பிரீமியம் ஸ்டோரி

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற விதி தண்ணீருக்கும் பொருந்தும். ஆறு, ஏரி, குளம், குட்டை, கண்மாய் மற்றும் கடலில் தண்ணீராக இருக்கிறது. ஃப்ரீசரில் இருக்கும் ஐஸ்கட்டியும் தண்ணீரின் இன்னொரு உருவம்தானே? மேகம், பனி, மழை, ஊற்று என தண்ணீரின் அவதாரங்கள் பல.

உலகம் சுற்றும் தண்ணீர்!

தண்ணீர் ஓர் இடத்தில் சும்மா கிடப்பது போல தோன்றினாலும், ஒட்டுமொத்த தண்ணீரும் அடுத்த பகுதியை நோக்கி இடைவிடாமல் நகர்ந்துகொண்டே இருக்கிறது. நிலத்துக்கும், கடலுக்கும், வளிமண்டலத்துக்கும் இடையே இந்தச் சக்கரம் ஓயாது சுழல்கிறது.

உலகம் சுற்றும் தண்ணீர்!

பூமியில் நிறைய தண்ணீர் இருந்தாலும், அதில் 3 சதவிகிதம் மட்டுமே தூய்மையானது. அந்தத் தூய்மை நீரில் 75 சதவிகிதம் பனிப்பாறைகளாக உறைந்து கிடக்கிறது. மீதி இருப்பதில் பெரும்பகுதி நிலத்தடி நீராக இருக்கிறது. மழை அல்லது பனியின் காரணமாகவே நிலத்தடி நீர் உருவாகிறது. பூமித்தரையை அடையும் நீர், மண்துகள்களுக்கு இடையே இருக்கும் நுண்துளைகளின் வழியாகக் கசிந்து உள்ளே புகுகிறது. கிரானைட் போன்ற கடினப்பாறைகள்,  சுண்ணாம்புப் பாறைகளிலும் புகுந்துகொள்ளும். பூமித்தரைக்குக் கீழே எங்கெல்லாம் வசதியாக துளைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் ஜம்மென்று கூடாரம் போட்டுவிடும் நிலத்தடி நீர். வசதியாக இடம் கிடைத்தாலும் அக்கடாவென ஓய்வு எடுப்பது பிடிக்காது. இயற்கை விதித்த பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதுதான் நீரின் சிறப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு