Published:Updated:

``பிக் பாஸ் ஒரு மாயச்சூழல்... ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்தது!’’ - நடிகர் பரணி #LetsRelieveStress

``பிக் பாஸ் ஒரு மாயச்சூழல்... ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்தது!’’ - நடிகர் பரணி #LetsRelieveStress

``பிக் பாஸ் ஒரு மாயச்சூழல்... ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்தது!’’ - நடிகர் பரணி #LetsRelieveStress

``பிக் பாஸ் ஒரு மாயச்சூழல்... ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்தது!’’ - நடிகர் பரணி #LetsRelieveStress

``பிக் பாஸ் ஒரு மாயச்சூழல்... ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்தது!’’ - நடிகர் பரணி #LetsRelieveStress

Published:Updated:
``பிக் பாஸ் ஒரு மாயச்சூழல்... ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்தது!’’ - நடிகர் பரணி #LetsRelieveStress

பரணி... `நாடோடிகள்’ படத்தின் மூலம் பிரபலமானவர்... `பிக்பாஸ்’  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகம் முழுக்க அறியப்பட்டவர்... இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட முருக பக்தர்... அவர், தனக்கு மன அழுத்தம், மனஇறுக்கம் ஏற்பட்ட தருணங்களையும், அவற்றிலிருந்து மீண்ட வழிமுறைகளையும் குறித்து பகிர்ந்துகொள்கிறார் இங்கே...

``இன்னிக்கி பரபரப்பான பணிச்சூழ்நிலை, வாழ்க்கைச்சூழ்நிலைனு காலம் ரொம்பவே மாறிப்போயிடுச்சு. முக்கியமா, கார்ப்பரேட் ஆபிஸ்கள்ல வேலைச்சூழல் ரொம்ப இறுக்கமாயிடுச்சு. நல்ல சம்பளம்தான்... இல்லைனு சொல்லலை. அதுக்காக மூணு ஆள் வேலையை ஒரே ஆள் செய்யறதும், மூணு நாள்ல செய்யவேண்டிய வேலையை ஒரே நாள்ல செய்யறதும் ரொம்பக் கொடுமை. இதுதான் இன்னைக்கு இளையதலைமுறையினருக்கு ஸ்ட்ரெஸ்ஸா மாறி, பல வகையிலும் தொந்தரவு கொடுக்குது. 

விஜய் டி.வி-யில நிகழ்ச்சிகள் தயாரிக்கிற குழுவினர்கிட்டயே, `இவ்வளவு பரபரப்பா ஓடாதீங்க. அப்புறம் உடம்புக்கு ஆகாமப் போயிடும்’னு சொல்வேன். நேர காலம் தெரியாம 24 x 7-னு அவங்கபாட்டுக்கு வேலை பார்த்துக்கிட்டே இருப்பாங்க. டைரக்டர் டீம் குறிப்பிட்ட டைம்ல ஒரு எபிசோடைக் கொடுத்துடணும்னு வொர்க் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. ஒரு மனுசனுக்கு என்ன தேவை? நேரத்துக்கு சாப்பாடு, நேரத்துக்குத் தூக்கம். இந்த ரெண்டையுமே விட்டுட்டு அவங்கபாட்டுக்கு வேலை பார்த்துக்கிட்டே இருப்பாங்க. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவங்கன்னு கிடையாது, இன்னைக்கு மீடியாவுல இருக்குற பல பேர் இப்படித்தான் இருக்காங்க. அதே மாதிரி காவல்துறையில இருக்குறவங்களும் ஓய்வே இல்லாம வேலை பார்க்கிறதாலதான் ஓவர் ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளாகிக் கஷ்டப்படுறாங்க. 
மீடியாக்காரங்களுக்கு டார்கெட்... டி.ஆர்.பி-யை அதிகப்படுத்தணும்ங்கிற டென்ஷன்.  நாட்டுல எந்தவித அசம்பாவிதமும் நடக்கக் கூடாதுனு தங்களோட வாழ்க்கையை அசம்பாவிதமா ஆக்கிக்கிறாங்க.

நீங்க காலையில ஒரு வேலையா காரை எடுத்துக்கிட்டு கிளம்புறீங்க. அப்போ நீங்க வாங்கின கடனுக்காக கடன் கொடுத்தவர் திரும்பத் திரும்ப போன் பண்ணுறார்னு வைங்க. உங்களுக்கு அந்த நாளே வீணாகப் போயிடலாம். 
உங்களோட மைண்ட் செட்டே அன்னிக்கு முழுக்க சரியில்லாமப் போய், காரை எங்கேயாவது மோதிடக்கூட வாய்ப்பிருக்கு. 
உறவினர்களோ, நண்பர்களோ யாராக இருந்தாலும், நம்பி பழகினதுக்கு அப்புறம் அவங்களைச் சந்தேகப்படக் கூடாது. சூடான வார்த்தைகளைப் பேசும்போது, பேசுறவங்களுக்கு அந்த வார்த்தைகளோட வலி தெரியாம இருக்கலாம். ஆனா, அதைக் கேட்கிறவங்களுக்கு அந்த வார்த்தைகளின் சூடு ரொம்ப அதிகமா இருக்கும். அதனால எப்பவுமே பேசும்போது, ஒருத்தரை விமர்சனம் பண்ணும்போது ரொம்ப கவனமா இருக்கணும். 

அன்பு, அறம் இது ரெண்டையும் இரண்டு கண்களாக நினைச்சு,  வாழப் பழகினோம்னா, ஒருத்தருக்கொருத்தர் ஏற்படுற பழக்கத்துல மென்மையான பழகுதலும் புரிதலும் இருக்கும். அவங்களோட பேச்சுல கனிவான வார்த்தைகள் இருக்கும்.   
ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ஜாண் வயிறு, ஒரு கை சோறு, ஒரு நிமிட சந்தோஷம்... இவ்வளவுதான் வாழ்க்கை. உங்களுக்கு ஒரு புராஜெக்ட்ல ஒரு கோடி ரூபாய் கிடைச்சதுனா, அடுத்த புராஜக்ட்டையும் நீங்களே கைப்பற்றணும்னு நினைக்காதீங்க. அதை இன்னொருத்தருக்கு விட்டுக்கொடுங்க. அவர் அந்த புராஜெக்டை எடுத்து செய்யட்டும். அவரால உங்களுக்குத் தெரியாத பத்து, அம்பது குடும்பங்களுக்கு பொருளுதவி கிடைச்சு நல்லா இருப்பாங்க. 

இது ஒரு செயின் ரியாக்‌ஷன் மாதிரித் தொடர ஆரம்பிக்கும். அந்த வாய்ப்பை நீங்களே எடுத்துக்கும்போது நீங்க மேலும் டயர்ட் ஆகிடுவீங்க. அவன் மேலும் பசி உள்ளவனாக மாறுவான். இதுதான் இன்னிக்கு எல்லா விஷயங்கள்லயும் நடக்குது. சுயநலமா சிந்திச்சு சிந்திச்சு மனுஷன் மத்தவங்களுக்கும் தனக்கும் கேடு விளைவிக்க ஆரம்பிச்சிட்டான்’’ என்றவரிடம், `` `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில இருந்த 14 நாள் அனுபவம் எப்படி இருந்தது?’’ எனக் கேட்டோம். 


'பிக்பாஸ்’ நிகழ்ச்சிங்கிறது 'மாடல் சொஸைட்டி'தான். அதுவும் நம்ம சமூகமும் ஒண்ணுதான். எதையுமே நான் வெள்ளந்தியா பேசுற டைப். அங்கே இருந்தவங்கள்ல ஒரு சிலர் தவிர, பலர் போலியாகத்தான் பேசினாங்க... பழகினாங்க. அப்படிப்பட்ட இடத்துல ரொம்ப நாள் என்னால இருக்க முடியலை. அது ஒரு மாயச் சூழல். என்னோட கேரக்டருக்கு அது சரியா வரலை. 

பணம் கிடைக்குதுங்கிறதுக்காக எதையும் என்னால செய்ய முடியலை. தொடக்கத்துல ரெண்டு மூணு நாள் ஏதோ டூர் வந்த மாதிரி இருந்துச்சு. நாளாக ஆக ஒரே மாதிரி சூழ்நிலை. பார்த்த முகங்களையே பார்த்துப் பேசவேண்டிய சூழ்நிலை. ராத்திரியில சரியா தூக்கம் வரலை. இயல்புக்கு மாறாக இருக்க முடியலை. அதனால்தான் 14-வது நாள் நான் கமல் சார் கிட்ட சொல்லிட்டு வெளியில வந்துட்டேன். 

இப்போ சென்னைக்கு வர்ற பல இளைஞர்களுக்கு சென்னை நகரமே ஒரு `பிக்பாஸ்’ நிகழ்ச்சிக் கூடமாகத்தான் இருக்கு. தினமும் ஒரே மாதிரி வேலை. ஒரே மாதிரி வாழ்க்கை முறை. என்னைக்காவது நல்லா வருவோம்ங்கிற நம்பிக்கையிலேயே ரொம்ப மன அழுத்தத்தோட காலத்தை ஓட்டுறாங்க. அதுக்குப் பதிலாக, நம்ம சொந்த ஊர்லேயே பெரிய லாபம் இல்லைன்னாலும், சின்ன அளவுல ஒரு பிசினஸ் செஞ்சுக்கிட்டு அறத்தோட ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியா வாழலாம். 

`கெட்டும் பட்டணம் போ’னு சொன்ன காலமெல்லாம் மலையேறி போச்சு. இப்போ `கெட்டும் கிராமத்துக்குப் போ’னு சொல்ற நிலைமை வந்துடுச்சு. கிராமத்துல இயற்கையான நல்ல காத்து, நல்ல தண்ணி, நல்ல மண், சுகாதாரமான சூழ்நிலை, தாய் புள்ளைங்களோட சொந்த மக்கா மனுஷாளோட ஹேப்பியா இருக்கலாம். நகர வாழ்க்கையை தப்புனு சொல்லலை. அது அவங்க அவங்க மனோபாவம்... எடுத்துக்கிற விதம்னு ஒண்ணு இருக்கு. 

எனக்கு மதுரை, திண்டுக்கல், பழனினு எங்க ஊர்தான் சொர்க்கம்னு நான் நினைக்கிறேன். அடிப்படையில நான் முருக பக்தர். சின்ன வயசுலயே பக்தி வழிக்கு வந்துட்டதால, எனக்கு தேவைகள் பெரிசா கிடையாது. காத்துல மிதக்கிற சிறகு மாதிரி மனசைவெச்சுக்கிட்டு இருக்கேன். அப்புறம் எதுக்கு சார் நமக்கு மன அழுத்தம், மன இறுக்கம் இதெல்லாம் வருது?’’ என்று கூறி விடைகொடுத்தார்.