`50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே' - சினிமா ரசிகர்களைக் கிளுகிளுப்பில் ஆழ்த்திய படம். அதன் அடுத்த பாகம் `50 ஷேட்ஸ் டார்க்கர்' என்ற டைட்டிலில் பிப்ரவரி மாதம் ரிலீஸ்! படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள் முதல் பாகத்திற்குக் கொஞ்சமும் குறையாமல் கவர்ச்சி நிரம்பி வழிவதாக ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார்கள். அதிலும் ஹீரோயின் டகோட்டா ஜான்சன் வேற லெவலாம். இதனால் படத்திற்கு ஆர் ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். #இனிமே அப்படித்தான்!

ஹாலிவுட் நடிகைகளுக்கு எப்போதுமே வயதாகிவிட்டால் ஓரங்கட்டப்படுவோமோ என்ற பயம் இருக்கும். ஆனால், தனக்கு அந்த பயம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சார்லீஸ் தெரோன். `வயதாவது இயற்கைதானே. இதில் பயப்பட என்ன இருக்கிறது. எனக்கு 41 வயது. முன்பைவிட இப்போதுதான் அதிக பிஸியாக இருக்கிறேன். இனியும் இருப்பேன். டோன்ட் ஒர்ரி மக்களே' என அவர் கருத்துச் சொல்ல, இதுவும் நியாயம்தானே எனக் கை கொடுக்கிறார்கள் அவரின் கொலீக்குகள். #வயசானாலும் அழகுதான்!

பாப் பாடகி மிலி சைரஸ் ஹிலாரி க்ளின்டனின் தீவிர ஆதரவாளர். அவருக்காகப் பிரசாரம் எல்லாம் செய்தார். ஆனால் ரிசல்ட் ட்ரம்பிற்கு சாதகமாக வர, அம்மணி மிகவும் அப்செட். `ஹிலாரிதான் அதிபர் பதவிக்குத் தகுதியானவர். எல்லோரும் என்னைப் போலவே யோசிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் மக்களின் முடிவு வேறு மாதிரியாக இருக்கிறது. வேறு வழியில்லை. ட்ரம்ப்பை அதிபராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' எனக் கண்ணீர் கலந்து அவர் ஸ்டேட்மென்ட் விட, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் குவிகின்றன. #எப்படியானாலும் ட்ரெண்டில்!

மொத்த மீடியா உலகமும் இப்போது உச்சரிக்கும் பெயர் மேகன் மார்க்கிள். அமெரிக்க டி.வி நடிகையான மேகன் மார்க்கிளும் இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் காதலிப்பதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது தங்களின் ப்ரைவஸியைப் பாதிப்பதாக இந்த ஜோடி நினைக்க, இப்போது அதிகாரபூர்வமாக, `அவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள்தான். அதற்காக அவர்கள் ப்ரைவஸியில் தலையிடுவது சரியில்லை' என அரண்மனை வட்டாரம் அறிவித்திருக்கிறது. `ரைட்டு விடுங்க' என ஒதுங்குகின்றன ஹாலிவுட் மீடியாக்கள். #ப்ரைவஸி முக்கியம் மக்களே!

- ஃபாலோயர்