பிரீமியம் ஸ்டோரி

மெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அன் அர்பர் (Ann Arbor) நகரத்தின் பல கட்டடங்களின் சுவர்களை ஒட்டி குட்டிக் குட்டிக் கதவுகளைப் பார்க்கலாம். இந்தக் கதவுகளைத் திறந்தால், அதன் உள்ளே அறைகள், மாடிப்படி என சகலமும் குட்டியூண்டாக!

தேவதைக் கதவுகள்!

‘Fairy Doors of Ann Arbor’ என்று அழைக்கப்படும் இந்தக் கதவுகளை உருவாக்கியவர், கிராஃபிக் டிசைனரான ஜோனதன் பி.ரைட். 1993-ம் ஆண்டு தனது பாரம்பரய வீட்டைப் புதுப்பித்த போதுதான்  மிஸ்டர் ரைட்டுக்கு இந்த எண்ணம் தோன்றியிருக்கிறது. குழந்தைகள் பொழுதுபோக்குவதற்காக அமைக்கப்பட்ட முதல் தேவதை இல்லம் அனைவரையும் கவர,  ஊர் முழுவதும் ஏராளமான தேவதைக் கதவுகள் அழகு சேர்க்கின்றன.

இங்கே வசிக்கும் குழந்தைகள், கதவின் அருகே தேவதைக்கான விளையாட்டுப் பொருட்களையும் உணவையும் வைப்பார்கள்.  இதைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள்   வருகின்றனர்.

இதைப் பார்த்து சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க், அட்லாண்டா நகரங்களிலும் தேவதைக் கதவுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. விரைவில் நம்ம ஊருக்கும் வரலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு