Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”

அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”
அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”

டிஜிட்டல் கச்சேரி

‘`மனமன மென்டல் மனதில்... தன தன தானேனானா... தக்கலக்க தக்கலாலலா... தனனன்னன... ஓகே ஜானு!”

‘`இனியாம்மா, ‘ஓகே கண்மணி’ பாட்டை ஏம்மா இப்படி கொலை பண்ணிட்டு இருக்கீங்க?!’’

‘`ஹம்ம ஹம்ம ஹம்மா... ஹேஹே... ஹம்மா... ஹம்மா... ஹம்ம ஹம்ம ஹம்மா...”

‘`ஏய் அனு,  இந்த இனியா பொண்ணுக்கு ஏதோ ஆகிடுச்சு.  ‘பம்பாய்’ பாட்டை இப்ப எதுக்கு ஹம் பண்ணிட்டு இருக்க?!’’

‘`ஏம்பா, என்னைக் கொஞ்சம் நிம்மதியா பாட விடமாட்டீங்களா!”

அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”

‘`பாடுறதெல்லாம் ஓ.கே. ஆனா, புரியாத மாதிரியே பாடுறியே, அதான்...’’

`‘சரி, மேட்டரைச் சொல்லிடுறேன். மணிரத்னத்தோட ‘ஓ காதல் கண்மணி’ படத்தை கும்பலா போய் பார்த்தோம்ல..?”

‘`மறக்க முடியுமா?! துல்கர் சல்மான்... ரஹ்மான்...’’

‘`அந்தப் படம் இப்ப இந்தியில ‘ஓ.கே. ஜானு’வா ரீமேக் ஆகியிருக்கு. ரொமான்டிக் ஹீரோ ஆதித்யாராய் கபூரும், ஷ்ரதா கபூரும் நடிச்சிருக்காங்க. அந்தப் படத்தோட பாடல்களைத்தான் பாடிட்டு இருந்தேன்.”

‘`ஆஹான்!”

‘`‘ஓகே ஜானு’ பாட்டோட விஷுவல் பார்த்தியா நீ? எவ்ளோ க்யூட் தெரியுமா! காத்துல கைய வீசிட்டு புல்லட்ல பறக்கிறதும், பொண்ணு தாறுமாறா வண்டி ஓட்டுறதும்னு, கெமிஸ்ட்ரியில பின்னி எடுத்திருக்காங்க!’’

‘`அதே படத்துல வர்ற ‘ஹம்மா ஹம்மா’ பாட்டு ‘பம்பாய்’ படத்துல வந்த ‘அரபிக்கடலோரம்’ பாட்டோட ரீமேக். ஏ.ஆர். ரஹ்மான் இசை... இன்னிசை!’’

‘`அதெல்லாம் சரிதான் இனியா... பாட்டைப் பாட்டா படிக்காம இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே... ஏன்?!’’

‘`ஆத்தி! `இ’னாவுக்கு ‘இ’னா போட்டு ரைமிங்கா பன்ச் பேசிக் கலக்கிட்டாங்களாம். சரிதான் போம்மா. எனக்குக் கொஞ்சம் சளி பிடிச்சிருந்தது... அதான்!”

‘`காத்து ச்சும்மா ஜில்லுனு அடிக்குதுல்ல... சளி, இருமல், தலைவலினு சுலபமா நோய்கள் தொற்றும் காலம். நாமதான் கவனமா இருக்கணும்.”

‘`ஆமாம்பா... நாம சாப்பிடுற உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து, நம்ம நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.”

‘`எங்க அம்மா இந்த விஷயத்துல ‘சூப்பர் மாம்’. வெயில் காலத்துக்கு ஏற்ற காய்கறிகள், பனிக்காலத்துக்கு ஏற்ற காய்கறிகள்னு, பருவநிலைக்கு ஏற்ற காய்கறிகளை சமையல்ல பயன்படுத்துவாங்க. இஞ்சி, மிளகு, பூண்டுனு நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய, அதே நேரத்தில் மருத்துவப் பயன்பாடு கொண்ட உணவுப் பொருட்கள்தான் அவங்க தேர்வு!”

அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”

‘`ஓ... அதான் உன் ஹெல்த் சீக்ரெட்டா!”

‘`சரி, நியூ இயர் கொண்டாட்டத்துக்கு காலேஜ்ல புடவை கட்டிட்டு வரலாம்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்லியிருக்காங்களே... எந்தப் புடவை கட்டுறதா முடிவு பண்ணியிருக்கீங்க?”

‘`எனக்குதான் புடவையே கட்டத் தெரியாதே?! ஆனா, ஒரு ஆர்ட்டிகிள் படிச்சேன். அதுல புடவை கட்டுற நுணுக்கங்களுக்கு டிப்ஸ் கொடுத்திருந்தாங்க...”

‘`வழக்கம்போல ஷேர் பண்ணு!’’

‘`அனு... ஷேரிங்னு சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. பக்கத்து வீட்டுப் பையன் ஷ்யாம், ரொம்பக் குறைவா மார்க் வாங்கிட்டான்னு, அவங்க அம்மா ரொம்ப அடிச்சிருக்காங்க. பாவம் அவன் அழுதுட்டே வந்து என்கிட்ட சொன்னான். எனக்கு செம கோபம் வந்துடுச்சு...’’

`‘கோபம் வந்ததும் என்ன பண்ணின?”

‘`அந்தப் பையனோட அம்மாவுக்கும் ஒரு ஆர்ட்டிகிள் ஷேர் பண்ணிட்டேன்!’’

‘‘ஹாஹாஹா! என்ன ஆர்ட்டிகிள் அது?!”

‘`பேரன்டிங் ஆர்ட்டிகிள் டியர்! ‘சூப்பர் பெற்றோர் ஆக என்ன செய்யலாம்’னு ஒரு கட்டுரை.”

‘`அப்படியே நம்ம அம்மா, அப்பாவுக்கும்கூட ஒரு லிங்க் அனுப்பி வைப்போம்!”

‘`சென்ட்!”

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”

`ஓகே ஜானு'... பாட்டு கேட்கலாமா?!
http://bit.ly/2hDGw4J

அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”

சளி, இருமல் இல்லாமல் வாழ இதெல்லாம் சாப்பிடுங்க!
http://bit.ly/2h7EOVi

அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”

நளினமாகப் புடவை கட்டுவது எப்படி?
http://bit.ly/2hijx09

அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!”

சூப்பர் பெற்றோராக என்ன செய்யலாம்?
http://bit.ly/2h7P2Fr

அடுத்த கட்டுரைக்கு