Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - ``முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனுஷா... ஆதிரா... இனியா! - ``முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?!”
அனுஷா... ஆதிரா... இனியா! - ``முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?!”

டிஜிட்டல் கச்சேரி

``என்ன அனு... கடைசியில இப்படி ஆயிடுச்சே!’’

``இனியா... ஃபீல் பண்ணாதே. வரலாறுகள் எப்பவும் இந்த மாதிரியான சம்பவங்களைக் கடந்துட்டு வர்றதும் அதுக்கு மக்கள் பக்குவப்படுறதும் வழக்கம்தானே?”

``மறைந்த முதலமைச்சரைப் பத்தி, அவங்க மறைவுக்குப் பிறகுதான் நிறைய விஷயங்களைப் படிச்சும் பார்த்தும் தெரிஞ்சுக்கிட்டேன்.’’

அனுஷா... ஆதிரா... இனியா! - ``முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?!”

``நானும்தான் அனு. துறுதுறு பெண்ணா சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஜெயலலிதா, கால ஓட்டத்தில் எப்படி முதலமைச்சர் ஆனாங்கனு ஒரு கட்டுரையைப் படிச்சப்ப, அவங்களோட அந்தப் பயணம் ரொம்ப வியப்பா இருந்தது!”

``சரி ஆதிரா... என்ன இன்னைக்கு இவ்ளோ சோர்ந்து உட்கார்ந்திருக்க?’’

``வேற என்ன? அதேதான். பீரியட்ஸ் டைம். நாளைக்கு ஸ்விமிங் காம்படிஷன் இருக்கு. இன்னைக்கு இப்படி. அடுத்த வாரம்தான் என் மென்சுரல் டேட். பார்த்தா இப்படி ஆயிடுச்சு. எல்லாம் என் நேரம்.’’

``ஏய் ஆதிரா... இயற்கையான உடல் நிகழ்வுக்கு உன்னை ஏன் குற்றம் சொல்லிக்கிற?”

``இல்ல இனியா... அடுத்த வாரம்தான் என்பதால போட்டியில கலந்துக்கலாம்னு ஆர்வமா இருந்தேன். இல்லைன்னா, பீரியட்ஸ் தள்ளிப்போட டேப்லட் சாப்பிட்டிருப்பேன்.’’

``இப்பவும் உன்னால ஸ்விமிங் காம்படிஷன்ல கலந்துக்க முடியும். இதுக்கு ஒரு தீர்வு இருக்கு.’’

``என்னடி சொல்ற? ஒண்ணும் புரியல.”

``உனக்கு மென்சுரல் கப் பத்தி தெரியுமா?’’

``இல்லையே. அப்படீன்னா என்ன?”

``நாப்கினுக்குப் பதிலா பீரியட்ஸ் டைம்ல இந்த  மென்சுரல் கப்பை பயன்படுத்தலாம்.’’

``கற்பனைகூட செய்ய முடியலையே...”

``இது கப் மாதிரி இருக்கும். சிலிக்கான்ல செய்யப்பட்ட அந்த கப் மாதவிடாய் நேரத்துல நம் உறுப்புக்கு உள்ளேயே செலுத்தப்படுறதால, மழை, நீச்சல்னு நாப்கின் நனைஞ்சிடுமோங்கிற கவலை இல்லை.”

``இது யூஸர் ஃப்ரெண்ட்லியா இருக்குமா?”

``நிச்சயமா! நீயே சுலபமா பயன்படுத்திக்கலாம். ஒருமுறை வாங்கின மென்சுரல் கப்பை 10 வருஷத்துக்குப் பயன்படுத்த முடியும்!”

``அட... ஆச்சர்யமா இருக்கே!”

``இதைப் பத்தி நீ முழுசா தெரிஞ்சுக்க ஒரு ஆர்டிகிள் லிங்க் அனுப்புறேன். படிச்சுப் பாரு... உனக்கே புரியும்.’’

``ஆதிரா பாவம். அவளுக்கு எதுவுமே தெரியாது. காய்கறிகூட வாங்கத் தெரியாது.”

``என்னமோ மேடம் சகலகலாவல்லி மாதிரி பேசுறாங்க. உனக்கு முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?”

``முட்டைகோஸ்  வாங்குறதுல என்ன மேஜிக் இருக்கு. ஃப்ரெஷ்ஷா இருந்தா வாங்க வேண்டியதுதான்.’’

``அதான் இல்ல. ஒவ்வொரு காய்கறியையும் எப்படிப் பார்த்து வாங்கணும்ங்கிறதுல நிறைய விஷயங்கள் இருக்கு. சொல்லித் தர்றேன்... கத்துக்கோ!”

``சரி... அமீர்கானோட ‘டங்கல்’ பட ட்ரெய்லர் பார்த்தீங்களா?! தூள்ல?!”

``ஆமா நான்கூட பார்த்தேன். ஸ்போர்ட்ஸ் ஸ்டோரி. ரிலீஸுக்கு ஆவலுடன் காத்திருப்போம்.”

``ஆதிரா மேடம்... கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவல் போனதுல இருந்து நீங்க பாலிவுட் பக்கம் ஒதுங்கிட்டீங்க போல!”

``எனக்கு மொழி முக்கியம் இல்ல. சினிமாவை சினிமாவா பார்க்குறேன். நீங்களும் அப்படியே பாருங்க!”

``இப்படி எதுக்கு மைக் கிடைச்சுட்ட மாதிரி கருத்து சொல்ற? உன்ன்ன்னை..!”

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - ``முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?!”

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - ``முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?!”

மாதவிடாய் சமயத்தில் ‘மென்சுரல் கப்’ பயன்படுத்தலாமா?
http://bit.ly/2gFaeDe

அனுஷா... ஆதிரா... இனியா! - ``முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?!”

துறுதுறு கோமளவல்லி அதிரடி ஜெய லலிதா ஆன கதை!
http://bit.ly/2gF4Yzw

அனுஷா... ஆதிரா... இனியா! - ``முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?!”

இந்த 15 காய்கறிகள் வாங்கும்போது இதையெல்லாம் கவனிங்க..!
http://bit.ly/2h9CvTv

அனுஷா... ஆதிரா... இனியா! - ``முட்டைகோஸ் வாங்கத் தெரியுமா?!”

டங்கல் ட்ரெய்லர்!
http://bit.ly/2e3aoVe

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு