Published:Updated:

இது ஒதுக்கப்பட்வர்களின் சமூகம்!

இது ஒதுக்கப்பட்வர்களின் சமூகம்!

##~##

ரிக்குறவர்கள் - ஒடுக்கப்பட்டவர்களில் ஒதுக்கப்பட்டவர்கள்!

 டால்டா டின்கள், குளிக்காத அழுக்கு தேகம், அந்நியப்பட்ட மொழி எனக் குறவர்கள் என்றாலேநம் மனதில் ஏளனமும் அருவருப்பும்தான் மேலோங்குகிறது.  ஆனால், இயற்கையோடு இயைந்து வாழும் நாடோடி களான நரிக்குறவர்களை நாம் மதிப்பது இல்லை. நம்மோடு வரிசையாக நின்று கடையில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை என எல்லா உரிமைகள் இருந்தும் எல்லா மனிதர்களுக்குமான உரிமைகளை அனுபவிக்க முடியா தவர்களாக இருக்கும் நரிக்குறவர்களின் நலன் காக்க புதுவையில் உருவாக்கப்பட்ட அமைப்புதான், 'சமூகம்’!

புதுவையில் 1,500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். மக்கள் குப்பை கொட்டும் அசுத்தமான இடங்கள்தான் இவர்களின் குடியிருப்பு. அந்தக்குப்பை களில் இருந்து கிடைக்கும் உணவுகளை உண்டும், பழைய இரும்பு போன்ற பொருட்களைப் பொறுக்கி விற்றும் வாழ்கையை ஓட்டுகின்றனர். இவர்கள் வாழும் இடம் சுகாதாரமற்று உயிருக்குக் கேடு விளைவிக்கும் அளவுக்கு உள்ளது. இவர்களுக்கும் நல்ல உணவு உண்ண வேண்டும், தங்களது குழந்தை களும் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டுதான். ஆனால், இவர் களின் மீது அக்கறை செலுத்துவது யார்?

இது ஒதுக்கப்பட்வர்களின் சமூகம்!

இவர்களை நல்வழிப்படுத்தவும், இவர் களின் குழந்தைகளும்  மற்ற குழந்தைகள் போலப்  படிக்கவும் தரமான உணவளிக்க வும், சுகாதாரமாக வாழவும் பாடுபடுகின்ற    இயக்கமே 'சமூகம்’ தொண்டு நிறுவனம். இந்த நிறுவனம் 40 நரிக்குறவக் குழந்தை களைத் தத்தெடுத்து, முன்று வேளை உணவு அளித்து, இலவசமாகக் கல்வி தந்து அவர்களை நல்வழிப்படுத்துகின்றது.

மக்களால் ஒதுக்கப்பட்ட நரிக்குறவர்களுக்காகப் பல சேவைகளைச் செய்துவரும் 'சமூகம்’ அமைப்பின் இயக்குநர் புருனோவிடம் பேசினோம்.

''என் அப்பா ஒரு டாக்டர். தொழு நோயாளிகளுக்குச் சேவை செய்வதில் மன நிறைவு அடைந்தவர். அந்தத் தாக்கம் எனக்குள்ளும் பதிந்தது. நான் விளம்பர நிறுவனம் நடத்திவருகிறேன். என்தொழில் நேரம் போக கிடைக்கும் நேரத்தில் தொழு நோயாளிகளுக்கு உதவி செய்வது என் வழக்கம்.

ஒரு நாள் கல்யாண மண்டபத்தில் இருந்து வீசப்பட்ட எச்சில் இலையை நரிக்குறவர்கள் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்த்தேன். எனக்கு மனம் பாரமாகிவிட்டது. என் சக ஊழியரான பாஞ்சாலியிடம் இதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டபோதுதான் லாஸ் பேட்ல 1,500-க்கும் அதிகமான நரிக்குறவர்கள் இருக்கும் விவரம் தெரிந்தது. அவர்களுக்கு உதவ முடிவு எடுத்தோம்!

பொதுவா, நரிக்குறவர்களுக்கும் நமக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருக்கு. எந்த நரிக்குறவர்களையும் நாம மதிச்சது இல்லை. யார் மீதும் அன்பு செலுத்தியது இல்லை. அக்கறை காட்டியது இல்லை. அதனாலேயோ என்னவோ நாங்க போனப்ப அவங்களும் எங்களை மதிக்கலை. எங்களிடம் பேசக்கூட அவங்க தயாரா இல்லை. ஆனா, நாங்க விடாம ஒரு மாசம் அவங்க இடத்துக்குப் போய் தினமும் பார்த்துப் பேசிப் பழகினோம்.

நரிக்குறவர் குழந்தைகளுக்காக அரசு கட்டிய ஆரம்பப் பள்ளிக்கூடம் பாழடைஞ்சுகிடந்தது. அரசு அதிகாரிகளை அணுகிப் பேசினப்ப 47 ஆயிரம் ரூபாயை அரசாங்க நிதியாகத் தர முன் வந்தாங்க. அப்புறம் 'சமூகம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பிச்சு நிதி திரட்டினோம். 50 ஆயிரம் ரூபாய் போட்டு நாங்களே எல்லா வேலைகளையும் செய்து கட்டடத்தைக் கட்டி னோம். அதுவரை மரத்தடியில் படிச்ச பசங் களுக்கு அப்பதான் ஒரு விடிவுக்காலம் பொறந் துச்சு. ஆனா, அந்தக் கட்டடமும் பசங்களுக்குப் போதாது. அரசுதான் மேல் நடவடிக்கை எடுத்து அந்தப் பள்ளியை மேம்படுத்தணும்.

இது ஒதுக்கப்பட்வர்களின் சமூகம்!

பள்ளிக்கூடமே போகாத 40 நரிக்குறவர் சிறுவர்களைத் திரட்டினோம். 'சமூகம்’ அறக் கட்டளை முலமா அந்த 40 குழந்தைகளுக்கும் மூன்று வேளை உணவு, நல்ல துணிமணி தந்து ஆரம்பக் கல்வியும் அளிக்கிறோம். வாரத்தில் ஒரு நாள் மட்டும்தான் அவங்க வீட்டுக்குப் போவாங்க. மத்த நாட்களில் 'சமூகம்’ விடுதியில் தான் தங்கி இருப்பாங்க. இங்கே வந்ததுக்கு அப்புறம்தான் இந்தக் குழந்தைகள் ஒழுங்கா தினமும் பல் விளக்கி, குளிக்கவும் செய்றாங்க. இன்னும் நிறைய குழந்தைகளைப் பாதுகாக் கணும்னு ஆர்வம்தான். ஆனால், நிதிதான் பெரிய சிக்கல். நாங்களும் நிறைய பேர்கிட்ட உதவி

கேட்டோம். இளகிய மனம்கொண்ட சிலர்தான் உதவ முன்வர்றாங்க. ராம் தங்க நகை மாளிகை நன்கொடையாக் கொடுத்த ஒரு ஆம்னி கார்தான் குழந்தைகளின் போக்குவரத்துக்கு உதவுது.

குறையே இல்லாத சமூகமா குறவர் சமூகத்தை மாத்தணும். இதுதான் 'சமூக’த்தின் நோக்கம்’!'' என்கிறார் புருனோ!  

ஆ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு