கலாய்
Published:Updated:

உலக அழகின்னா இவ்ளோதான்யா!

உலக அழகின்னா இவ்ளோதான்யா!
பிரீமியம் ஸ்டோரி
News
உலக அழகின்னா இவ்ளோதான்யா!

உலக அழகின்னா இவ்ளோதான்யா!

உலக அழகின்னா இவ்ளோதான்யா!

லக அழகின்னு சொன்னாலே ஐஸ்வர்யா ராய் மட்டும்தான் நம்ம ஞபாகத்துக்கு வருவாங்க. உலக அழகிப் போட்டி குறித்து எம்புட்டு விஷயங்கள் இருக்கு தெரியுமா? அதில் கொஞ்சமே கொஞ்சம் இங்கே...

• மிஸ் வேர்ல்டு போட்டி 1951-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

• மிஸ் வேர்ல்டு போட்டியில் பங்குபெறும் ஒவ்வொருவரும் அந்த நாட்டின் அழகிப் பட்டத்தை வென்றிருக்க வேண்டும் என்பதுதான் தகுதி.

• சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த உலக அழகிப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட 117 நாடுகளின் அழகிகள் பங்குபெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்றவர்கள் அடுத்தடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.

உலக அழகின்னா இவ்ளோதான்யா!

• ‘உலக அழகி -2016’ பட்டம் வென்ற போர்ட்டோரிகோவைச் சேர்ந்த ஸ்டெஃபானி டெல் வாலிக்கு இப்போதுதான் 19 வயது நிறைவடைந்துள்ளது.

• இவர் நியூயார்க்கில் இருக்கும் பேஸ் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறை மாணவி. படித்துக்கொண்டே மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

• போர்டோரிகோவிலிருந்து உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது நபர் ஸ்டெஃபானி.

• இந்தியா சார்பில் கலந்துகொண்ட மிஸ் இந்தியா அழகி ப்ரியதர்ஷினி சட்டர்ஜி டாப் 20-க்குள் நுழைந்திருந்தாலும், கடைசிக்கட்டப் போட்டிகளில் வெளியேற்றப்பட்டார். 

• இதுவரை கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் தனது ரோல் மாடலாகத் தங்களின் தாய் இருப்பதாகக் கூறியுள்ளனராம்.

• 1994-ல் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராயையும் பலர் ரோல் மாடலாகக் கூறியுள்ளனர்.

உலக அழகின்னா இவ்ளோதான்யா!

• இந்தியா சார்பில் இதுவரை ப்ரியங்கா சோப்ரா, யுக்தா முகி, டயானா ஹைடன், ஐஸ்வர்யா ராய், ரெய்டா ஃபாரியா ஆகியோர் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளனர். சுஷ்மிதா சென் மற்றும் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றுள்ளார்கள்.

- விக்கி