கலாய்
Published:Updated:

FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு

ங்கே மட்டுமல்ல உலகம் முழுவதும் ரியாலிட்டி ஷோக்கள் மீதான விமர்சனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அமெரிக்க நடிகையான மிஷா பார்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Dancing With the Stars ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். சில வாரங்களிலேயே அவர் எலிமினேட் செய்யப்பட இத்தனை நாள் அமைதி காத்தவர் திடீரென பொங்கிப் பொங்கல் வைத்திருக்கிறார். `அது பாப்புலாரிட்டிக்கான ஷோ. அங்கே திறமைக்கு எல்லாம் மரியாதையே இல்லை' என அனல் தெறிக்கிறது அவர் வார்த்தைகளில். # ஹேப்பி நியூ இயர் மேடம்!

FOREIGN சரக்கு

ஃபேஷன் இதழ்களின் அட்டைப் படங்களை ஒல்லி பெல்லி அழகிகள்தான் இதுவரை அலங்கரித்து வந்திருக்கிறார்கள். இந்தப் பலகால சம்பிரதாயத்தை உடைத்து முன்னணி ஃபேஷன் இதழான `வோக்' அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார் பிளஸ் சைஸ் மாடலான ஆஷ்லி கிரஹாம். `உடல் பருமனான பெண்கள் ஒதுக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. அதைத் தடுக்க என்னாலான முயற்சிகளைத் தொடர்ந்து எடுப்பேன்' என கான்ஃபிடென்ட் ஸ்டேட்மென்ட் விடுகிறார் ஆஷ்லி. # ப்ளஸ்ஸோ ப்ளஸ்!

FOREIGN சரக்கு

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மார்கட் ராபியின் ரசிகர்கள் கொஞ்சம் சோகம், கொஞ்சம் ஹேப்பி என காக்டெயில் உணர்ச்சிகளில் தவிக்கிறார்கள். பிரிட்டிஷ் இயக்குநரான டாம் அக்கர்லீயுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அதையும் அவர் இன்ஸ்டாவில் போட்டிருந்த படத்தில் தெரிந்த மோதிரத்தை வைத்துதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். `ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல' என்பதுதான் ரசிகர்களின் மைண்ட்வாய்ஸ்.  # விருந்தாவது வைங்க!

FOREIGN சரக்கு

செலிபிரிட்டிகள் தங்களுக்கு விருப்பமானவர்கள் மறைந்தால் அவர்களைப் பாராட்டி எழுதுவது வழக்கம். அந்த வரிசையில் சமீபத்தில் மறைந்த தன் முன்னாள் மாமனார் ஆலன் திக்கிற்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதியுள்ளார் பவுலா பேட்டன். `எனக்கு 15 வயதாகும் போதிருந்தே ஆலன் பழக்கம். அவரால் என் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் நிறைய நடந்திருக்கின்றன. அவரின் சிரிப்பைக் கண்டிப்பாக மிஸ் செய்வேன்' என உருக, ஆறுதல் சொல்லி வருகிறார்கள் ரசிகர்கள்.  # மீண்டு வாருங்கள்!

- ஃபாலோயர்