கலாய்
Published:Updated:

ஹா(லிவு)ட் டைரி

ஹா(லிவு)ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹா(லிவு)ட் டைரி

ஹா(லிவு)ட் டைரி

ஹா(லிவு)ட் டைரி

‘தி அக்லி ட்ரூத்’, ‘கில்லர்ஸ்’, ‘27 ட்ரெஸ்ஸஸ்’ போன்ற படங்களில் நடித்த கேத்தரின் ஹிக்கில் ஹாட் பக்கங்களைத்தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்...

• சிறு வயதில் கேத்தரினின் சகோதரர் ஒரு விபத்தில் இறந்துவிட கடுமையான டிப்ரஷனுக்கு உள்ளானார். அதிலிருந்து அவரின் கடவுள் நம்பிக்கை தீவிரமானது. #ப்ச்!

ஹா(லிவு)ட் டைரி

• பிராணிகள் வளர்ப்பில் அவ்வ்வ்வ்வளவு ஆர்வம். நாய்கள், பூனைகள், குதிரைகள், ஆடுகள், கழுதைகள், கோழிகள் என வீட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள். #இது வீடு இல்ல... விக்ரமன் சார் செட்டு!

• வாஷிங்டனில் பிறந்த கேத்தரின் குழந்தைப் பருவத்திலேயே மாடலிங் செய்யத் தொடங்கிவிட்டார். #பிஞ்சு பியூட்டி!

ஹா(லிவு)ட் டைரி

• சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த கேத்தரினின் புகழை ‘க்ரேஸ் அனாடமி’ சீரியல் வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது. பல விருதுகளை வாங்கிக் குவித்தார். #க்ரேஸி கேர்ள்!

• மேக்ஸிம், எஃப்.ஹெச்.எம் போன்ற இதழ்கள் உலகின் ஹாட் பெண்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. #சாய்ஸே இல்லை!

ஹா(லிவு)ட் டைரி

• புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தவர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறார். #இப்போ இங்கே டிஸ்க்ளைமர் போட்டாகணுமே!

• பாடகரான ஜோஸ் கெல்லியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் 2007-ல் திருமணம் செய்துகொண்டார். #நலம் வாழ...!

ஹா(லிவு)ட் டைரி

• தென்கொரியாவில் இருந்து ஒரு குழந்தையையும், அமெரிக்காவில் இருந்து ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் கேத்தரின். #குழந்தை மனசு!

- ஃபாலோயர்