அடிக்கடி பரப்பப் பட்டாலும் மக்கள்கிட்ட கொஞ்சமும் சுவாரஸ்யமும், பரபரப்பும் குறையாத வதந்தினா அது உலகம் அழியப்போகுதுங்கிற விஷயமாத்தான் இருக்கும். Y2K பிரச்னையும், உலகம் அழியப் போகுதுங்கிற வதந்தியும்தான் 2000-ம் ஆண்டை ஒட்டி நிகழ்ந்த பெரிய சம்பவங்கள். அதுக்கப்புறமா 2012-ம் ஆண்டு மறுபடியும் உலகம் அழியப்போகுதுனு கிளப்பிவிட்டு பயம் காட்டுனாங்க. அப்படி என்னதான் நடந்ததுனு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணலாமா?

மாயா நாகரிகத்தைச் சேர்ந்த மக்களின் காலக்கணக்கைக் குறிப்பிடும் ‘மாயன் காலண்டர்’, 5,126 ஆண்டுகளைக் கொண்டது. இது கி.மு. 3114-ல் தொடங்கி கி.பி. 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியோடு முடிவடைந்தது. வான சாஸ்திரம் உட்பட பல துறைகளில் மாயர்கள் முன்னோடிகளாக இருந்ததால் உலகம் அழியப்போகிறதென்ற வதந்தி கண்டபடி பரவியது. காலண்டர் முடிஞ்சா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கும்கிறதுதானே உலக வழக்கம். இதுக்கா பயப்படுறீங்கனு நாசா விளக்கியது தனிக்கதை.

ஃபிரான்ஸ் நாட்டில் 1500-களில் வாழ்ந்தவர் நாஸ்ட்ரடாமஸ். கி.பி. 3797 வரைக்குமான உலகின் பல நிகழ்வுகளை இவர் முன்கூட்டியே கணித்துச் சொல்லியிருப்பதாக நம்பப்படுகிறது. உலக அளவில் எந்தச் சம்பவம் நடந்தாலும் நியூஸ் சேனல் தேடிப்பார்க்கிற மாதிரி, நாஸ்ட்ரடாமஸ் இதைப்பற்றி என்ன சொல்லிருக்கார்னு தேடிப் பார்க்கிறதே சிலருக்கு வேலையாப் போச்சு. உலகம் அழியப்போறதா வதந்தி பரவியபோதும், ‘நாஸ்ட்ரடாமஸ் முன்னாடியே சொல்லிருக்காருப்பா. பெரிய விண்கற்கள் பூமியைத் தாக்கும், எரிமலை வெடிச்சு பூமி ரணகளமாகும். பனிக்கட்டி எல்லாம் உருகி பூமி தண்ணியில மூழ்கிரும். இவ்வளவு ஏன்... சூரியனோட ஆயுள் முடிஞ்சு உலகமே இருண்டுரும்’-னு கற்பனையைக் கலந்துகட்டி நம்ப வெச்சாங்க. திடீர் திடீர்னு உடையுதாம்... சாயுதாம்!

இது மாதிரி இன்னும் ஏகப்பட்ட வதந்திகள் உலகம் முழுக்க பரவியது. இந்த ரணகளத்துலேயும் எல்லா வதந்திகளையும் சேர்த்து வெச்சு ‘கொலம்பியா பிக்சர்ஸ்’ ‘2012’ என்ற பெயரில் தயாரித்த திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளியாகி வெறித்தனமாக கல்லா கட்டியது. வழக்கமா பூமியைக் காப்பாத்துற அமெரிக்கக்காரனே அழியிற மாதிரி எடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும். படத்தைப் பார்த்தவங்க 2012-ம் வருஷம் பிறந்ததுமே, ‘எல்லாம் கொஞ்சநாள்தான்... பூமாதேவி வாயப் பொளக்கப் போறா. நாம எல்லாம் உள்ள போகப்போறோம்’ மோடில் சுற்றிக்கொண்டிருந்தனர். டிசம்பர் 21-ம் தேதி கழிந்து இரண்டு நாட்கள் வரை இந்த பயம் பலரிடம் இருந்தது. அதன் பிறகுதான் நார்மல் மோடுக்குத் திரும்பினர்.

சீனாவில் உள்ள ஓர் அமைப்பு இந்த வதந்தியை வெச்சுப் பணம் பார்க்க நினைத்தது. `உலகம் அழியறதுக்குள்ள உங்ககிட்ட இருக்கிற சொத்து, பணத்தையெல்லாம் எங்ககிட்ட ஒப்படைச்சு புண்ணியம் தேடிக்கோங்க'னு கிளப்பிவிட்டது. பொதுமக்கள்கிட்ட தேவையில்லாத பயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த 1,000 பேரை ஜெயிலுக்கு அனுப்பியது சீன அரசு. எவ்வளவு ட்ரிக்ஸா ஏமாத்துறாங்கே!

பேரழிவு வந்து கொடூரமாக சாகக் கூடாதுனு நினைச்சு முன்னாடியே சில பேர் தற்கொலைக்கு முயற்சி பண்ணியது சோகம். நம்மை யாராலேயும் அழிக்க முடியாதுனு பூமிக்குக் கீழே சுரங்கம் தோண்டி தப்பிச்சிடலாம்னு கைல கடப்பாரையை சில பேர் தூக்கிட்டுத் திரிஞ்சது கறுப்பு நகைச்சுவை!

- கருப்பு