Published:Updated:

அமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்!

அமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
அமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்!

ஞா.சுதாகர்

அமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்!

ஞா.சுதாகர்

Published:Updated:
அமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
அமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்!
அமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்!

ஷாப்பிங் செய்வதில் இருக்கும் மகிழ்ச்சியைக் கெடுப்பதே, கடையில் நீண்ட கியூவில் நின்று பில் போடுவதுதான். வரிசையில் நிற்பது, சரியான சில்லறை தந்து வாங்குவது என நமது நேரத்தை அவை வீணடித்துவிடும். இது மாதிரியான  சம்பிரதாயங்கள் எவையும் இல்லாமல், நேரடியாக கடைக்குள் சென்று, உங்களுக்குத் தேவையான பொருட்களை அள்ளிப் போட்டுக்கொண்டு, அதற்கான பணம் மட்டும் ஆட்டோமேட்டிக்காக செலுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? இந்த ஆசைக்கான விடையாக அமைகிறது அமேசான் கோ (Amazon go).

 ஆப் மூலம் சர்வீஸ்!

பிரபல ஷாப்பிங் தளமான அமேசான் நிறுவனத்தின் புதிய கடைதான் இந்த அமேசான் கோ. இதுவரை நாம் பார்த்துவந்த சாதாரணக் கடைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது இது. ஷாப்பிங் அனுபவத்தின் வெர்ஷன் 2.0 என்றுகூட இதைச் சொல்லலாம். வரிசையில் நிற்காமல், பணம் செலுத்தாமல் உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்களே, எடுத்துச் செல்வதே இதன் அடிப்படை அம்சம்.

இந்தக் கடைக்குள் நுழைய வேண்டுமானால், முதலில் இலவச ஆப்பான அமேசான் கோ ஆப்பினை டவுன்லோட் செய்திருக்க வேண்டும். அதில் ஒரு அமேசான் அக்கவுன்ட் தொடங்கினால் போதும், அமேசான் கோ கடையில் பொருட்களை வாங்கலாம்.

  எப்படிச் செயல்படுகிறது?


தானியங்கி கார்கள், டீப் லேர்னிங், கம்ப்யூட்டர் விஷன் ஆகியவைகளில் பயன்படும் அதே தொழில் நுட்பம்தான் இதிலும் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறது அமேசான். ஒவ்வொரு பொருளும் கணினி மூலம் கண்காணிக்கப்படுகிறது. நீங்கள் கடைக்குள் செல்லும்போதே, உங்கள் போனை கடையின் நுழைவாயிலில் உள்ள டிடெக்டரில் காட்டிவிட்டுச் செல்ல வேண்டும். பின்பு நீங்கள் கடையின் உள்ளே சென்று எந்தப் பொருளை எடுத்தாலும், அது விர்ச்சுவல் கார்டு மூலம்  உங்கள் அமேசான் அக்கவுன்ட்டில் சேர்ந்துவிடும். ஒரு பொருளை எடுத்துவிட்டு, அதனை வேண்டாம் என அதே இடத்தில் திரும்பவும் வைத்துவிட்டால், உங்கள் விர்ச்சுவல் கார்டில் இருந்து அந்தப் பொருளை  நீக்கிவிடும். இப்படியே உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் ஷாப்பிங் செய்துவிட்டு, நீங்கள் கடையை விட்டு ஹாயாக வெளியேறலாம்.

அமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோதனை முறையில்..!

நீங்கள் செய்த ஷாப்பிங் மற்றும் பொருட்களின் அளவுகள் உங்கள் ஆப்பில் காட்டப்படும். அதற்கான பணமும் உங்கள் அமேசான் அக்கவுன்ட் மூலமாகவே தந்துவிடலாம். இவ்வளவுதான் ஷாப்பிங். தற்போது ஒரே ஒரு அமேசான் கோ கடையை மட்டுமே திறந்துள்ளது அமேசான். அந்தக் கடை வாஷிங்டனில் இயங்கிவருகிறது.

முதலில்  தனது பணியாளர்களுக்கு என மட்டும் சோதனை முறையில் இந்தக் கடையினை திறந்துள்ளது அமேசான். வரும்  2017-ம் ஆண்டில், இதனை மக்களுக்கும் திறந்துவைக்க இருக்கிறது. இதன் வெற்றியை அடுத்து இன்னும் பல கடைகளை அமேசான் திறக்கும் எனச் சொல்லப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் இயங்கிவரும் இந்த ஸ்டோரில் பேக்கரிப் பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை மட்டுமே விற்பனைக்கு வைத்துள்ளது அமேசான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism