Published:Updated:

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்
நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

பிரீமியம் ஸ்டோரி
நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

வீன ஓவிய உலகின் தனித்துவமான அடையாளங்களில் ஒருவர், ஆதிமூலம். அவரது மகனான ஓவியர்

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

அபராஜிதன் உள்ளிட்ட கலை ஆர்வலர்கள் இணைந்து உருவாக்கியது, ‘ஆதிமூலம் ஃபவுண்டேஷன்.’ “லாப நோக்கமற்ற ஒரு விரிவான பண்பாட்டு கலைச் செயல்பாட்டுக் களமாக இதை நாங்கள் கருதுகிறோம்’’ என்கிறார் அபராஜிதன்.

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

“இந்திய அளவில் நவீன ஓவியத்துக்கும் சமூகத்துக்கும் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியிருக்கிறது, ‘சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி.’ சிந்தனை அளவிலும் செயல் அளவிலும் பல ஆளுமைகள் இந்தப் பெரும் பயணத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். இதன் வரலாற்று முக்கியத்துவம் இன்னும் மக்களிடம் முறையாகக் கொண்டுசேர்க்கப்படவில்லை.

இதை மனதில்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 5-ம் தேதி அன்று ஆதிமூலம் ஃபவுண்டேஷன் சார்பில்,

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

கல்லூரியின் மகத்தான ஆளுமைகளை நினைவுகூரும்விதமாக நிகழ்வுகளை நடத்திவருகிறோம். ஆதிமூலம், தேவி பிரசாத் ராய் சௌத்ரி, கே.ராமானுஜம், எஸ்.தனபால் போன்ற பல கலை ஆளுமைகளின் படைப்புகளைக் காட்சிப்படுத்துவது, ஆவணப்படுத்துவது, நூலாக்கி வெளியிடுவது, அவர்களது பங்களிப்பின் முக்கியத்துவம் அறிந்த அறிஞர்களை, படைப்பாளிகளை நிகழ்வில் பேசச் செய்வது... என இதற்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்துவருகிறோம். அண்மையில் காலமான சிற்பி சி.தட்சிணாமூர்த்தி பற்றி இப்போது ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

இதுபோன்ற செயல்பாடுகளின் இன்னொரு முகமாகத்தான் இந்த 2017-ம் ஆண்டுக்கான ஓர் அழகிய நாட்காட்டியை உருவாக்கி வெளியிடுகிறோம். தமிழ் இலக்கியத்தின் பெருமித அடையாளங்களான இலக்கிய ஆளுமைகள் பலரை ஆதிமூலம் வரைந்திருக்கிறார். காலத்தில் கலந்துவிட்ட எத்தனையோ ஆளுமைகள் அவரது கோட்டோவியங்களில் இன்னும் ஜீவன் ததும்ப வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். லா.ச.ராமாமிர்தம், உ.வே.சாமிநாதையர், செல்லம்மாவுடன் பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, க.நா.சுப்பிரமணியன், தி.ஜானகிராமன், நகுலன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், சா.கந்தசாமி, ஆத்மாநாம் என்கிற வரிசையில், பல்வேறு சமயங்களில் பல்வேறு பயன்பாடுகளுக்காக ஆதிமூலம் வரைந்த 13 ஓவியங்களைப் பயன்படுத்தி இந்த நாட்காட்டியை உருவாக்கியிருக்கிறோம்.

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

இதில் இடம்பெற்றுள்ள இலக்கிய ஆளுமைகளின் பட்டியல் தேர்வு, ஆதிமூலத்தினுடையது அல்ல;

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

எங்களுடையது. இதில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இருவருடனும் அவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. மற்ற ஆளுமைகளுடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் இல்லை எனினும், அவர்களைப் பெரிதும் மதித்தார்; மிகவும் நேசித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களை வரைவது தனது கடமை என்று நம்பினார். எண்பதுகளில், தொண்ணூறுகளில் கலை இலக்கியம், பண்பாடு, அரசியல் எனத் தீவிர உரையாடல்களை சமூகத்தளத்தில் தோற்றுவித்த சிற்றிதழ்களுக்கு பிரதான முகமாக இருந்தவை, ஆதிமூலத்தின் ஓவியங்களும் எழுத்துகளும். பெரும்பாலான இதழ்களின் பெயர்கள், அவரின் கைப்பட எழுதியவைதான். ஒரேயொரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைத் தவிர, ஆத்மாநாமின் நினைவாக நம்மிடம் இருக்கும் ஒரே கோட்டோவியம், இந்த நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளது.

ஆதிமூலத்திடம் ஒரு முக்கியமான குணம் உண்டு. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் போன்ற விரிவான வாசகத்தளம் கொண்ட இதழ்களையும் ‘ழ’, ‘கசடதபற’ போன்ற குறைவான (அதே சமயம்) தீவிர வாசகர்கள் கொண்ட சிற்றிதழ்களையும், கவிதை நூல்களையும் அவர் ஒன்றாகவே பாவித்தார். எந்தப் படைப்புக்கும் அவர் தரும் கவனத்தை, சிரத்தையைக் கூட்டியதோ, குறைத்ததோ இல்லை. இந்த நாட்காட்டியில் உள்ள ஓவியங்கள் பல்வேறு காலகட்டங்களில் எவ்விதத் திட்டமிடல்களும் இல்லாமல் வரையப்பட்டவை என்றாலும், அனைத்திலும் ஒரு பொதுத்தொனி இயல்பாகவே கூடிவந்திருக்கிறது. குறிப்பாக, ஒவ்வோர் ஓவியத்திலும் குறிப்பிட்ட ஆளுமைகளை தனது தனிப்பட்ட பழக்கத்தின் மூலமாகவும் அவர்களது

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

படைப்புகளின் வழியாகவும் என்னவாக உள்வாங்கிக்கொண்டாரோ, அதை அவர்களது தனிப்பட்ட இயல்பு மற்றும் படைப்பு ஆன்மா குறையாமல், தனது கோடுகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாட்காட்டியில் முக்கியமான எழுத்தாளர்களின் பிறந்த நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தந்த மாதங்களில் தொடங்கப்பட்ட சிற்றிதழ்கள் குறித்த சிறு குறிப்பும் தரப்பட்டுள்ளது. இதை ஒரு ‘நாட்காட்டி’ என்று சொல்வதைவிட, ‘தமிழின் பெருமித முகங்கள் இடம்பெறும் ஓர் ஓவிய ஆவணம்’ என்று சொல்ல வேண்டும். நம்மால் முடிந்ததைச் செய்வோம்!” என்று நம்பிக்கையோடு சிரிக்கிறார் அபராஜிதன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு