Published:Updated:

மொழி இல்லா காடு - புத்தக உலகம்

மொழி இல்லா காடு - புத்தக உலகம்
பிரீமியம் ஸ்டோரி
மொழி இல்லா காடு - புத்தக உலகம்

புதிய பகுதிகிங் விஷ்வா

மொழி இல்லா காடு - புத்தக உலகம்

புதிய பகுதிகிங் விஷ்வா

Published:Updated:
மொழி இல்லா காடு - புத்தக உலகம்
பிரீமியம் ஸ்டோரி
மொழி இல்லா காடு - புத்தக உலகம்

உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள புதிய புத்தகங்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் பகுதி இது. இளம் பெற்றோர்கள், இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதன் மூலம் தங்கள் குழந்தைகளுக்கு புதிய உலகை அறிமுகம் செய்யலாம். அவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தலாம்.

மொழி இல்லா காடு - புத்தக உலகம்

ரு மழைக்காடு. ஒரு கம்பீரமான புலி காலையில் எழுந்து சோம்பல் முறித்துவிட்டு தன்னுடைய உணவைத் தேட ஆரம்பிக்கிறது. அந்தத் தேடலில்... யானை, முதலை, கருஞ்சிறுத்தை, குரங்கு கூட்டம், ஆற்றில் இருக்கும் பிரான்ஹா மீன்கள், முதலை என்று பல வகையான விலங்குகளை எதிர்கொள்கிறது. ஆரம்பத்தில் வேட்டையாடும் புலியே, பின்னர் வேட்டையாடப்படுகிறது.

முழுக்க முழுக்க வசனமே இல்லாமல், ஓவியங்களால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும் லவ்: தி டைகர் (Love: THE TIGER) காமிக்ஸ் புத்தகம், நமக்கு கற்றுத் தரும் பாடங்கள் நிறைய.

மொழி இல்லா காடு - புத்தக உலகம்

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் லட்சத்துக்கும்  அதிகமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது நான்காயிரத்துக்கு குறைந்துவிட்டது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature- IUCN) புலிகளை அருகிவரும் உயிரினமாக வகைப்படுத்தி உள்ளது.

விலங்குகளை அவற்றின் இயற்கையான இருப்பிடத்தில் படம் பிடிக்கும்  ஆவணப்படங்களைப் போல அருமையாக உருவாக்கப்பட்ட இந்தப் புத்தகம் உருவான கதையும் சுவாரஸ்யமானது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் லூக்கா காமிக்ஸ் திருவிழாவில் ஒரு நிகழ்ச்சியில் அமர்ந்திருக்கிறார் நமது கதாசிரியர். அவருக்கு முன்வரிசையில் அமர்ந்திருப்பவர் எதையோ வரைவதைப் பார்க்கிறார். சற்று நேரம் கழித்து வரைந்த ஓவியத்தை கீழே போட்டுவிட்டு அவர் எழுந்து சென்றுவிட்டார்.

அந்த ஓவியத்தில் ஒரு யானைக்குட்டி அழகாக அமர்ந்திருக்கிறது. அந்தக் காட்சியை சில நொடிகளில் சிறப்பாக வரைந்திருப்பதைக் கண்டு வியந்தார். பின்னர் அவரைத் தேடிக் கண்டுபிடித்து விலங்குகளின் மீது அவருக்கு இருக்கும் பிரியத்தை வெளிக்கொணரும் வகையில் சில கதைகளை வடிவமைத்தார். இப்படியாக இருவரும் இணைந்து உருவாக்கிய ஒரு தொடர்தான் காட்டு விலங்குகளின் அன்றாட வாழ்க்கையை விவரிக்கும் ‘Love’ தொடர்.

உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70% இந்தியாவில்தான் இருக்கிறது. அதனாலேயே ‘Planet Tiger’  என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியாவில் உள்ள 44 வனவிலங்கு சரணாலயங்களின் அருகில் இருக்கும் பள்ளிகளுக்கு இந்த காமிக்ஸ் புத்தகத்தை வழங்கியுள்ளது. ஐரோப்பிய பள்ளிகளில் விலங்குகளைப் பற்றி புரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை இலவசமாக அளித்துள்ளனர். புலிகளைப் பற்றிய ஒரு முழுமையான புரிதலை இந்தப் புத்தகம் வழங்குகிறது.

கதாசிரியர்: ஃப்ரெட்ரிக் ப்ரெமாட் (Frederic Brremaud)

மொழி இல்லா காடு - புத்தக உலகம்

தென் கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்தவர். சிறுவயதில் பண்ணையில் வளர்ந்ததால் விலங்குகள் மீது அன்புகொண்டவர். ‘ஜான் வெய்’னின் கௌபாய் படங்களைப் பார்த்து வளர்ந்தவர். உலகின் தலைசிறந்த காமிக்ஸ் கதைகளைப் படித்து, ஓர் எழுத்தாளராக உருவானார். 17 ஆண்டுகளாக ஏகப்பட்ட புனைபெயர்களில், கதைகள் எழுதும் இவர், பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஓவியர்: ஃப்ரெட்ரிக்கோ பெர்ட்டோலூஸி (Federico Bertolucci)

மொழி இல்லா காடு - புத்தக உலகம்

இத்தாலியைச் சேர்ந்த ஃப்ரெட்ரிக்கோ பெர்ட்டோலூஸி, வால்ட் டிஸ்னியின் கார்ல் பார்க்ஸ் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு, முறையாக ஓவியம் பயின்றவர். வால்ட் டிஸ்னி நிறுவனத்திலேயே வேலைக்கும் சேர்ந்தார். பார்க்ஸ் போலவே தனது ஓவியங்களில் பாதி கார்ட்டூன் ஸ்டைலிலும், பாதி ரியலிஸ்டிக் ஆகவும் வரைவதை பாணியாகக் கொண்டுள்ளார்.

மொழி இல்லா காடு - புத்தக உலகம்

கதை: Love: The Tiger

கதாசிரியர்:
ஃப்ரெட்ரிக் ப்ரெமாட்

ஓவியர்:
ஃப்ரெட்ரிக்கோ பெர்ட்டோலூஸி

மொழி: வசனமே இல்லாத காமிக்ஸ்.

வயது: 9 வயது முதல் அனைவரும் படிக்கலாம்.

வெளியீடு: 2011 (இத்தாலி), 2015 (அமெரிக்கா)

பதிப்பாளர்: Magnetic Press (USA)

புத்தக அளவு:
8.7 x 11.1 Inches

பக்கங்கள்: 72 முழு வண்ணப் பக்கங்கள்

வாங்க: இணையதளம் மூலம்.

மின்னூல் வெளியீடு: Comixology.com

கதை: புலியின் வாழ்க்கையில் ஒருநாள்.

கதை வரிசை:
மொத்தம் 4 புத்தகங்கள்
(Fox, Lion & Dinosaur)

விருதுகள்: ஐரோப்பாவின் பெருமை மிகு‘லூக்கா காமிக்ஸ் விருது’ உட்பட பல விருதுகள்.

சிறப்பு அம்சம்:
ஐரோப்பிய யூனியன் மற்றும் பல நாடுகளில் வனவிலங்கு பாதுகாப்பைப் பற்றி போதிக்க இந்த காமிக்ஸ் மாணவர்களிடையே இலவசமாக அளிக்கப்படுகிறது.