Published:Updated:

'ஃப்யூசன் ஆடைகள், வெரைட்டி டிசைன், மஞ்சள் நிறம்!' - கீர்த்தி சாந்தனுவின் ஃபேஷன் பக்கங்கள்

'ஃப்யூசன் ஆடைகள், வெரைட்டி டிசைன், மஞ்சள் நிறம்!' - கீர்த்தி சாந்தனுவின் ஃபேஷன் பக்கங்கள்
'ஃப்யூசன் ஆடைகள், வெரைட்டி டிசைன், மஞ்சள் நிறம்!' - கீர்த்தி சாந்தனுவின் ஃபேஷன் பக்கங்கள்

குழந்தைத்தனமான பேச்சு, க்யூட் ரியாக்‌ஷன்ஸ், ஸ்டைலிஸ் ஆடை எனத் தனக்கென தனி அடையாளம் வைத்திருப்பவர், விஜே கீர்த்தி சாந்தனு. தன்னுடைய வார்ட்ரோப் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

குழந்தைத்தனமான பேச்சு, க்யூட் ரியாக்‌ஷன்ஸ், ஸ்டைலிஸ் ஆடை எனத் தனக்கென தனி அடையாளம் வைத்திருப்பவர், வீ.ஜே. கீர்த்தி சாந்தனு. தன்னுடைய வார்ட்ரோப் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

டிரை அண்டு டிரெண்டு:

"நான் ஒரு ஃபேஷன் டிசைனர். ஆடைகள் விஷயத்தில் ரொம்பவே கவனமா இருப்பேன். புதுசு புதுசா டிரை பண்ணால்தானே யுனிக்கா இருக்கும். எனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொண்டேன். புடவை என்றால், பேட்டர்ன் பிளவுஸ், கோல்ட் ஷோல்டர், ஹாஃப் ஷோல்டர் என வெரைட்டியாகக் காட்டுவேன். வெஸ்டர்ன் டிரஸ் என்றால், எப்போதும் மிக்ஸ் மேட்ச். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும். எனக்கு டிரெஸ்ஸிங்கில் ஆர்வம் அதிகம். ஒரே மாதிரியான டிரெஸ் பண்றது பிடிக்காது. புதுசு புதுசா மிக்ஸ் மேட்ச் செய்வேன். சிலர், தனக்கு இந்த டைப் ஆடைகள் மட்டுமே செட் ஆகும்'னு சொல்லிப்பாங்க. நான் அப்படி எந்த வரைமுறையும் வெச்சிருக்கறதில்லே. அதனால்தான், சேனலில் வரும் ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு தனி ஸ்டைலில் கலக்கறேன்.

ஃப்யூசன் ஆடைகள்:

"என் உடல்வாகுக்கு டிரெண்டி, டிரெடிஷனல் இரண்டுமே செட் ஆகும். செல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பவோ, எபிசோடுகளுக்கு ஏற்பவோ தேர்வுசெய்து போட்டுப்பேன். ஃப்யூசன் டைப் ஆடைகள் என் ஃபேவரைட். அதில் நான் இன்னும் ஸ்டைலிஷா தெரிவேன். சில ஆடைகள் அணியும்போது வெட்கமாக இருக்கும். நமக்கு செட் ஆகுமா என்ற தயக்கம் இருக்கும். ஆனால், அதற்குப் பொருத்தமான அக்ஸசரிஸ், ஹேர்ஸ்டைல், மேக்கப் என மாறினால் மாஸ் லுக் கிடைக்கும். அதனால், எந்த டிரெஸ்ஸை செலக்ட் பண்ணினாலும், முன்கூட்டியே அதற்கேற்ப ஹேர்ஸ்டைலில் ஆரம்பிச்சு காலணி வரை மாற்றி செக் செஞ்சுப் பார்த்துப்பேன். அப்போதுதான்  பிளசன்ட் லுக் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் தயக்கமில்லாமல் வேலை செய்யலாம்.''

கலர் காம்போ:

"என் ஸ்கின்டோனுக்கு மாம்பழ மஞ்சள் நிறம் எடுப்பாக இருக்கும். எனக்கு பிளாக் அண்டு வொயிட் ஃபேவரைட். ஆனாலும், இன்டர்மீடியேட் கலர், நியான் கலர், பர்கண்டி கலர் என எல்லாத்தையும் மிக்ஸ் மேட்ச் செஞ்சு போட்டுப்பேன்.''

அத்தையின் ஃபேஷன் டிப்ஸ்:

"டிரெடிஷனல் ஆடைகளை செலக்ட் பண்றதில் என் அத்தை பூர்ணிமா பாக்கியராஜ் எனக்கு ரோல் மாடல். 1990 களிலே அவங்க ஒரு டிரெண்ட் செட்டர். அவங்ககிட்ட இருக்கும் வார்ட்ரோப் கலெக்ஷன்ஸ் வேற லெவல். டிரெடிஷன்ஸ் ஆடை போட்டுக்கும்போது என்ன டைப் பிளவுஸ் செட் ஆகும், என்ன மாதிரியான அக்ஸசரிஸ் நீட் லுக் கொடுக்கும் என அத்தையிடம் ஐடியா கேட்டு ஃபாலோ பண்ணி அசத்துவேன்.''

ஆன்லைன் ஷாப்பிங்:

"ஆன்லைனில் நிறைய வெரைட்டி இருக்கும். பார்க்கவே ஆசையாக இருக்கும். ஆனால், ஃபிட்டிங் சரியாக இல்லைன்னா, அதை ஆல்டர் பண்றதுக்கு நேரம் இருக்காது. அதனால், நேரடியாக மால்களுக்கே போய் டிரெஸ்ஸை வாங்கிட்டு வந்துடுவேன்.''

ஃபேவரைட் டிரெஸ்:

"சாந்தனு வாங்கிக்கொடுக்கிறது எல்லாமே என் ஃபேவரைட்தான். மால்களுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு, 'உனக்குப் பிடிச்சதை எடுத்துக்கோ. நீ திருப்தியா ஃபீல் பண்ணனும்'னு சொல்வார். நான் சில டிரெஸ்ஸை எடுத்துக் காண்பிச்சு, 'இதுல எது ஓகே?'னு கேட்டாலும், 'எதுக்குடா வம்பு. எல்லாமே நல்லா இருக்கு'னு சொல்லிடுவார். அப்புறம் என்ன? அவர் பர்ஸை காலி பண்ணிருவேன். சாந்தனுக்கு என் டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்பப் பிடிக்கும். 'நீட் லுக்கில் இருக்கேப்பா'னு அடிக்கடி சொல்வார். அவருக்கும் என்னையே டிரெஸ் செலக்ட் பண்ணச் சொல்வார். நான் வேற வேலையா இருந்தாலும் போனில் அனுப்பி, 'இந்த டிரஸ் ஓகேவா?'னு கேட்பார். கல்யாணமாகி இத்தனை நாளில் சாந்தனுகிட்ட எந்த ஈகோவும் இருந்ததைப் பார்த்ததில்லை. லவ் யூ சாந்தனு!

செலிப்ரிட்டி டிரெண்ட்:

"நயன்தாராவின் டிரெஸ்ஸிங் தேர்வு எனக்கு ரொம்பப் பிடிக்கும். நயன் அணியும் ஆடைகளுக்கு ஏற்ப அக்ஸசரிஸ்களை தேர்வுசெய்வார். அது கூடுதல் அழகில் இருக்கும்.''

அடுத்த கட்டுரைக்கு