கலாய்
Published:Updated:

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

டிசம்பர் சீசனில் மேடைக் கச்சேரியில் அசத்தினாலும் சினிமாவிலும் தனது தனி முத்திரையைப் பதிக்கும் நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய பாடல்கள்தான் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள். சுதி மாறாமல் பதில் சொல்லுங்க பாஸ்.

1. தில்லானா மோகனாம்பாளின் நலந்தானாவைத் தனது ஸ்டைலில் போட்டார் ரஹ்மான். ரிப்பீட்டேஷன் வார்த்தையில் நித்யஸ்ரீ கேட்டதோ ஹை பிச்சிலும் ஹை. இந்நேரம் மனதில் பாட்டு சங்கமம் ஆகியிருக்குமே... என்ன பாட்டு பாஸ்?

2. ஒருபக்கம் வைரமுத்து தமிழோடு விளையாட மறுபக்கம் ரஹ்மான் இசைக்கருவிகளில் டிஜிட்டல் ஏற்ற கர்நாடிக் பாடலின் இன்னொரு முகத்தை உலகம் முழுவதும் காட்டினார் நித்யஸ்ரீ. உலக அழகியின் நடனத்துக்கு உலகம் மயங்கியது உண்மை. என்ன பாட்டு பாஸ்?

3. கம்பீரம் இவர் குரலில் மட்டுமில்லை. இந்தப்  பாட்டுக்கு நடனம் ஆடிய நடிகைக்கும்தான். சூப்பர்ஸ்டாருக்கு எதிராய் ஆடுவதும் பாடுவதும் சும்மாவா... போட்டி டான்ஸ் அல்ல. போட்டிப் பாட்டுதான். ரசிகனுக்கு டிஜிட்டல் பரதப் பாட்டு கிடைத்தது இப்படித்தான். என்ன பாட்டு பாஸ்?

4. படம் பேர் மட்டுமில்லை. பாட்டே புது வகையறாதான். வரிகளில் இருந்த ஆபாசம் உணர்ந்து பின்னாளில் நித்யஸ்ரீ மன்னிப்பு கேட்டதும் படத்திலிருந்து பாட்டை நீக்கியதும் வேறு கதை . ஆனால் இப்போதும் ஆடியோவில் விரும்பிக் கேட்கும் சவால் பாட்டு என்ன பாட்டு?

5. போர்வீரனை ஜப்பானில் இப்பட டைட்டிலாகச் சொல்வார்கள். மேடையில் பாடும் பாடலில் இரண்டுவிதமான குரலில் ஜாலம் செய்தார் நித்யஸ்ரீ. என்ன பாட்டுன்னு சொல்லுங்க?

6. படத்தில் மட்டுமில்லை. நிஜத்திலும் போட்டி போட்டுதான் பாடினார்கள் போல. சக பாடகி சுஜாதாவுக்கும் இவருக்கும் பாட்டிலேயே நடந்தது சண்டை. உலக நாயகனின் குரலுக்கும் சமாதானமாகவில்லை. எந்தத் தந்திரமும் பயன்படுத்தாமல் சொல்லுங்கள் என்ன பாட்டு என்று?

7. ஒரே வார்த்தைதான். பாட்டு முழுவதும் விதவிதமான சுருதிகளில் ஏறி இறங்கி வித்தை காட்டும். கூட சங்கர் மகாதேவனும் சேர்ந்தால் பாடலைக் கேட்டாலே பரவசம்தான். என்ன பாட்டு? பாடுங்க பார்க்கலாம்

- கே.கணேஷ்குமார்

விடைகள்:  1.சங்கமம் - செளக்கியமா, 2.ஜீன்ஸ் - கண்ணோடு காண்பதெல்லாம், 3.படையப்பா - மின்சாரக் கண்ணா, 4.நியூ - மார்க்கண்டேயா, 5.சாமுராய் - ஒரு நதி ஒரு பெளர்ணமி, 6.பஞ்ச தந்திரம் - வந்தேன் வந்தேன், 7.பார்த்தாலே பரவசம் - மன்மத மாசம்