கலாய்
Published:Updated:

டெக்மோரா

டெக்மோரா
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்மோரா

டெக்மோரா

டெக்மோரா

`மார்க் வீட்டு வேலைக்காரன்' -அப்படினு ஒரு டைட்டில் வெச்சுப் படமே எடுக்கலாம். அப்படி ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டு இருக்காரு ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலமா நமது கமெண்டுகளுக்கு ஏற்ப வேலை செய்யும் `ஜார்விஸ்' என்ற தானியங்கிக் கட்டுப்பாட்டு சேவைதான் அது. மனுஷன் நல்லா யோசிச்சு எழுதுன ப்ரோக்ராமுக்கு ஐயர்ன் மேன் வாய்ஸ் கொடுத்துருக்காரு. அது எப்படி வேலை செய்யும்ங்கிற ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டு தெறி காட்டி இருக்காரு மார்க்.

டெக்மோரா

`இதுவரைக்கும் டெக் உலகில் வந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்களில் இதுதான் பெஸ்ட்!' எனச் சொல்லும் அளவுக்கு ட்யூன் ஆகி இருக்கு ஜார்விஸ். அந்த வீடியோல நாம பார்க்குற விஷயம் ஒரு செகண்ட் நம்ம கண்ணுல சிட்டி ரோபோவைக் கொண்டு வந்து நிப்பாட்டுது. மார்க், `லைட்ஸ் ஆஃப்'னு சொன்னதும் வீட்டில் உள்ள எல்லா லைட்டும் ஆஃப் ஆகுது. காலையில எழுந்ததும் உங்க குழந்தையை எண்டெர்டெயின் பண்ணப் போறேன்னு சொல்லுது. இதுதவிர, மார்க் ஆபிஸ் கிளம்பும் போது அவர் எப்போதும் அணியும் ஒரே கலர் டி-ஷர்ட்டான ப்ரவுன் ட்-ஷர்ட்டைத் தூக்கி அடிக்குது. மொத்தத்தில், `வாட் எ மேன்'னு சொல்லுற மாதிரி அயர்ன் மேன் வாய்ஸ்ல மாஸ் காட்டுது இந்த ஜார்விஸ்!

டெக்மோரா

`தொழில்நுட்ப உலகின் புதிய முயற்சி இது!' என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள். இதைத் தயாரிக்க மார்க் கிட்டத்தட்ட 18 மாதங்கள் செலவழித்திருக்கிறாராம். இது எப்படி உருவானது என்ற விளக்க வீடியோ யூ-டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பாவம் மார்க் அவரது குடும்பத்தை பாடாய்ப் படுத்தியுள்ளார். முதலில் அயர்ன் மேன் வாய்ஸ் சின்க் ஆகாமல் வி.டி.வி கணேஷ் வாய்ஸ் மாதிரி கர கர குரலில் பேசி அவரது மனைவியை கடுப்பேத்தியிருப்பது வேற லெவல். சுருக்கமா சொன்னா, `இந்த ஜார்விஸ் என்ன சொன்னாலும் பதில் சொல்லும், சொன்ன வேலையைக் கரெக்டா செய்யும்!' என்கிறார் மார்க்.

எங்கே... அப்போலோ ஹாஸ்பிட்டல்ல 75 நாள் என்ன நடந்துச்சுனு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்!

- டெக்கி கய்