பிரீமியம் ஸ்டோரி
தைவானுக்கு ஒரு டிக்கெட்!

தைவான் நாட்டின் பிங் டுங் (Pingtung City) நகரை அடுத்திருக்கும் ஆளரவமற்ற ஒரு பகுதியில், தேசிய அருங்காட்சியகம் மற்றும் அக்வேரியம் ஒன்றை அந்த நாட்டு அரசு அமைத்திருக்கிறது. மேகத்தில் இருந்து மழையாகப் பொழியும் நீர், ஆறாகவும், ஏரியாகவும் வடிவம் பெற்று கடலில் கலப்பது வரை இருக்கும் அனைத்து வகையான நீர்வாழ் உயிரினங்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. மீன் பண்ணை, குளம், குட்டை மற்றும் ஏரிகளில் வாழும் உயிரினங்களையும் இங்கே பார்க்கலாம்.

தைவானுக்கு ஒரு டிக்கெட்!

கடலில் மூழ்கிய கப்பல்களின் இடிபாடுகளில் கடல் தாவரங்கள் எப்படி வளரும், அவை மீன்களுக்கு எந்த வகையில் உதவும் என்பதையும் இங்கே தெரிந்துகொள்ளலாம். இந்த அருங்காட்சியகத்தின் வாசலே, ஒரு சிறிய நீர்வீழ்ச்சிதான். பாசிகள், பவழப்பாறைகள், ஜெல்லி மீன்கள், சுறா மீன்கள் என இந்த இடம் சொக்கவைக்கிறது.

தைவானுக்கு ஒரு டிக்கெட்!

மீன்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் இருக்கும் ஃபைபர் கண்ணாடியைச் சுத்தம் செய்யும் பணிப் பெண்களுக்கும் மீன்களுக்கும் இருக்கும் பாசம் நம்மை சிலிர்க்கவைக்கிறது. ஆம்! அந்தப் பெண்கள், மீன்களுக்கு உணவு ஊட்டும் காட்சியைப் பார்ப்பவர்கள், தங்களை மறந்து சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பது நிச்சயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு