயிர் கொடுக்கணும். ஒரு தடவை பொண்ண காம்பியரா வெச்சு பண்ணுன சமையல் வீடியோவ அப்லோடு பண்ணினேன். பலபேரு கோபப்பட ஆரம்பிச்சிட்டாங்க. `அப்பா சமையலுக்காகத்தான் பார்க்கிறோம் தம்பி... நீங்க ரூட்டு மாறுற மாதிரி தெரியுதே'ன்னு ஆதங்கப்பட்டாங்க. வீடியோ பார்த்தவங்க எல்லாம் அப்பாவை அவங்க அப்பா மாதிரியே நினைக்கிறாங்க. `அப்பா சமையல் சூப்பர்' `அப்பா பின்றார்'னு சொல்றப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த வார்த்தைகள் எல்லாம் அப்பாவை அவமானப்படுத்தினவங்க காதுகளில் போயி சேரணும்'' எனச் சொல்லும்போது ஆறுமுகம் குறுக்கிடுகிறார், `` `மாசம் நாலு வீடியோ பண்ணிக்கலாம்ப்பா... இனிமே நீங்க பெயின்ட் அடிக்கப் போகவேணாம்'னு தம்பி சொன்னதுமே வேலைய நிப்பாட்டிட்டேன்''  என  மகனை நினைத்துப் பூரித்து நிற்கிறார் ஆறுமுகம்.

village food factory சேனலின் வீடியோக்களுக்கு  https://www.youtube.com/channel/UC-j7LP4at37y3uNTdWLq-vQ

- ந.புஹாரி ராஜா
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism