Published:Updated:

டெக்மோரா

டெக்மோரா
பிரீமியம் ஸ்டோரி
டெக்மோரா

டெக்மோரா

டெக்மோரா

டெக்மோரா

Published:Updated:
டெக்மோரா
பிரீமியம் ஸ்டோரி
டெக்மோரா
டெக்மோரா

ப்பிள் ஐ-போன்7, ஆண்ட்ராய்டு கூகுள் பிக்ஸல்னு உலகமே பரபரப்பா இருந்தப்ப... இந்த விண்டோஸ்

டெக்மோரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விண்டோஸ்னு ஒரு கம்பெனி இருந்துச்சே, என்னாச்சுனு கேக்குற நிலைமைல தான் இருந்தது. ஆனா, இப்போ? `வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'னு செம கெத்தா `கம்-பேக்' கொடுத்திருக்கு `விண்டோஸ் சர்ஃபேஸ்'!

விண்டோஸ் சர்ஃபேஸ் இருக்கின்ற கணினிகளில் மிக மெல்லிய டச் வசதி கொண்ட கணினியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 12 மி.மீ தடிமன் கொண்ட 28 இன்ச் திரை அளவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது விண்டோஸ் சர்ஃபேஸ். முழுவதும் டச் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஒரு ட்ராயிங் போர்டு போல எளிதாக இதைப் பயன்படுத்த முடியும் என்கிறது மைக்ரோசாஃப்ட்.

4500x3000 ரெஷலூசன் கொண்ட திரை, செவ்வக வடிவ பேனலுக்குள் ஸ்பீக்கர் என மாஸ் காட்டுகிறது சர்ஃபேஸ். இதில் i5 மற்றும் i7 ப்ராஸசர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் RAM ஆனது 8 GB, 16 GB, 32 GB என்ற அளவிலும், மெமரி பவர் 1 TB , 2 TB என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சர்ஃபேஸ் பென், கீ போர்டு, மவுஸ் ஆகியவை இந்த பேக்கேஜில் இடம்பெற்றிருக்கும். இதன் விலை 2லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை. விண்டோஸ் சர்ஃபேஸின் ஸ்க்ரீனில் வைத்து வரைய உதவும் `சர்ஃபேஸ் டயல்' கருவி படம் வரைய, சத்தத்தை அதிகரிக்க, இணையத்தை மேலும் கீழும் இறக்கிப் படிக்க ஆகியவற்றுக்கு உதவுகிறது. இதைத் தனியாகத்தான் வாங்கவேண்டும். இதன் விலை 6000 ரூபாய்க்கு மேல். மொத்தத்தில் 3 லட்சம் ரூபாய் இருந்தால், ஆப்பிள், ஆண்ட்ராய்டுக்கு இணையாக 28 இன்ச் திரையில் செம கெத்து காட்டலாம், என்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

டெக்மோரா

ஆனா, பயன்கள் அதிகமாக இருந்தாலும், `ஆப்பிள்' பிராண்டுகளுக்கு முன்னால் இது அடங்கிப்போய்விடுகிறது என்பது நெட்டிசன்களின் கருத்து. மைக்ரோசாஃப்ட்டின் தற்போதைய நிலைக்கு, ``எங்களுக்கு `ஆப்பிள்' மட்டும்தாங்க பயம். மத்தபடி, நாங்க கெத்துதாங்க!'' என்பதுதான் பொருத்தமான பன்ச்! 

- டெக்கிகய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism