சென்னை அண்ணாசாலை அருகேயுள்ள மீரான் சாகிப் தெருவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. 70-களில் தொடங்கிக் கொஞ்ச காலம் முன்புவரை தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான திரைப்பட விநியோக வர்த்தகம் இங்குதான் நடைபெற்று வந்தது. கோடம்பாக்கத்திலிருந்து பிரிண்ட் ஆகிவரும் சினிமா படச்சுருள்கள் அடங்கிய ஃபிலிம் பெட்டி, பேரம் முடிந்தபின் இங்கிருந்துதான் திரையரங்குகளுக்குச் செல்லும். இப்போது எப்படி இருக்கிறது மீரான் சாகிப் தெரு?

தமிழ் சினிமாவில் தற்போது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் பல தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் முன்னொரு காலத்தில் உருவான இடம் இதுதான். விநியோகஸ்தர்கள் அலுவலகங்களாலும், தியேட்டர் உரிமையாளர் அலுவலகங்களாலும் சூழப்பட்டிருந்த பிஸியான இடம் தற்போது அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறது. திரைப்பட விநியோகஸ்தர்கள் பற்றி விசாரித்தால் பலர் தலையைச் சொறிகிறார்கள். இந்தத் தெருவில் பல காலமாக தொழில் செய்துகொண்டிருக்கும் ஒரு சிலருக்கு மட்டும்தான் இந்த ஏரியாவில் தமிழ்சினிமாவின் வர்த்தகம் இருந்தது பற்றித் தெரிகிறது.

ஏ.வி.எம். அலுவலகம் உள்பட பல விநியோகஸ்தர்களின் அலுவலகங்களும், விநியோக வியாபாரமும் 70-களுக்கு முன்புவரை தாயார் சாகிப் தெருவில் நடந்து வந்திருக்கிறது. அதன்பின் இந்த மீரான் சாகிப் தெருவிற்கு இடம்பெயர்ந்திருக்கிறது. டிஜிட்டல் வரத்திற்கு முன்பான 90-களின் இறுதிவரை இங்குதான் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் மொத்த விநியோக வியாபாரமும் நடைபெற்றது.

`காதலில் விழுந்தேன்', `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' போன்ற திரைப்படங்களை விநியோகம் செய்திருக்கும் `தேவி மூவிஸ்' உரிமையாளர் சந்திரன், ``கிட்டத்தட்ட 300 விநியோகஸ்தர்கள் இந்த ஏரியால இருந்தாங்க. அப்போ தொழில் நல்லா இருந்தது. வியாபாரம் அமோகமா இருந்தது. இன்னைக்கு எல்லா தியேட்டர்லேயும் ஒரே நேரத்துல படத்தை ரிலீஸ் பண்ணிடுறாங்க. டியூப் (கியூப்) வந்ததுல இருந்து எல்லாமே போச்சு! பிரின்ட் போட ஒண்ணுமே இல்லாம முக்கால்வாசி லேப் மூடிட்டாங்க. கோடம்பாக்கம் ஏரியாவில் இதைச் சார்ந்து இருந்த 10,000 தொழிலாளிங்க வேற தொழில் தேடிப் போயிட்டாங்க. ஜெமினி, பிரசாத், விஜயா லேப் எல்லாம் இன்னைக்குக் காலி. கிட்டத்தட்ட இந்தத் தெருவில் இருந்த எல்லோரும் போயிட்டாங்க. நானும் வெள்ளிக்கிழமை மட்டும் ஆபீஸ் திறக்கிறேன். இந்தத் தெரு முழுக்க எலக்ட்ரானிக்ஸ் கடைகள் வந்தாச்சு. சினிமா டிஸ்ட்ரிப்யூசன் ஆபீஸ்களே இல்லை. அப்படியொரு பிஸினஸ் நடந்ததுக்கான தடமே இல்லாம மாறிடுச்சு. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சினிமா மட்டும்தான். இந்தத் தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆனா இவ்வளவு வியாபாரம் ஆகும், இவ்வளவு லாபம் வரும்னுதான் சார் எங்களுக்குத் தெரியும். கடவுள் புண்ணியத்துல எங்க பிள்ளைங்களை நல்லா படிக்க வெச்சுட்டோம். வேற எங்கேயாவது கைகட்டி வேலை செய்ய மனசு இடம் கொடுக்க மாட்டேங்குது. வேற தொழில் எதுவும் தெரியாததால அப்படியே உட்கார்ந்துட்டோம்'' எனத் தனது ஆதங்கத்தைக் கொட்டுகிறார்.

படச்சுருள்கள் அடங்கிய பெட்டிகளை அடுக்குவது, திரையரங்க உரிமையாளர்களின் வாகனத்தில் படப்பெட்டிகளை ஏற்றுவது என இதைச் சார்ந்து இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். முன்பு அவர்களுக்கென்று தனி அசோசியேஷனே இருந்திருக்கிறது.

முன்பு படச்சுருள்களின் ப்ரின்ட் போடுவதற்குக் குறைந்தபட்சம் 40,000 வரை செலவாகியிருக்கிறது. டிஜிட்டல் பிரிண்ட்டிற்கு தற்போது அதிகபட்ச செலவே 15,000 தான் ஆகிறது. பிரின்ட் செலவு குறைகிறது என்ற நல்ல விஷயத்திற்குப் பின், இந்தத் தொழிலைச் சார்ந்திருந்த தொழிலாளிகள் வேலை இழந்து வேறு தொழில்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதும் நிஜம். இது மட்டுமன்றி திரையரங்க விநியோகத் தொழில் நலிவுற்றதற்கு தியேட்டர் டிக்கெட் விலையேற்றம், நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் போன்ற மறைமுகக் காரணங்களும் இருக்கின்றன. லட்சக்கணக்கில் வியாபாரம் நடைபெற்ற தொழில் கோடிக்கணக்கிற்கு மாறத் தொடங்கியபோதே இந்த வியாபாரம் பெரும் பணம் படைத்தவர்களின் கைகளுக்குச் சென்றிருக்கிறது.

சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் பணிபுரியும் தமிழரசி, ``முன்னாடி இந்தத் தெரு முழுக்க தியேட்டர் ஓனருங்க வருவாங்க. இப்போ எதுவும் கிடையாது. திரையரங்குகளுக்கு நேரடியா டிஜிட்டல் பிரின்ட் உரிமை போயிடுது. அது மட்டுமில்லாம இன்னைக்கு டென்ட் கொட்டாய் ஒண்ணுகூட கிடையாது. செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 100 தியேட்டர் இருந்துச்சு. இப்போ எல்லாம் கல்யாண மண்டபமா மாறிடுச்சு. முன்னாடி `ஷிஃப்ட்டிங்' மட்டுமே பெரிய வியாபாரமா இருந்தது. நல்ல திரைப்படங்கள் எல்லாம் சில மாதங்களுக்குப் பிறகு செகண்ட் ரிலீஸ் ஆகிப் பல தியேட்டர்களுக்கு லாபம் கொடுத்திருக்கு. இப்போ பழைய படங்கள் எல்லாம் டி.வி-யிலேயே ஒளிபரப்பாகுறதால அந்த வியாபாரமும் கிடையாது'' என்கிறார்.

சினிமாவையே மிஞ்சும் கதைகள் இன்னும் இந்தத் தெருவுல நிறைய இருக்கு பாஸ்!

- கருப்பு, படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்