லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

ஹெட்போனையும் கேர்ள்ஸையும் பிரிக்க முடியாது!ஓவியம்: ஸ்யாம்

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

``இனியா... பார்த்தியா?! 30 லட்சம் க்ராஸ் ஆயிடுச்சு!''

``என்னது 30 லட்சம்? நீ பார்த்த?!''

``நீ இன்னும் பார்க்கலையா? 5 நாள்ல 30 லட்சம் க்ராஸ் பண்ணி இருக்குனா சூப்பர்ல!''

``என்னடி ரெண்டு பேரும் திடீர் லட்சாதிபதி ஆகிட்டீங்களா!  லட்ச லட்சமா பேசுறீங்க? பிளாக் மணி ஏதாச்சும் பதுக்குறீங்களா கேர்ள்ஸ்?!''

``ஆமா, அப்டியே பதுக்கிட்டாலும்...''

``அண்ணாவுக்குத் தெரியாம ஐபோன் வாங்கலாம்னு, பாக்கெட் மணியை உண்டியல்ல போட்டு வெச்சிருந்தேன் ஆதிரா. `500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’னு  ராத்திரியோட ராத்திரியா வந்த அறிவிப்பால, பதுக்கலை வெளிய கொண்டுவர வேண்டியதாப் போச்சு!''

``ஆமாம்பா... என் கையில 500, 1000 ரூபாய் தவிர வேற காசு இல்லாதப்ப இப்படி வந்த திடீர் அறிவிப்பு என்னை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு.''

``இதுல அசௌகரியங்கள் இருந்தாலும், தேச நலன் கருதி நான் இதை வரவேற்கிறேன்!''

``எங்கிட்ட நோ மணி. ஸோ, நோ கமென்ட்ஸ்!''

``சரி... இந்த டாபிக் இதோட போதும். அந்த 30 லட்சம் மேட்டருக்கு வாங்க..."

``அதுவா? அரவிந்த் சுவாமி, ஜெயம் ரவி நடிப்புல தயாராகிட்டு இருக்குற ‘போகன்’ படத்தோட டீஸர் யூடியூப்ல ரிலீஸ் ஆச்சு. ரெண்டு பேர் பெர்ஃபார்மென்ஸும் அட்டகாசம். கொஞ்ச நாள்லயே வியூஸ் 30 லட்சத்தை தாண்டிருச்சு. ரிப்பீட் மோட்ல பலதடவை  பார்த்துட்டேன்!''

``இனியா... வந்ததுமே கேட்கணும்னு நினைச்சேன்... மறந்துபோயிடுச்சு. உன் கஸினோட  குட்டிப்பொண்ணு ஷீனுவுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?''

``பரவால்லப்பா. காய்ச்சல் சரியாகலைன்னு, டாக்டர் சொன்ன அளவுகளைவிட அதிகமா சிரப் கொடுத்திருக்காங்க. ஓவர் டோஸாகி அட்மிட் பண்ற அளவுக்கு ஆகிடுச்சு. பரிந் துரைக்கப்பட்ட அளவு மருந்து மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டியது ஏன்னு டாக்டர் விளக்கமா சொன்னப்போதான் புரிஞ்சது. நல்லவேளை... இப்போ ஷீனு குணமாகிட்டு வர்றா...''

``குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனமா இருக்கணும்பா. கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும் மருந்தே விஷமாகி ஆபத்தாகிடும்...''

``எதுலதான் ஆபத்து இல்ல?! நீ காதுல மாட்டிருக்கிற ஹெட்செட்கூட ஆபத்துதான்னு பட்சி சொல்லுது!''

``அட போங்கப்பா... செல்போனை காதுல வெச்சு பேசிட்டே இருந்தா காதுக்கு கெட்டதுனு சொன்னதாலதானே ஹெட்செட்டுக்கு மாறினேன்? இப்ப அதுவும் தப்புனா... என்னதான் பண்றதாம்?''

``ஆதிரா... டெக்னாலஜி வளர்ச்சியைக் கொண்டாடுற அளவுக்கு ஆபத்துகளையும் தெரிஞ்சு வெச்சுக்கணும். எப்பவும் ஹெட் போன்ல மியூசிக் கேட்டுட்டே மூழ்கிக்கிடக்குற உன் கிளாஸ் கேர்ள்ஸை இனி கேர்ஃபுல்லா இருக்கச் சொல்லு.''

``அனு... மழை வர்ற மாதிரி இருக்குல்ல?!''

``ஹே... ஜாலி!''

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி
அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

குழந்தைகளுக்குச் சரியாக மருந்து கொடுங்க! http://bit.ly/2fgr3GG

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி
அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி‘ஹெட்போன்’ கேர்ள்ஸ்.! கேர்ஃபுல் ப்ளீஸ்! http://bit.ly/2fEY2Bj

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி
அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

30 லட்சம்! போகன் டீசர்! http://bit.ly/2fD0TiZ