Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி
அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

படிக்கிறது காலேஜு... நெனப்பு மட்டும் ‘ப்ரீ கேஜி’!

``என்னம்மா கண்ணு சொல்லாம கொள்ளாம என்ட்ரி போட்டிருக்க?’’

``ஏன் மேடம்கிட்ட சொல்லிட்டுதான் வரணுமா? அனுஷாவும் ஆன் தி வே!’’

``வரட்டும் வரட்டும்!”

``சரி, சாப்பிட எனக்கு என்ன வெச்சிருக்க?”

``திங்கிறத தவிர உருப்படியா வேற எதையாச்சும் பண்றியா இனியா?’’

``என்னடி இப்படி சொல்லிட்ட? நேத்து முழுக்க ஏ.டி.எம் வாசல்ல தூங்கிட்டா இருந்தேன்..? நிறைய பிஸ்கட்ஸ், வாட்டர் பாட்டில்னு கொண்டு போய்  வயசானவங்க, உடம்பு சோர்வாகி நிக்கிறவங்களுக்கு எல்லாம் கொடுத்தேன் தெரியுமா?”
``இதோ, அனுஷா வந்துட்டா. அனு, இந்த நியாயத்தை நீயே கேளேன். மேடம் நேத்து சோஷியல் சர்வீஸ் பண்ணினாங்களாம்.”

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

``ஆமா ஆதிரா... நான்கூட கேள்விப்பட்டேன். கிளாஸ் கட் அடிச்சிட்டு நமக்குக்கூடச் சொல்லாம நல்லது பண்ணியிருக்கா இனியா!”

``வெரி குட் வெரி குட்! சேவைனு பேசும்போது, எனக்கு கோவை டாக்டர் பாலசுப்ரமணியம்தான் டக்குனு நினைவுக்கு வர்றார். ஏழை மக்களுக்காகவே கடைசி வரைக்கும் கிளினிக் நடத்தினவர். 20 ரூபாய்க்கு மருத்துவம்னா அது எவ்ளோ பெரிய சேவை! திடீர்னு மாரடைப்பு வந்து இறந்துட்டார்.’’

``நான்கூட அந்த நியூஸை டி.வி-யில பார்த்தேன். ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காக அஞ்சலி செலுத்துறதைப் பார்த்தப்போ, அவர் வாழ்ந்த வாழ்க்கையின் மேன்மை புரிஞ்சது.”

``ஆமாம்பா... தனக்குனு சொத்து எதுவும் சேர்த்து வெச்சுக்காம சேவையே கொள்கையா வாழ்ந்தார். ஆனா, நாமெல்லாம் என்ன பண்றோம்? தேவைக்கு அதிகமான வாழ்க்கையை வாழறோம்... இல்லாட்டி வாழ ஆசைப்படுறோம்!”

``அனு... மினிமலிஸ்ட் லைஃப் பத்தி நீ  கேள்விப்பட்டிருக்கியா?”

``அப்படீனா என்ன ஆதிரா?”

``அதாவது அத்தியாவசியத் தேவையான பொருட்களை மட்டும் வெச்சுக்கிட்டு தேவையில்லாத பொருட்களை எல்லாம் மூட்டை கட்டி ஓரமா வெச்சுட்டு வாழறது...”

``இதில் என்ன சிறப்பு, பிரயோஜனம்?”

``இருக்கு. ஒரே தேவையைப் பூர்த்தி செய்யுற ரெண்டு பொருட்கள் வீட்ல இருந்தா நமக்கு  நன்மை இருக்கும்னு நாம நினைச்சோம்னா அது தப்பு. அது பல இடங்கள்ல நன்மைக்குப் பதிலா நம்மோட நேரத்தையும் உழைப்பையும் மறைமுகமா விரயமாக்கிட்டு வருது.’’

‘இதைப் பத்தி எனக்கு முழுசா சொல்லேன்... கேக்கவே இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு!’’

``லிங்க் அனுப்புறேன் படிச்சுக்கோ.’’

``சரி... நீ கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு காஸ்ட்லி சைக்கிள் வாங்கினியே... அது என்ன ஆச்சு கண்ணு?’’

``ஹி... ஹி.... அதுவந்து... ஓட்ட நேரம் இல்ல.”

‘’90 வயசு பாட்டி ஒருத்தவங்க தினமும் 30 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுறாங்க. அவங்களைப் பார்த்தாச்சும் திருந்து தாயி.’’

``வந்ததுல இருந்து ரெண்டு பேரும் என்னையே தாக்கிட்டு இருக்கீங்க. உங்க பேச்சு கா!”

``பாருடா... கொழந்தப்புள்ள படிக்கிறது காலேஜு... நெனப்பு `ப்ரீ கேஜி' பேபின்னு!’’

``எந்திரன் 2.0 போஸ்டர் வந்துச்சே பார்த்தியா?!”

``சூப்பர் ஸ்டாரும்... அக்‌ஷய் குமாரும் செம போஸ்ல!’’

``போஸ்டர் வந்த கொஞ்ச நேரத்துலயே சோஷியல் மீடியா முழுக்க லைக்ஸ் அள்ளுது. படம் நல்லா வந்தா சரி!’’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

இப்படி ஒரு வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா? #MinimalistLife
http://bit.ly/2fHShmY

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

இந்த 90 வயது பாட்டி தினம் எவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டுகிறார் தெரியுமா?
http://bit.ly/2fr7GXP

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

கலங்க வைத்த இறுதி ஊர்வலம்... 20 ரூபாய் டாக்டருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!
http://bit.ly/2fTQcXU

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு