இளையராஜா தனித்துப் பாடிய பாடல்கள்தான் பாஸ் இந்தவார சினிமா விடுகதைக்கான விடைகள்.

1. தாயின் பெருமையைப் பறை சாற்றும் பாடல். ஆனால் அதிகம் பாடப்பட்டது அ.தி.மு.க மேடைகளாகத்தான் இருக்கும். ஆயிரம் பாட்டு இருந்தாலும் இந்தப் பாட்டு சிறப்பு. என்ன பாட்டு?

2. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் இளையராஜா டைட்டில் சாங் பாடியே ஆக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அதிகம் வற்புறுத்தினார்களாம். சும்மாவா வருடம் கடந்தும் ஓடிய படத்தில் இசைஞானியின் டூயட்டும் ஹிட்டுதான். இந்தப் பாட்டு எந்தப் பாட்டு?

3. அன்றைய யூத்துகளுக்கு மட்டுமல்ல. இன்றைய ட்ரெண்டிங் பாய்ஸ்களுக்கும் இந்தப் பாட்டு காலாட்டி, தலையாட்டி, ஸ்டெப் வைக்கும் பாட்டுதான். தன்னைப் பற்றிப் புகழ் பாடுவது போல் தோன்றும் இந்தப் பாடலை அவரே பாடினாலும் இது பொதுப்பாடல்தான். என்ன பாட்டு பாஸ்?

4. இரவு நேரத்தில் இந்தப் பாட்டை சத்தம் குறைவாக வைத்துக் கேட்டிருக்கிறீர்களா? கண்ணீர் அரும்பும் பாட்டுக்கு இசைஞானியின் தாலாட்டும் குரலும் ஒரு காரணம். படத்தின் பெயரில் பூ இருக்கும். நாயகன் பெயரில் இனிப்பு இருக்கும். என்ன பாட்டு இது?

5. காலேஜ் பாய்ஸ்களின் ஏக்கப் பெருமூச்சுகளை இளையராஜா குரலில் கேட்பதும் தனி சுகம்தான். ஹார்ட்டை டச் செய்யும் பாடல்கள் பல தந்திருந்தாலும் ஹார்ட்டுக்காகப் பாடிய பாடல் இது. வெக்கை பற்றி யோசிக்காம விருட்னு சொல்லுங்க பதிலை. என்ன பாட்டு பாஸ்?

6. எத்தனை பேரின் ஆட்டோகிராஃப் ஞாபகங்களைக் கிளறிவிட்ட பாடல். ஆறுதல் தேடி அலையும் குரலை அற்புதமாகப் பதிவு செய்திருந்தார் இளையராஜா. எப்போது கேட்டாலும் இதயத்தை ஈரமாக்கும் பாட்டு என்ன பாட்டு?

7. இந்தப் பாட்டோடு படமும் முடியும். தியேட்டர் விட்டு வந்த பிறகும் முடியாமல் துரத்தும் இளையராஜாவின் கையறுநிலைக் குரல். முண்டாசுக் கவியின் வார்த்தையில் தொடங்கும் இந்தப் பாட்டைக் கேட்டு அழாதவர் யார்? சீயானுக்கு வாழ்வு தந்த இந்தப் படத்தின் இந்தப் பாட்டு மரணத்துக்கானது. என்ன பாட்டு சொல்லுங்க?

8. கேப்டனின் 100 நாட்கள் படத்தில் ஒன்று. அவரின் புகழ் பாடித் தொடங்கினாலும் பாட்டு சோகப் பாட்டுதான். இப்பவும் சேனல்களில் ஒலிக்கும் பாட்டின் முதல் வரியிலே விஜயகாந்த்தின் இன்னொரு படமும் வந்ததே... என்ன பாட்டு இந்த சிச்சுவேஷன் பாட்டு?

- கே.கணேஷ்குமார்

விடைகள்: 1. திருப்பு முனை - அம்மான்னா சும்மா இல்லடா, 2. கரகாட்டக்காரன் - பாட்டாலே புத்தி சொல்வார்..., 3. அக்னி நட்சத்திரம் - ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா..., 4. ஆவாரம் பூ - ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே..., 5. இதயம் - ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல..., 6. அழகி - என் குத்தமா உன் குத்தமா..., 7. சேது - வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா...,
8. சின்னக் கவுண்டர் - அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே...