Published:Updated:

கண்டுகொள்ளபடாத அழகு!

கண்டுகொள்ளபடாத அழகு!

##~##

தி பரபரப்போடு இயங்கும் மனித மனத்தின் ஒரே ஆசுவாசம்... சுற்றுலா! அப்படி ஓர் ஆசுவாசம் தேடுபவர்களுக்கு ஆனந்தம் அளிக்கும் இடம் பனை மலைப்பேட்டை. அவ்வளவாகக் கவனத்தில் கொள்ளப் படாத ஏராளமான இயற்கை எழிலைத் தனக்குள் மறைத்து வைத்திருக்கும் இடம்தான் பனைமலைப்பேட்டை!

விழுப்புரம் மாவட்டம், ஆனந்தபுரம் அருகே ஒரு சிற்றூர்தான் பனைமலைப்பேட்டை. இந்த ஊருக்குள் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது சுமார் 130 அடி உயரம் இருக்கும் ஒரு மலை. அதன்மேல் 'தாளகிரீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.பி. 700-728ம் ஆண்டில் அந்தப் பகுதியை ஆட்சி செய்த ராஜசிம்மன் என்ற மன்னனால் கட்டப் பட்டதாம். இந்தக் கோயிலில்  உள்ள தூண்கள்அனைத் தும் கருங்கற்களால் கட்டப்பட்டவை. மொத்தம் ஐந்து லிங்கங்களை உள்ளடக்கி இருக்கும் இந்தக் கோயிலின் சுவர்களில் ஆங்காங்கே முன்னங்கால்களைத் தூக்கி நிற்கின்றன சிங்கச் சிலைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் கோயிலின் மூன்று புறங்களையும் சுற்றி பெரிய ஏரி ஒன்று அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் மேல்புறத்தில் வெக்கை தெரியாமல்  'ஜிலு ஜிலு’வென அடிக்கும்காற்று நம்மை ஆரத் தழுவிப் பரவசப்படுத்துகிறது.

கண்டுகொள்ளபடாத அழகு!

  இந்தக் கோயிலில் பொங்கலுக்கு மறு நாளும், சித்திரை மாதத்தில் ஒரு நாளும் மட்டுமே விழா நடக்கிறது. அப்போது மட்டும் சொற்ப அளவில் மக்கள் கூட்டம் வருகிறது. ஆனால், இந்த சிவன் கோயிலில் வழிபாடுகளும் நடப்பது இல்லை. மலை யைப் பார்வையிட யாரும் வருவதும் இல்லை. இதனாலேயே சமூக விரோதி களின் கூடாரமாக இந்த இடம் மாறிவிடும் அபாயமும் இருக்கிறது!

''இந்த மலைக் கோயில் பழங்காலத்துக் கோயில். இந்தக் கோயிலை ஒட்டி உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்கு ஒரு வருடத்துக்கு மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏலம் போகும். மலை ஏறுவதற்கு பாதி தூரம் மட்டுமே படிக்கட்டில் கைப்பிடி இருக் கிறது. அனைத்து இடங்களிலும் கைப்பிடி அமைத்தால் மாற்றுத்திறனாளிகள் ஏறுவ தற்கு உதவியாக இருக்கும். சில இடங்களில் படிக்கட்டுகளும் சரியில்லை. அதை சீர் செய்யலாம். கோயில் வருமானத்தின் பாதியைச் செலவு செய்தாலே இதை ஒரு சுற்றுலாத் தலமாக  மாற்றிவிடலாம். சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். அரசுக்கு வருவாயும் கிடைக்கும்!'' என்கிறார் கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா.

இந்தக் கோயிலின் கருவறையில் எந்தக் கோயிலிலும் இல்லாத வண்ணம், பல ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. இந்தப் பகுதி முழுவதும் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பழங்கால அரிய பொருட்கள் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால், குடி இருக்க ஒரு வீடு கட்ட வேண்டுமானாலும் தொல்பொருள் துறையின் அனுமதி பெற்றுத் தான் கட்ட வேண்டுமாம்.

கண்டுகொள்ளபடாத அழகு!

இப்படிப் பாதுகாக்கப்பட்டாலும் இது ஒரு சுற்றுலாத் தலமாக ஆக்கப்படாததால் மலையின் அழகு யாராலும் ரசிக்கப்படாமலே இருக்கிறது.மலை, கடல், விவசாய வயல்கள் என வெவ்வேறு நிலப்பரப்பை உள்ளடக்கிய பெரிய மாவட்டம் விழுப்புரம். ஆனால், பொருளாதாரரீதியாக பெரிய அளவு முன்னேற்றம் இல்லாத விழுப்புரத்தின் நிலையை உயர்த்துவதற்கு நிச்சயம் உதவும் பனைமலைப்பேட்டை!

- அற்புதராஜ், படங்கள்: ஜெ.முருகன்