Published:Updated:

``ப்ளீஸ்... 'காலா' பத்தி பேச எனக்கு இப்போ நேரமில்லை!’’ - பாரிசாலன்

``ப்ளீஸ்... 'காலா' பத்தி பேச எனக்கு இப்போ நேரமில்லை!’’ - பாரிசாலன்
``ப்ளீஸ்... 'காலா' பத்தி பேச எனக்கு இப்போ நேரமில்லை!’’ - பாரிசாலன்

``ப்ளீஸ்... 'காலா' பத்தி பேச எனக்கு இப்போ நேரமில்லை!’’ - பாரிசாலன்

'காலா'வுக்கு அடுத்தபடியாக, இன்று சோஷியல் மீடியாவில் வைரல் மெட்டீரியலாக இருந்தது 'சாலா' தான். ஆம். `பாரிசாலன் தாக்கப்பட்டார்!' பாரிசாலனை தெரியாத ஃபேஸ்புக் சமூகம் ஒரு பாவப்பட்ட சமூகமாகவே நம்மைப் பார்க்கிறது. பாரி சாலனின் இன்றைய லைவ் வீடியோ தான்  வைரல் டாபிக். காலா வெற்றியைத் தடுப்பதற்காகவே இலுமினாட்டிகளின் சதியாக இன்று பாரிசாலனின் வீடியோ வெளிவந்திருக்குமோ என்கிற அளவில் ஃபேஸ்புக் வாசிகள் அலசி ஆரய்ந்துகொண்டிருக்க, டூவீலர் சர்வீஸ் சென்டருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் இருந்த பாரிசாலனுடன் ஒரு மின்னல் வேக பேட்டி...

 `` என்ன ஆச்சு பாரிசாலன்...?''

``பைக் டிரிப் போகலாம்னு முடிவெடுத்து போறப்ப தான் வண்டியில் சின்ன பிரச்னை இருக்குன்னு  கடந்த மே மாசம் 26-ம் தேதி வேலூர்ல இருக்குற  பஜாஜ் ஷோரூம்ல விடியற்காலைல சர்வீசுக்கு விட்ருந்தேன். இரண்டு வாரம் ஆன பின்னாலயும் வண்டிய பத்தின எந்தத் தகவலும் இல்ல... அப்போ வண்டி என்னாச்சுனு ஷோரூமுக்கு போன் பண்ணி கேட்டா, வண்டிக்கு ஏழாயிரம் பில்லு போட்டு வச்சுருக்காங்க. என்ன ஏதுன்னு ஒழுங்காவே பதில் சொல்லமாட்றாங்க...  வாரன்டி கேட்டாலும் அதெல்லாம் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க.. உடனே  எம்.டிக்கு போன் பண்ணிச் சொல்லி ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆகிருச்சு. நேருல வந்து பேசி சரி பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க...

இன்னைக்கு சர்வீஸ் சென்டருக்கு ஃப்ரெண்டோட போனேன். `நீங்கதான் போன்ல பேசுன ஆளா?'ன்னு கேட்டு ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போனாங்க... பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பா மாறிடுச்சு... நான் ஒரு ஆளு... என்னய சுத்தி 25 பசங்க  அடிச்சாங்க... வீடியோ எடுத்த என்னோட ஃப்ரெண்டு போனையும் பிடிங்கிட்டாங்க... பார்த்திருப்பீங்களே ரத்தம் வந்திடுச்சு!''

``ஒரு கஸ்டமருக்கும் , ஒரு சர்வீஸ் சென்டருக்கும் உள்ள பிரச்னையை போயி தமிழர் - தெலுங்கர் பிரச்னையாக்க முயற்சி பண்றீங்களே?''

``நீ எப்படிடா இப்படியெல்லாம் பேசலாம்னு சொல்லிச் சொல்லியே அடிச்சாங்க. அவங்க எல்லாம் என்னோட வீடியோவ பார்த்துருக்காங்கன்னு நெனைக்கிறேன்... ஆமாங்க இது திட்டமிட்டே அடிச்ச மாதிரி தான் இருக்கு... 

``இப்போ பிரச்னை எந்த அளவுல இருக்கு? உங்களுக்கு ரொம்ப காயமா?''

``என்னங்க இப்படி கேட்குறீங்க.. 25 பேரு  சேர்ந்து அடிச்சுருக்காங்க... காயமான்னு கேட்குறீங்க.. வாய தொறக்க முடியலீங்க... பிரச்னை இப்போ வேலூர் வடக்கு போலீஸ்ஸ்டேஷன்ல இருக்கு. பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு.''  என்றார் உணர்ச்சிவசப்பட்டவராய்.

``காலா ரிலீஸ், அதை திசை திருப்புற விதமா தான் பாரிசாலன் மீதான தாக்குதல் வீடியோன்னு இதுக்கு பின்னாடி இல்லுமினாட்டி சதி இருக்கிறதா பேசிக்கிறாங்களே...?''

`` இல்லைங்க காலா பத்தி பேச எனக்கு இப்போ நேரமில்லை...மனசும் இல்லை. சதி பத்தி எல்லாம் எதுவும் சொல்லலை''

``சரி, தமிழ்நாட்டோடா தற்போதைய அரசியல பத்தி என்ன நினைக்கிறீங்க...?''

``அதெல்லாம் இப்போ பேசுற ஐடியால நான் இல்லங்க..!'' என சொல்லிக்கொண்டே அழைப்பை துண்டித்தார்.

பாரிசாலன்  சொன்ன குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க குறிப்பிட்ட அந்த ஷோருமை தொடர்புகொண்டு பேசியபோது அவர்கள் தரப்பில் சொன்ன பதில்கள்:

 `` பாரிசாலன் வண்டிய சர்வீஸுக்காகத்தான் விட்டாரு... லோக்கல் இன்ஜின் ஆயில வண்டிக்கு போட்டு வண்டிக்கு பிரச்னை ஆயிருச்சு. இத எல்லாமே அவர்கிட்ட சொல்லிட்டுதான் வேலை பார்த்தோம். அதுக்கு பில் ஏழாயிரம் ரூபா வந்துச்சு,,.. லோக்கல் ஆயில் போட்டதால வாரண்டி கிளைம் பண்ண முடியாதுன்னு சொன்னதுக்கு. எனக்கு வாரண்டி வேணும்னு அடம்பிடிச்சாரு.

இப்படி வாக்குவாதத்துல போயிட்டிருந்த நேரத்துல தான், நைட் டைம்ல ஆஃபீஸுக்குப் போன் பண்ணி இங்க வேலை பார்க்கிற பொண்ணுங்களை தகாத வார்த்தைகள்ல திட்ட ஆரம்பிச்சாரு. இதுக்கு எல்லாத்துக்கும் எங்ககிட்ட ஆதாரம் இருக்கு... இது மட்டுமில்லாம அவர்தான் முதல்ல  கை வச்சாரு. அதுக்கான சிசிடிவி ஃபுட்டேஜும் எங்ககிட்ட இருக்கு. அதவெச்சுதான் ஸ்டேஷன்ல கம்ளைன்ட் பண்ணி ரிமாண்ட் பண்ணச் சொல்லி கேட்டிருக்கோம்.

இரண்டு பேருக்குள்ள நடக்குற பெர்சனல் பிரச்னையெல்லாம்  அவரு தமிழர் - தெலுங்கர் பிரச்னைங்கிற அளவுக்கு ஒரு மனுஷன் எப்படித் தான் யோசிக்கிறார்னு தெரியலைங்க... முடியலைங்க!'' என்றும் சொல்லி முடித்தனர்

  என்ன ஒரு இலுமினாட்டி சதி!

அடுத்த கட்டுரைக்கு