கலாய்
Published:Updated:

கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!

கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!

கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!

கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!

`வீக் எண்ட் கொண்டாட் டத்துக்கு தியேட்டருக்குப் போலாமா, பார்ட்டிக்குப் போலாமா, கேர்ள் ஃப்ரெண்ட்டோடு டேட்டிங் போலாமா?' என்றெல்லாம் பிளான் பண்ணுவோம். `அதெல்லாம் எதுக்கு? வாங்க போட்டோ எடுக்கலாம்’ எனக் கூப்பிடு கின்றனர் `சென்னை வீக் எண்ட் க்ளிக்கர்ஸ்'.

“போட்டோ எடுக்கணும்னு ஆர்வம் இருக்குற யாரு வேண்டுமானாலும் இதில் கலந்துக்கலாம். வயது வரம்பு கிடையாது. காசு பணமும் கிடையாது!’' எனச் சொல்லும் வீக் எண்ட் கிளிக்கர்ஸ் குரூப் இப்போது ஏழாவது வருட புகைப்படக் கண்காட்சியை நடத்துகிறார்கள்.

‘`ஜாக்சன், மணிமாறன், துரைசாமினு மூணு பேரு ஆரம்பிச்ச குரூப் இது. இப்போ ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு இடம் தெரியுதுன்னா, அதை குரூப்ல போடலாம். இந்தவாரம் இங்கே போட்டோஸ் எடுக்கலாம்னு அதுல ஆர்வமா இருக்கிறவுங்க அந்த வாரத்தை அந்த ஏரியாவுல க்ளிக் பண்ண ஆரம்பிச்சுருவாங்க. சென்னையிலேயே நிறைய போட்டோ வாக்கர்ஸ் குரூப் இருக்காங்க. ஆனாலும் நாங்க இதை ஏழு வருடமா பண்ணிட்டு இருக்கோம். முதல் நாலு வருடத்துல குரூப்ல உள்ளவங்க எடுத்த போட்டோஸ்ல பெஸ்ட் போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து, வருடக்கடைசியில கண்காட்சி நடத்தினோம். அஞ்சாவது வருடத்துல வெளிமாநிலங்கள்ல இருந்து வர்ற போட்டோக்களையும் போட்டிக்குத் தேர்ந்தெடுக்குறோம்!’’ - இது குரூப் வாய்ஸ்.

கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!

‘`நான் கிராமத்துல இருந்து வந்த பையன். எனக்குப் போட்டோ எடுக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, மேற்கொண்டு எதுவும் தெரியாது. 2009-ல சென்னை வந்தப்போ இங்க இப்படி ஒரு குரூப் இருக்குன்னு கேள்விப்பட்டு சேர்ந்தேன். ஆரம்பத்துல கேமரா எதுவும் இல்லாம இவங்க என்ன பண்றாங்கனு தெரிஞ்சுக்கிறதுக்காகப் போனேன்.  போட்டோகிராஃபி பத்தின விஷயங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஷேர் பண்ணிக்கிட்டாங்க. இதன்மூலமா எனக்கும் கொஞ்சம் ஐடியா கிடைச்சது’’ என்கிறர் ‘வீக் எண்ட் க்ளிக்கர்ஸ்’ல் ஒருவரான நவீன் கெளதம்.

கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!

‘`நான் கிராஃபிக் டிசைனராக இருக்கேன். மூணு வருடத்துக்கு முன்னால என் ஃப்ரெண்ட் மூலமா இந்த குரூப்ல சேர்ந்தேன். சென்னை மட்டுமில்லாம, வெளி மாநிலங்களுக்கு `டிராவல் வாக்' போவோம். ஒரு தடவை கூடுவாஞ்சேரி பக்கத்துல உள்ள கிராமத்துக்குப் பத்து பேரா போயிருந்தோம். எல்லோரும் போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டோம். கொஞ்ச நேரத்துல ஒருத்தர் வீட்டுல இருந்து காபி போட்டு கொண்டு வந்தாங்க. `மதிய சாப்பாடு சாப்பிட்டுத்தான் போகணும்'னு இன்னொரு வீட்டுல இருந்து அழைப்பு. எங்களை அவங்க வீட்டு விருந்தாளியாவே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க!’’ என்கிறார் மற்றொரு போட்டோகிராஃபர் வில்வேஷ்.

கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!

‘`மாஸ் கம்யூனிகேஷன் படிச்சிக்கிட்டு இருக்கேன். இளங்கலை பண்ணும்போது இந்த குரூப் மெம்பர் அல்லாதோருக்கான ஒரு போட்டோகிராஃபி போட்டி நடத்தினாங்க. அதுல என்னோட போட்டோ செலக்ட் ஆகிருந்துச்சு. அப்புறம் நான் இந்த குரூப்புக்குள்ள வந்துட்டேன். வாராவாரம் கூட்டம் அதிகமா இருந்தாலும், ஹோலி பண்டிகை அப்போ இன்னும் அதிகமாகிடும். போன வருடம் ஹோலிக்கு செளகார்பேட்டை போயிருந்தப்போ, போட்டோ எடுத்த கொஞ்ச நேரத்துல ஹோலி கொண்டாட ஆரம்பிச்சிட்டோம். நிறைய புது மனிதர்கள், புதிய அனுபவம்னு ரொம்ப ஜாலியா இருந்துச்சு!’’ என்கிறார் பிரசாந்த்.

`எங்க குரூப்ல நீங்களும் கலந்துக்கணுமா? எந்த ஏரியாவுக்கு நாங்க போட்டோ எடுக்கப் போறோம்னு ஃபிளிக்கர் தளத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்' என்றனர். லின்க் இதோ : https://www.flickr.com/groups/c-w-c/

அப்புறமென்ன? கிளம்புங்க பாஸ்!

- ந.புஹாரி ராஜா