Published:Updated:

அழியவிடல் ஆகாது பாப்பா! - கங்கை டால்பின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அழியவிடல் ஆகாது பாப்பா! - கங்கை டால்பின்
அழியவிடல் ஆகாது பாப்பா! - கங்கை டால்பின்

ஆயிஷா இரா.நடராசன்

பிரீமியம் ஸ்டோரி

ன்பு நண்பர்களே...

அழியவிடல் ஆகாது பாப்பா! - கங்கை டால்பின்

நான்தான் கங்கை டால்பின் எழுதுகிறேன். யார் யாரிடமோ சொல்லி விட்டேன். இப்போது உங்களிடம்   வந்திருக்கிறேன்.

இந்திய நாட்டின் பெருமைகளில் ஒன்று, கங்கை நதி. புனித நதியாம் கங்கையில் மூழ்கினால் பாவங்கள் நீங்கும் எனச் சொல்வதை கேட்டிருப்பாய். ஆனால், அதில் வாழும் உயிரினங்கள் பற்றி யாருக்கும் கவலை இல்லை. கங்கையில் 612 வகை மீன்கள் உண்டு. அதில் நான்தான் பெரியவன். என்னை மட்டும் மீனவர்கள் பிடிக்க மாட்டார்கள். அவர்கள் என்னைக் கடவுளாக நினைப்பவர்கள். காரணம், ஆழமான இடங்களில் மீன்களைப் பிடிக்க வந்து தத்தளிக்கும் மீனவர்களைக் காப்பாற்றி, கரையில் தள்ளிவிடுவோம். ஆனால், இப்போது எங்கள் இனமே பெரிய ஆபத்தில் இருக்கிறது.

அழியவிடல் ஆகாது பாப்பா! - கங்கை டால்பின்

கங்கை நதியில் கலக்கும் ஆலைகளின் கழிவுகளால், எங்கள் இனம் பார்வையை இழந்துவிட்டது. உலகிலேயே நன்னீரில் வாழும் பார்வையற்ற டால்பின்கள் (Blinded Dolphins) என்று அழைக்கிறார்கள். இத்தனைக்கும் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு, நான்தான்.

`சூ சூ’ எனவும் என்னை மக்கள் அழைப்பார்கள். காரணம், என்னால் தண்ணீருக்குள் மூச்சுவிட முடியாது. அதனால், 60 வினாடிக்கு ஒருமுறை தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டி ‘சூ...சூ’ என மூச்சுவிடுவேன். ‘கங்கை தாயின் மொழி சூ...சூ’ என்று ஒரு சமஸ்கிருத செய்யுள் உண்டு நண்பா. ஆனால், இன்று எங்கள் குரல் கேட்பதே இல்லை.

அழியவிடல் ஆகாது பாப்பா! - கங்கை டால்பின்

நாங்கள் குழுவாக வாழ்பவர்கள். ஒரு காலத்தில் 4 லட்சம் பேர் இருந்தோம். டால்பின் கூட்டத்துக்கும் ஸ்கூல் என்றுதான் பெயர். சமீபத்திய WWF (வனவிலங்கு பாதுகாப்பு குழு) கணக்கெடுப்பின்படி 700 டால்பின்களே  மிஞ்சி இருக்கிறோம்.
அணைகட்டுகள், கங்கையைச் சுத்தம் செய்யும் விதமாக பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், பாலித்தீன் முதல் பிளாஸ்டிக் வரை பல காரணங்களால் நாங்கள் பேரழிவின் விளிம்பில் இருக்கிறோம். பிரமாண்ட நதியைத் தூய்மை செய்யும் உயிரினமான நாங்கள் வேகமாக அழிந்துகொண்டிருக்கிறோம். 

கங்கை நதியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள நீர்நிலைகளில் வாழும் பல்வேறு உயிரினங்கள் ஆபத்தில்தான் உள்ளன. இதை நீங்கள் புரிந்துகொண்டு, விழிப்பு உணர்வு பெற வேண்டும்.

நதிகளில் நடக்கும் மணல் கொள்ளை, தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், இயற்கைப் பாதுகாப்பு சட்டங்களை மதிக்காமல் விடப்படும் ஆலைக் கழிவுகள் ஆகியவையே எங்களை போன்ற உயிரினங்களின் அழிவுக்குக் காரணம்.

அழியவிடல் ஆகாது பாப்பா! - கங்கை டால்பின்

இவற்றை உங்கள் காலத்திலாவது தடுத்தும் நிறுத்தும் முயற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். எங்களின் பிரச்னையை உங்கள் நண்பர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என எல்லோருக்கும் தெரியப்படுத்த  வேண்டும். செய்வீர்களா நண்பர்களே?

நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். உனது தோழன் கங்கை டால்பின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு