கலாய்
Published:Updated:

நாய்ச் செல்லங்கள்!

நாய்ச் செல்லங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாய்ச் செல்லங்கள்!

நாய்ச் செல்லங்கள்!

நாய்ச் செல்லங்கள்!

பிரியமான பிராணிகள் வரிசையில் எப்பவுமே முந்திக்கிட்டு முதல் வரிசையில் நிக்கறது நாய்தான். நம்ம தாத்தா காலத்துல இருந்தே நாய் என்றால் சுப்பிரமணிதான் ஞாபகத்துக்கு வரும். ஆனா இன்னைக்கு ஆலன்ல ஆரம்பிச்சு ப்ரூனோ வரை விதவிதமா வலம் வர்றாங்க. இவங்களையெல்லாம் வளர்க்கிறவங்க பண்ற அலப்பறை இருக்கே அய்யய்யோ... கண்ணைக் கட்டிக்கிட்டு வாங்க, காட்டுறேன்!

• ‘இது என்ன முருகேசா நா... நாய்தானே?’னு வார்த்தையை விழுங்கற அளவுக்குப் பயமுறுத்துற ஆள் உயர நாய் நம்ம வீட்ல வச்சிருந்தாலும், யாராவது நம்ம நாயைப் பார்த்து பயந்து நிற்கும்போது ‘ஒண்ணும் பண்ணாது. சும்மா குரைக்க மட்டும்தான் செய்யும்’னு நம்ம நாய்க்கு அவார்டு கொடுப்போம் பாருங்க. அது வந்தவங்களோட வயித்தெறிச்சலை இன்னும் அதிகமாக்கும்!

• நாம பொத்திப் பொத்தி வளர்க்கிற நாயைக் காலையில சங்கிலி கட்டி வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போகும் போது அப்படியே சிங்கத்தோட போருக்குப் போற மாதிரி இருக்கும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு!

நாய்ச் செல்லங்கள்!

• யாராவது ‘உன் நாய்க்கு என்ன சாப்பிடக் கொடுக்கிற இவ்ளோ கொலு கொழுன்னு இருக்கே’னு கேட்பாங்க. நாமளும் யோசிக்காம டிஸ்கவரில நாய்க்குக் கொடுத்த டிஸ் எல்லாம் ஒண்ணு விடாம அத்தனையும் அடுக்குவோம். அவங்களும் அதை நம்பிடுவாங்க. நம்ம நாய்க்குப் பழைய சோறு வைக்கிறதைத்தான் அவங்க பார்க்கப் போறாங்களா... இல்ல, அந்த நாய்கிட்டதான் கேட்கப்போறாங்களா! இன்னும் கொஞ்சநேரம் பேச்சு கொடுதீங்கன்னா, ‘நாங்க பயன்படுத்துற எல்லாப் பொருளும் நாய்க்குப் புடிக்கிறமாதிரிதான் ‘நாய்க்குட்டி’ படம் போட்டுத்தான் வெச்சுப்போம்’னு எக்ஸ்ட்ரா பிட்டு  சேரும்.! # தேவையா உங்களுக்கு?

• நம்ம பக்கத்து வீட்டுல இருக்கிற நாய் ஷேக் ஹேண்ட் கொடுத்தாலும் சரி, சொன்னதெல்லாம் அது கேட்கும்னு யாராவது நம்மகிட்ட சொன்னாலும் சரி... நம்ம நாய் கையில, கால்ல விழுந்தாவது அதைக் கத்துத் தர முயற்சி செய்வோம். பின்னே? சொசைட்டியில நமக்குனு ஒரு மரியாதை இருக்கில்ல?

நாய்ச் செல்லங்கள்!

• நாய்ப் பிரியர்களுக்கு வீட்டுல இருக்கிற நாய் மட்டுமல்ல, ரோட்டுல இருக்கிற நாய்ங்களும் பிரியங்கள்தான். எங்கேயாவது குளிர்ல நடுங்குறதைப் பார்த்தா, உடனே ரோடுன்னு கூட பார்க்காம, பிஸ்கட் வாங்கிப் போடுறது, கர்ச்சீப்ல கம்பளம் விரிக்கிறதுனு கெளம்பிடுவாங்க. #அப்படியே மானே, தேனேகூட சேர்த்துக்கோங்க பாஸ்!

நாய்ச் செல்லங்கள்!

• ‘ஆமாங்க... இதோட நான் எட்டு நாய் வளர்க்குறேன்னு’ சிலபேர் காலரைத் தூக்கிவிட்டு கெத்தா சொல்லும்போது, பேய் அறைஞ்ச மாதிரி ‘வீட்டுல ஒன்னும் சொல்லமாட்டாங்களா ஜி’னு கேட்பிங்க. ‘அதெல்லாம் கேட்பாங்க. எட்டு முறையும் வெளக்கமாத்து அடியும் வாங்கியாச்சு. இனி, ஒன்பதாவது தடவை ஒரு நாய் வாங்கும்போதும் அடி விழும்!’னு சொல்லும்போது, எங்களைப் போன்ற நாய்ப் பிரியர்களோட தன்னடக்கம் தெரியும்.

- நாகராணி கதிர்