கலாய்
Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

பாம்பை வைத்துப் படம் காட்டி வரும் டி.வி சீரியலின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் நாயகிக்கும், இயக்குநருக்கும் லடாயாம். ஷூட்டிங்கில் ஸ்கிரிப்டைப் படித்துக்கொண்டிருந்தது இயக்குநருக்குப் பிடிக்காமல் போனதுதான் பிரச்னைக்குக் காரணமாம்!

• பூ நடிகை தொலைக்காட்சி பஞ்சாயத்துகளில் தலைகாட்ட ஆரம்பித்திருப்பதால், அவரை விமர்சிக்கும் பழைய நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ‘அவங்க  குடும்பப் பிரச்னையில் தலையிட இவங்க யாரு?’ என எதிர்க்குரல் கொடுப்பவர்கள் சீனியர்ஸ் ஐந்து பேராம்!

• ‘டைவர்ஸ் நடிகை' என்றே பெயர் வாங்கிவிட்டார் மில்க். சோகம் கொஞ்சமும் இல்லாமல், உற்சாகமாக பார்ட்டி உடைகளுடன் விழாக்களுக்கு ஆஜராவதைத் தாங்காத சில நடிகைகள்தான் திட்டமிட்டு இந்தப் பெயரைப் பரப்புகிறார்கள் என வருந்துகிறார் மில்க்.

• நிச்சயம் வரை சென்று திருமணம் நின்றபோது ஃபீலிங் மோடில் இருந்தாராம் நம்பர் நடிகை. அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய முறுக்குக் கம்பி ஹீரோ மீது மீண்டும் காதல் பூத்திருக்கிறது என்கிறார்கள். எங்கே போய் முடியுமோ எனப் புலம்பிக்கொண்டிருக்கிறார் நம்பரின் தாய்க்குலம்.

• காப்பி பேஸ்ட் இயக்குநரும் தளபதி நடிகரும் இணைந்த முதல் படத்திலேயே ஃபீல்ட் அவுட் காமெடியனிடம்தான் பேசினார்களாம். நான்கு கோடி கேட்கவே, தெறித்துவிட்டார் இயக்குநர். அதே கூட்டணி திரும்பவும் இணைந்தபோது, ‘கொடுக்குறதைக் கொடுங்க’ எனப் பம்மியிருக்கிறார் காமெடி.

• சமத்து நடிகைக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த சமயத்தில்தான் காதல் விஷயமும், கல்யாண விஷயமும் கசிந்தது. இப்போது அதைக் காரணம் காட்டியே தயாரிப்பாளர்கள் நழுவிவிடுவதால், அப்செட்டில் இருக்கிறார் சமத்து நடிகை.

• ஏன், எதற்கு என்றே தெரியாமல் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், மூலிகை வைத்தியம் மூலம் உடலைக் குறைத்து ஒல்லியாகும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம் மங்கல நடிகை.