பிரீமியம் ஸ்டோரி

மெரிக்க அதிபர் ஆகியிருக்கிறார் டொனால்டு ட்ரம்ப். உலகையே  ஆட்டிப்படைக்க நினைக்கும் அமெரிக்காவை ஆட்டம் காணவைக்கும் ஒரு விஷயம், டோர்னடோ.

காற்றிலே ஒரு கலவரம்!

இது புனல் வடிவத்தில் சுழன்று வரும் காற்று. சில நிமிடங்கள் போதும்... எல்லாவற்றையுமே எள்ளாக்கிவிட்டுப் போய்விடும். சூறாவளி போலதான் இந்தப் புனல் சுழலும் உருவாகும். கடல் மட்டத்தில் இருந்து மேலே எழும்பும் வெப்பக் காற்று சுருண்டு, ஒரு மெகா தூண் போல புறப்படும். குட்டிக்கரணம் போட்டு கரைக்கு வரும். மணிக்கு 480 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட மேக்னடிக் ரயில் வேகம்) என்கிற அளவில்  இது சுழலும். இந்தச் சுழலுக்குள் சிக்கியவை  சின்னாபின்னம்தான். அதுவும் உடனே இல்லை... சிக்கும் பொருட்களை பல கிலோ மீட்டர் தூரம் உறிஞ்சியெடுத்துச் சென்று, கீழே போடும். டோர்னடோவை கதாநாயகனாக, இல்லை... இல்லை... வில்லனாக வைத்து தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் படமான ‘தி டே ஆஃப்டர் டுமாரோ’ பார்த்திருக்கிறீர்களா?

மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படும். வாகனங்கள் ஆகாயத்தில் பறக்கும். புல்டோசர் இல்லாமலே வீடுகள் சுக்குநூறாக்கப்படும். கால்நடைகளும் மனிதர்களும் சிறகுகள் இன்றி வானத்தில் பறப்பார்கள். இதையெல்லாம் பார்த்தாலே மூச்சுக்காற்று நின்றுவிடும்.

அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில்தான் டோர்னடோ வெறியாட்டம் போடுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு